டெல்லிக்கு சென்று பிச்சை எடுப்பது எனக்கு பிடிக்காது பிச்சை கேட்பதை விட இறப்பதே மேல் -சிவராஜ் சிங் சவுகான்.

BJP Shivraj Singh Chouhan Reaction: டெல்லிக்கு சென்று பிச்சை எடுப்பது எனக்கு பிடிக்காது. எனக்காக எதையும் கேட்பதை விட நான் இறப்பதே மேல். நான் மத்திய பிரதேசத்தில் தான் இருக்கிறேன். இங்கேயே தான் இருப்பேன். எங்கும் செல்லமாட்டார் -சிவராஜ் சிங் சவுகான்.

Written by - Shiva Murugesan | Last Updated : Dec 12, 2023, 03:41 PM IST
  • டெல்லிக்கு சென்று எனக்காக எதையும் கேட்பதை விட நான் இறப்பதே மேல் -சிவராஜ் சிங் சவுகான்
  • 18 ஆண்டுகள் தன்னை முதல்வராக ஆக்கியது பாஜக தான் -சிவராஜ் சிங் சவுகான்
  • மத்திய பிரதேசத்தின் புதிய முதலமைச்சராக மோகன் யாதவ் தேர்வு
டெல்லிக்கு சென்று பிச்சை எடுப்பது எனக்கு பிடிக்காது பிச்சை கேட்பதை விட இறப்பதே மேல் -சிவராஜ் சிங் சவுகான். title=

Shivraj Singh Chouhan News In Tamil: 18 ஆண்டுகளாக முதல்வர் பொறுப்பை வகித்து வந்த நிலையில், தற்போது சிவராஜ் சிங் சவுகானுக்குப் பதிலாக, மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் புதிய முதல்வராக மோகன் யாதவ் (Mohan Yadav)பெயர் அறிவிக்கப்பட்டு உள்ளது. இது மத்தியப் பிரதேச பாஜக இடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அடுத்து சிவராஜ் சிங் சவுகான் என்ன செய்வார்? அவரின் அடுத்தக்கட்ட நவடிக்கை என்ன? கட்சியில் அவருக்கான பொறுப்பு என்ன? என பல கேள்விகள் எழுந்துள்ளது.

டெல்லிக்கு சென்று பிச்சை எடுப்பது எனக்கு பிடிக்காது

இந்த நிலையில், சிவராஜ் சிங் சவுகான் டெல்லி சென்று கட்சித் தலைமையிடம் தனக்கென முக்கியமான பதவியை வழங்க வேண்டும் எனக் கேட்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், அனைத்து கேள்விகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், 'டெல்லிக்கு சென்று பிச்சை எடுப்பது எனக்கு பிடிக்காது. எனக்காக எதையும் கேட்பதை விட நான் இறப்பதே மேல். அதே நேரத்தில், நான் மத்திய பிரதேசத்தில் தான் இருக்கிறேன். இங்கேயே தான் இருப்பேன். எங்கும் செல்லமாட்டார்' எனக் கூறியுள்ளார்.

'எனக்காக எதையும் கேட்பதை விட இறப்பத மேல்'

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் முதல்வர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், மூன்று மாநிலங்களை சேர்ந்த மூத்த அமைச்சர்கள் டெல்லிக்கு வந்து உயர் அதிகாரிகளைச் சந்தித்தனர். நீங்களும் டெல்லி செல்வீர்களா? என சிவராஜ் சிங் சவுகானிடம் கேட்டபோது, 'எனக்காக எதையும் கேட்பதை விட இறப்பத மேல்' என்று பணிவோடு ஒன்று சொல்ல விரும்புகிறேன் என செய்தியாளர்களிடம் கூறினார்.

மேலும் படிக்க - BJP MPs Resign: சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற 10 பாஜக எம்.பி.க்கள் ராஜினாமா செய்தனர்

18 ஆண்டுகள் முதல்வர்

அதே சமயம், 18 ஆண்டுகள் கட்சி தன்னை முதல்வராக ஆக்கியது என்று பாஜக தலைமைக்கு ஆதரவாக பேசினார் சிவராஜ் சிங் சவுகான். பாஜக அவருக்கு எல்லாவற்றையும் கொடுத்தது. எனவே கட்சிக்கு திரும்ப பணியாற்றும் நேரம் வந்துவிட்டது.  'லாட்லி' திட்டத்துக்கு பிறகு தற்போது 'லக்பதி' யோஜனா திட்டத்தில் பணியாற்றப் போகிறேன் என்று மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறுகிறார். 

கதறி அழுத பெண்கள்

மத்திய பிரதேசத்தில் புதிய முதல்வர் அறிவிப்பு வெளியான ஒரு நாள் கழித்து, முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகானை சந்திக்க 'லாட்லி' திட்டம் மூலம் பயன் அடைந்த பெண்கள் சிவராஜ் சிங் சவுகானை சந்திக்க வந்தனர். அப்பொழுது அவர்கள் கதறி அழுதனர். அதைபார்த்த முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகானும் உணர்ச்சிவசப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ம.பி., புதிய முதலமைச்சர் மோகன் யாதவ்

மத்திய பிரதேசத்தின் புதிய முதலமைச்சராக பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மோகன் யாதவ், அம்மாநில ஆளுநரை சந்தித்து விரைவில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அவருடன் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் துணை முதலமைச்சர்களான ஜகதீஷ் தியோரா மற்றும் ராஜேந்திர சுக்லா ஆகியோரும் பதவி ஏற்க உள்ளனர். மத்திய பிரதேசத்தின் புதிய முதலமைச்சராக பதவி ஏற்கும்போது முதலமைச்சர் மோகன் யாதவ், தன்னுடைய புதிய அமைச்சரவை பட்டியலையும் கொடுக்க உள்ளார்.

மேலும் படிக்க - MP New Chief Minister: மத்திய பிரதேசத்தின் அடுத்த முதல்வராக மோகன் யாதவ் தேர்வு... யார் இவர்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News