திருப்பதியில் ‘இந்த’ நாளில் விஐபி தரிசனம் ரத்து: TTD

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து, அக்டோபர் 5ம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரமோற்வம் நிறைவு பெறுகிறது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 15, 2022, 03:24 PM IST
  • திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
  • கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் 20ம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
  • திருப்பதி ஏழுமலையான் ஆலயம் உலகப் புகழ் பெற்ற ஒரு கோவிலாகும்.
திருப்பதியில் ‘இந்த’ நாளில் விஐபி தரிசனம் ரத்து: TTD title=

திருப்பதி ஏழுமலையான் ஆலயம் உலகப் புகழ் பெற்ற ஒரு கோவிலாகும். இங்கு இந்தியா மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வார்கள். இந்நிலையில், திருப்பதியில் செம்டம்பர் 20ம் தேதி  விஐபி தரிசனம் ரத்து என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து, அக்டோபர் 5ம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரமோற்வம் நிறைவு பெறுகிறது. இதனையொட்டி ஆலயத்தில் சுத்தம் செய்யும் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் 20ம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. 

இதனால், அன்றைய தினம் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதால் 19ம் தேதி எந்தவித முக்கிய பிரமுகர்களின் சிபாரிசு கடிதங்களும் பெறுவதில்லை என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. ஆண்டுக்கு 4 முறை கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடத்துவது வழக்கம்.  

உகாதி, ஆனிவார ஆஸ்தானம், பிரமோற்சவம், வைகுண்ட ஏகாதசிக்கு முந்தைய செவ்வாய்கிழமையன்று திருப்பதி ஆலயம் சுத்தம் செய்யப்படுகிறது. அவ்வாறு  20ம் தேதி காலை 6 மணி முதல் 11 மணி வரை கோயிலில் சுத்தம் செய்து மூலிகை கலவை கோயில் சுவர்களில் தெளிக்கப்படும். இதனால் அன்று 5 மணி நேரம் தரிசனம் ரத்து செய்யப்பட்டு காலை  11 மணிக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும் படிக்க | திருப்பதி தேவஸ்தானத்தில் வேலை வாய்ப்பு; கல்வித் தகுதி இதுதான் - உடனே விண்ணப்பியுங்கள்

உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா தொற்று காரணமாக 2 ஆண்டுகளாக தரிசனங்கள் மற்றும் சிறப்பு தரிசனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து தற்போது சில மாதங்களுக்கு முன்பு தேவஸ்தானம் திறக்கப்பட்டு பொது மக்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி கிடைத்தது. 

மேலும் படிக்க | காவாளம்: திருப்பதி உண்டியல் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள்

மேலும் படிக்க |  TTD: திருப்பதிக்கு காணிக்கையாக கிடைத்த பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் நிலை என்ன!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News