நடிகை பாலியல் வன்கொடுமை - தயாரிப்பாளர் கைது

கேரளாவில் நடிகையை பாலியல் வன்கொடுமை செய்ததாக தயாரிப்பாளரும், நடிகருமான விஜய் பாப் கைது செய்யப்பட்டுள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Jun 27, 2022, 05:37 PM IST
  • பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டார் விஜய் பாபு
  • இவர் தயாரிப்பாளராகவும், நடிகராகவும் கேரள திரையுலகில் இருக்கிறார்
 நடிகை பாலியல் வன்கொடுமை - தயாரிப்பாளர் கைது title=

மலையாள திரையுலகில் முன்னணி தயாரிப்பாளராகவும், நடிகராகவும் இருந்தவர் விஜய் பாபு. சமீபத்தில் இவர் தயாரித்த படத்தில் நடித்திருந்த நடிகை ஒருவர், “படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி மயக்க மருந்து கொடுத்து தன்னை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டார். அதுமட்டுமின்றி, நிர்வாணமாக வீடியோ எடுத்து தன்னை மிரட்டுகிறார்” என புகார் அளித்தார்.

இந்தப் புகார் கேரள திரையுலகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் காரணமாக இவர் தயாரித்த ஹோம் படத்துக்கு அம்மாநில விருது கிடைக்கவில்லை.

Vijay Babu

அதுமட்டுமின்றி ஃபேஸ்புக் நேரலையில் உரையாடிய விஜய் பாபு, பாதிக்கப்பட்ட அந்த நடிகையின் பெயர் உள்ளிட்ட அடையாளத்தை பொதுவெளியில் அம்பலப்படுத்தினார்.

இதனையடுத்து நடிகையை பாலியல் வன்கொடுமை செய்ததாக விஜய் பாபு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் பாலியல் புகார் கூறிய பெண்ணின் பெயரை வெளியிட்டதால் விஜய் பாபு மீது மேலும் ஒரு வழக்கை போலீசார் பதிவு செய்தனர். 

விஜய் பாபு மீது மற்றொரு பெண்ணும் நடிகர் விஜய் பாபு மீது பாலியல் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அதன் பேரில் எர்ணாகுளம் காவல் துறையினரும்  விஜய் பாபு மீது வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து விஜய் பாபு துபாய் சென்றுவிட்டார்.

இதற்கிடையே விஜய் பாபுவுக்கு கேரள உயர் நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியது. இந்தச் சூழலில் எர்ணாகுளம் டவுன் தெற்கு காவல் நிலையத்தில் காலை 9.00 மணிக்கு விசாரணை அதிகாரிகள் முன்பு விஜய் பாபு ஆஜரானார். 

Vijay Babu

அப்போது படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி மயக்க மருந்து கொடுத்து தன்னை பலமுறை பலாத்காரம் செய்ததாக நடிகை கொடுத்திருந்த புகாரின் பேரில் நடிகர் விஜய் பாபுவை கேரள போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜூன் 27 (திங்கள்கிழமை) தொடங்கி ஜூலை 3ஆம் தேதிவரை காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரைக்கு விஜய் பாபுவை விசாரிக்கலாம் என விசாணை குழுவுக்கு அனுமதி அளித்தது.

மேலும் படிக்க | தங்கம் பாயும் நதி; மீன் பிடிப்பது போல் தங்கம் பிடிக்கும் ஜார்கண்ட் மக்கள்

ஆனால் அவர் சமூக ஊடகங்கள் மூலம் அவர் எந்த விதமான தாக்குதலிலும் ஈடுபடக்கூடாது. நீதிமன்றத்தின் அனுமதியின்றி அவர் கேரளாவை விட்டு வெளியேறக் கூடாது என்ற நிபந்தனையுடன் அவர் விடுவிக்கப்பட்டார். 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News