White Fungus: வெள்ளை பூஞ்சையால் டெல்லி பெண்ணின் குடலில் ஓட்டை, அதிகரிக்கும் அச்சம்!!

டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில், 49 வயதான பெண் வயிற்று வலி மற்றும் வாந்தித் தொல்லை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் செய்யப்பட்ட சி.டி ஸ்கேனில், வெள்ளை பூஞ்சையால் அவரது குடலில் துளைகள் ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 27, 2021, 03:19 PM IST
  • கோவிட் நோயாளிகளில் கருப்பு பூஞ்சையைத் தொடர்ந்து வெள்ளை பூஞ்சை, மஞ்சள் பூஞ்சள் ஆகியவையும் மெல்ல தலைதூக்கியுள்ளன.
  • டெல்லியில் ஒரு பெண்ணுக்கு வெள்ளை பூஞ்சையால் உணவு குழாய், சிறுகுடல் மற்றும் பெருங்குடலில் துளைகள்.
  • நான்கு மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு துளைகள் மூடப்பட்டன.
White Fungus: வெள்ளை பூஞ்சையால் டெல்லி பெண்ணின் குடலில் ஓட்டை, அதிகரிக்கும் அச்சம்!! title=

புதுடெல்லி: கொரோனா தொற்றை ஒழிக்கவே இன்னும் ஒரு வழி கிடைக்காமல் மக்கள் அல்லாடும் வேளையில், தற்போது நாட்டில் மேலும் பல அச்சங்கள் தொடங்கியுள்ளன. மியூகோர்மைகாசிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை நோய் வேகமாக நாட்டில் கோவிட் நோயாளிகளிடம் பரவி வருகிறது. இதனால் உயிர் இழப்புகளும் ஏற்பட்டுள்ளன. கருப்பு பூஞ்சையைத் தொடர்ந்து வெள்ளை பூஞ்சை, மஞ்சள் பூஞ்சள் ஆகியவையும் மெல்ல தலைதூக்கியுள்ளன. இதில் தற்போது வெள்ளை பூஞ்சை பற்றிய ஒரு தகவல் மக்கள் மனதில் பீதியைக் கிளப்பியுள்ளது.  

வெள்ளை பூஞ்சை (White Fungus) தொற்று காரணமாக குடலில் துளைகள் ஏற்பட்டுள்ள முதல் நோயாளி பற்றிய தகவல் டெல்லியில் பதிவாகியுள்ளது. 

டெல்லியில் (Delhi) உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில், 49 வயதான பெண் வயிற்று வலி மற்றும் வாந்தித் தொல்லை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் செய்யப்பட்ட சி.டி ஸ்கேனில், அவரது குடலில் துளைகள் ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. புற்றுநோய் நோயாளியான அந்தப் பெண், சமீபத்தில் கீமோதெரபி செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

"COVID-19 நோய்த்தொற்றுக்குப் பிறகு வெள்ளை பூஞ்சையால் உணவு குழாய், சிறுகுடல் மற்றும் பெருங்குடலில் துளைகள் ஏற்பட்டுள்ளது இது உலகில் முதல் நிகழ்வாகும்" என்று சர் கங்கா ராம் மருத்துவமனையின் காஸ்ட்ரோஎன்டாலஜி மற்றும் கணைய அழற்சி அறிவியல் துறையின் டாக்டர் அமித் அரோரா கூறினார்.

ALSO READ: ஆபத்தான வெள்ளை பூஞ்சை நோய், யாரை தாக்கும்!

"நான்கு மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு, நோயாளியின் உணவுக் குழாய், சிறு குடல் மற்றும் பெரிய குடலில் உள்ள துளைகள் மூடப்பட்டன," என்று அவர் தெரிவித்தார். 

COVID-19 நோயாளிகளில் பலரிடமும் வெள்ளை, கருப்பு பூஞ்சை நோய்களும் ஒரு நோயாளியிடம் மஞ்சள் பூஞ்சையும் காணப்பட்டுள்ளது. கொரோனா வைரசின் இரண்டாவது அலையில் நாடு ஏற்கனவே சிக்கித் தவித்துக்கொண்டு இருக்கும்போது, இந்த பூஞ்சை நோய்கள் மக்கள் மற்றும் நிர்வாகத்தின் அச்சத்தையும் கவலையையும் இன்னும் அதிகரித்துள்ளன. 

முன்னதாக, சிறுகுடலில் மியுகோர்மைகோசிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை இருப்பது கண்டறியப்பட்ட சில நோயாளிகள் பற்றிய தகவல்கள் டெல்லி கங்கா ராம் மருத்துவமனையில் இருந்து பெறப்பட்டன.

கருப்பு பூஞ்சை தொற்றுநோயை விட வெள்ளை பூஞ்சை தொற்று மிகவும் ஆபத்தானது. ஏனெனில் இது நுரையீரலை தவிர,  நகங்கள், தோல், வயிறு, சிறுநீரகம், மூளை, அந்தரங்க உறுப்புகள் மற்றும் வாய் ஆகிய பகுதிகளையும் பாதிக்கிறது.

ALSO READ: COVID-19: கருப்பு பூஞ்சையை அடுத்து பீதியை கிளப்பும் வெள்ளை பூஞ்சை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News