கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: அன்று நள்ளிரவு நடந்தது என்ன? விசாரணையில் அந்த 4 டாக்டர்கள்!

Kolkata Doctor Rape And Murder Case: கொல்கத்தா பெண் ஜூனியர் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலைசெய்யப்பட்ட ஆக. 9ஆம் தேதி இரவு நடந்தது என்ன என சிபிஐ தரப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Aug 23, 2024, 09:21 PM IST
  • இதில் தற்போது 4 மருத்துவர்களிடம் உண்மை கண்டறியும் பரிசோதனை நடத்தப்படுகிறது.
  • மேலும் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷிடமும் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
  • நான்கு மருத்துவர்களின் வாக்குமூலங்களிலும் முரண்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: அன்று நள்ளிரவு நடந்தது என்ன? விசாரணையில் அந்த 4 டாக்டர்கள்! title=

Kolkata Doctor Rape And Murder Case Latest News: கொல்கத்தாவின் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவனையில் பயின்ற 31 வயதான முதுநிலை இரண்டாமாண்டு மாணவியும், ஜூனியர் மருத்துவரான பெண் கடந்த ஆக. 9ஆம் தேதி அன்று அரை நிர்வாண நிலையில், செயலற்று கிடப்பதை கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த மாணவி உயிரிழந்த நிலையில், மேற்கொள்ளப்பட்ட உடற்கூராய்வில் அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியானது. 

இதை தொடர்ந்து, கொல்கத்தா போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அந்த பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்ட கருத்தரங்கு கூடத்தில், கிடைக்கபெற்ற ப்ளுடூத் ஹெட்போன் மூலம் சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்தது. இதை தொடர்ந்து, சஞ்சய் ராய் (Sanjay Roy) கைது செய்யப்பட்டு விசாரணையில் உள்ளார். சிபிஐ இந்த வழக்கை தற்போது விசாரித்து வருகிறது. 

இந்த 4 மருத்துவர்களிடம் சிபிஐ விசாரணை

சஞ்சய் ராய் இந்த குற்றத்தை ஒப்புக்கொண்டுவிட்டதாக கூறப்பட்டாலும், இதில் வேறு பலருக்கும் தொடர்பிருக்கலாம் என்ற கோணத்தில் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதற்கு எவ்வித ஆதாரமும் இதுவரை கிடைக்காத நிலையில் விசாரணையை சிபிஐ தீவிரப்படுத்தி உள்ளது. அந்த வகையில் தற்போது, உயிரிழந்த பெண்ணுடன் பணியாற்றிய 4 பேரிடம் உண்மை கண்டறியும் பரிசோதனையை (Lie-Detector Test) மேற்கொள்ள சிபிஐ முடிவெடுத்துள்ளது.

மேலும் படிக்க | கொல்கத்தா கொடூரம்: குற்றவாளிக்கு மரண தண்டனை கூடாது... ஆதாரவாக வாதிடும் பெண் வழக்கறிஞர் யார்?

இவர்களின் வாக்குமூலத்தில் முரண்கள் தென்படுவதாக சிபிஐ தரப்பில் தகவல் கூறப்படுகிறது. அந்த பெண்ணுடன் சம்பவம் நடந்த அன்று நைட் ஷிப்டில் இருந்த முதலாமாண்டு முதுநிலை பயிற்சி மருத்துவர்கள், ஒரு அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் மருத்துவ பயிற்சியாளர் (Intern) ஆகிய நான்கு பேரிடம்தான் சிபிஐ இந்த பரிசோதனையை மேற்கொள்ள உள்ளது. இவர்கள் இந்த கொலையில் நேரடியாக ஈடுபடாவிட்டாலும், தடயங்களை அழிப்பதிலோ அல்லது வேறுவிதமான தொடர்போ இருக்கிறதா என்பதை உறுதி செய்யவே இந்த சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

கண்டெடுக்கப்பட்ட கை ரேகைகள்

பெண் ஜூனியர் மருத்துவர் கொலைசெய்யப்பட்ட இரவு நடந்தது என்ன என்பது குறித்த காலவரிசைப்படி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வெளியான தகவல்களை இங்கு காணலாம். ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு கட்டடத்தின் மூன்றாவது தளத்தில் உள்ள கருத்தரங்கு கூடத்தில்தான் சம்பவம் நடந்துள்ளது. 

