பாக்.,-க்கு செல்லும் நீரை தடுத்து நிறுத்த மத்திய அரசு முடிவு!

பாகிஸ்தான் பயங்கரவாதத்தை நிறுத்தாவிட்டால், இந்தியாவில் இருந்து பாக்கிஸ்தானுக்கு செல்லும் தண்ணீர் நிறுத்துவோம் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்!

Last Updated : May 9, 2019, 08:09 PM IST
பாக்.,-க்கு செல்லும் நீரை தடுத்து நிறுத்த மத்திய அரசு முடிவு! title=

பாகிஸ்தான் பயங்கரவாதத்தை நிறுத்தாவிட்டால், இந்தியாவில் இருந்து பாக்கிஸ்தானுக்கு செல்லும் தண்ணீர் நிறுத்துவோம் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்!

மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் நாடுமுழுவதும் சூடுபிடித்து வரும் நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நிதின் கட்காரி "இந்தியாவில் இருந்து 3 நதிகள் மூலம் பாகிஸ்தானுக்கு தண்ணீர் செல்கிறது எனவும், அவர்கள் பயங்கரவாதத்திற்கு அளிக்கும் ஆதரவை திரும்ப பெறாவிட்டால் இந்தியாவில் இருந்து செல்லும் தண்ணீரூ நிறித்திவோம்" எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தாங்கள் அதை தடுத்து நிறுத்த விரும்பவில்லை என குறிப்பிட்டு பேசிய அவர்., நீர் ஒப்பந்தத்திற்கு அடிப்படையே இந்தியாவும், பாகிஸ்தானும் அமைதியான உறவுடனும், நட்புடனும் இருக்க வேண்டும் என்பது தான். அது முற்றிலுமாக மறைந்து போய் விட்டது. அதனால் அந்த ஒப்பந்தத்தை நாம் பின்பற்ற தேவையில்லை எனவும் தெரிவித்தார்.

பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்க ஆதரவு அளித்து வருகிறது. பாகிஸ்தான் பயங்கரவாதத்தை நிறுத்தா விட்டால், பாகிஸ்தான் செல்லும் நதிநீரை நிறுத்துவதை தவிர நமக்கு வேறு வழியே இல்லை. அதனால் அதற்கான ஆரம்பகட்ட ஆய்வுப் பணிகளை இந்தியா துவங்கி உள்ளது. தடுத்த நிறுத்தப்படும் நதிகளின் நீர் அரியானா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களுக்கு செல்லும் எனவும் தெரிவித்துள்ளார்.

Trending News