போலீசார் அந்த அறையில் இருந்து இந்த நான்கு மருத்துவர்களில் இருவரின் கை ரேகையை கண்டெடுத்துள்ளனர். அன்றிரவு அந்த அறுவை சிகிச்சை நிபுணர் முதல் தளத்தில் இருந்து மூன்றாவது தளத்திற்கு செல்வது சிசிடிவியில் பதிவாகி இருக்கிறது. நள்ளிரவு 2.45 மணிக்குதான் மூன்றாவது தளத்திற்கு சென்றதாக அந்த அறுவை சிகிச்சை நிபுணர் விசாரணயில் கூறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த மருத்துவ பயிற்சியாளர் அன்றிரவு பாதிக்கப்பட்ட பெண்ணுடன் பேசியிருக்கிறார் என்பதும் சிபிஐ விசாரணையில் தெரியவந்தது. 

ஆக. 9 நள்ளிரவில் நடந்தது என்ன?

சம்பவம் நடந்த அன்று பாதிக்கப்பட்ட பெண்ணுடன், இரண்டு முதலாமாண்டு முதுநிலை மருத்துவர்கள் நடுராத்திரி அளவில் உணவு உண்டனர். அதன்பின் கருத்தரங்கு கூடத்திற்கு சென்ற அவர்கள் ஒலிம்பிக் தொடரில் நீரஜ் சோப்ராவின் ஈட்டி ஏறிதல் விளையாட்டை நேரலையில் பார்த்துள்ளனர். சுமார் 2 மணியளவில், அந்த இரண்டு முதுநிலை மருத்துவர்களும், பணியில் இருக்கும் மருத்துவர்கள் ஓய்வெடுக்கும் அறைக்கு (Sleep Room) திரும்பி உள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் கருத்தரங்கு அறையிலேயே இருந்துள்ளார். விசாரணையில் இருக்கும் அந்த மருத்துவ பயிற்சியாளர் தனது அறையிலேயே இருந்துள்ளார். சம்பவம் நடந்த கருத்தரங்கு அரங்கு, மருத்துவர்கள் ஓய்வெடுக்கும் அறை, மருத்துவ பயிற்சியாளர் அறை ஆகியவை மூன்றாவது தளத்திலேயே அருகருகே அமைந்திருக்கிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | கொல்கத்தா மருத்துவர் கொலை: கூட்டு பாலியல் வன்புணர்வா? ஏன் மரபணு சோதனை முக்கிய ஆதாரம்?

அதன்பின், காலை 9.30 மணியளவில் அந்த முதுநிலை மருத்துவர்களில் ஒருவர், அதாவது பாதிக்கப்பட்ட பெண்ணுடன் இரவு உணவு உண்ட ஒருவர் ஆண் மருத்துவர், காலையில் தனது பணியை தொடங்குவதற்கு முன் பாதிக்கப்பட்ட பெண்ணை பார்ப்பதற்காக சென்றிருக்கிறார். அப்போது தூரத்திலேயே அவர் அசைவற்று கிடப்பதை பார்த்து தன்னுடன் பணியாற்றுபவர்களிடமும், மூத்த மருத்துவர்களிடமும் தகவல் கொடுத்துள்ளார். அவர்கள் மருத்துவமனை நிர்வாகத்திற்கு தகவல் கூறியுள்ளனர்.

5 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை

இவையாவும் விசாரணையில் தெரியவந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றை உறுதிப்படுத்தவே இந்த நான்கு மருத்துவர்களிடமும், ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முன்னாள் முதல்வரான மருத்துவர் சந்தீப் கோஷ் ஆகியோரிடம் உண்மை கண்டறியும் சோதனையை மேற்கொள்ள  சிபிஐ முடிவெடுத்துள்ளது. 

சந்தீப் கோஷ் இந்த விவாகரத்தில் ஆரம்பத்தில் இருந்தே விசாரணை வளையத்தில் உள்ளார். இவர் பதவியை ராஜினாமா செய்தபின்னர், அவரை அங்கிருந்த இடமாற்றம் செய்து மேற்கு வங்க அரசு உத்தரவிட்டது பெரும் சர்ச்சையானது. இவர்களுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த நேற்றே சிறப்பு நீதிமன்றம் உத்தரவு வழங்கிவிட்டது. உண்மை கண்டறியும் சோதனையை நீதிமன்ற அனுமதி இல்லாமலும், சோதனை செய்யப்படுபவரின் அனுமதி இல்லாமலும் செய்ய மேற்கொள்ள இயலாது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | 150 கிராம் விந்தணு உடலில் இருந்ததா? கொல்கத்தா பெண் மருத்துவர் வழக்கு - வெளியான பரபர தகவல்
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News