Lok Sabha Election 2024: பிரதமர் நரேந்திர மோடி முதல் பாஜக தலைவர்கள், தொண்டர்கள் என அனைவரும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 400+ தொகுதிகளை கைப்பற்றும் என்ற கோஷத்தை எழுப்பி வருகின்றனர். எனினும் மக்களவை தேர்தலில் 400க்கு மேற்பட்ட தொகுதியை வெல்வது அவ்வளவு எளிதல்ல. வெறும் கோஷங்களால் மட்டும் இவ்வளவு பெரிய இலக்கை அடைய முடியாது. பாஜக தவிர, அதன் கூட்டணி கட்சிகளும் இதில் பெரும் பங்கு வகிக்க வேண்டும். பல்வேறு மாநிலங்களின் பாஜக அமைத்துள்ள கூட்டணி மற்றும் வெற்றி வாய்ப்புகளை அறிந்து கொள்ளலாம்.
தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி நிலை
கர்நாடகாவில் கோலார், ஹாசன், மாண்டியா ஆகிய மூன்று தொகுதிகளை ஜேடிஎஸ் கட்சிக்கு பாஜக அளித்துள்ளது. 2019ஆம் ஆண்டைப் போலவே 25 இடங்களை கைப்பற்றும் என்ற நம்பிக்கையுடன் ஜேடிஎஸ் உடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை பாஜக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுகிறது. மொத்தம் உள்ள 39 தொகுதிகளில், பாஜக பாஜக 19 இடங்களிலும், பாமக 10 தொகுதிகளிலும், தமாகா 3 இடங்களிலும் களம் காண்கிறது. பாஜக கூட்டணியில் டிடிவி தினகரனின் அமமுக 2 இடங்களிலும், ஓபிஎஸ்-ன் அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழு ஒரு தொகுதியில் களம் காண்கின்றனர். மேலும், ஜான் பாண்டியனின் தமமுக, தேவநாதனின் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி, ஏசி சண்முகத்தின் புதிய நீதிக் கட்சி ஆகியவை தலா ஒரு இடங்களில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறது. அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு பெரும் கட்சிகளை எதிர்த்து களம் காணும் பாஜக, இந்த முறை தலைவர் அண்ணாமலை தலைமையில் தனது இருப்பை நிரூபிக்கும் முனைப்புடன், தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
உத்தர பிரதேசம், பீகாரில் பாஜக கூட்டணியின் நிலை
பீகாரில் பாஜக தனது கூட்டணிக் கட்சிகளான ஜேடியு, எல்ஜேபி (ராம் விலாஸ்), ஆர்எல்எம் மற்றும் HAM ஆகிய கட்சிகளுக்கு 23 இடங்களை வழங்கியுள்ளது. 2019ம் ஆண்டில், RLP மற்றும் HAM கூட்டணியில் இல்லை. அதேசமயம் பீகாரில் மொத்தமுள்ள 23 இடங்களில் 22 இடங்களில் பாஜக கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. 2019 ஆம் ஆண்டின் அதே அளவ்வு தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்ற சவாலை பாஜகவின் கூட்டணிக் கட்சிகள் எதிர்கொள்கின்றன. பீகாருடன் அண்டை மாநிலமான உத்தரபிரதேசமும் பாஜகவுக்கு சவாலாக உள்ளது. இம்முறை உ.பி.யில் பாஜக, கூட்டணியில் அதிக இடங்களில் போட்டியிடுகிறது. மொத்தமுள்ள 80 இடங்களில் பாஜக 75 இடங்களிலும், ஆர்எல்டி அப்னா தளத்துக்கு தலா 2 இடங்களும், எஸ்பிஎஸ்பிக்கு ஒரு இடமும் அளிக்கின்றன. ஜார்க்கண்டில், 2019 ஆம் ஆண்டைப் போலவே, அக்கட்சி கூட்டணி கட்சியான AJSU க்கு ஒரு இடத்தை வழங்கியுள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தில் வெற்றி வாய்ப்புகள்
ஆந்திராவில் 2019ம் ஆண்டில் பாஜக ஒரு இடத்தைக் கூட வெல்ல முடியாத நிலையில், தெலுங்கு தேசம் மற்றும் ஜன சேனாவுடன் கூட்டணி வைத்து 6 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது. 19 மக்களவைத் தொகுதிகளில் தெலுங்கு தேசம் மற்றும் ஜனசேனா போட்டியிடுகின்றன. பாஜக மாநிலத்தில் தனது இருப்பை நிரூபிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நிலையை மேம்படுத்துவதற்கு கூட்டணிக் கட்சிகளையும் நம்யுள்ளது.
மகாராஷ்டிரா கூட்டணி
மகாராஷ்டிராவில் பாஜக 30 இடங்களில் போட்டியிடப் போகிறது. சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) மற்றும் என்சிபி (அஜித் பவார்) க்கு 19 முதல் 20 இடங்கள் கொடுக்கப்பட உள்ளது. NDA இன்னும் தொகுதி பங்கீடு குறித்த ஒப்பந்தம் எதையும் அறிவிக்கவில்லை. பிஜேபி தனது சொந்த நிலையை மேம்படுத்துவதைத் தவிர, அதன் கூட்டணி கட்சிகளும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று விரும்புகிறது.
கேரளாவில் உள்ள நிலைமை
கேரளாவில் பாஜக 16 இடங்களிலும், கூட்டணி கட்சிகள் 4 இடங்களிலும் போட்டியிடுகின்றன. 2019ல் கேரளாவில் பாஜகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. இந்த முறை காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் தலைமையிலான கூட்டணிகளை முறியடிக்க, சுரேஷ் கோபி, ராஜீவ் சந்திரசேகர், வி முரளீதரன் போன்ற மூத்த தலைவர்கள் களத்தில் உள்ளனர்.
வட கிழக்கு மாநிலங்களில் பாஜக கூட்டணி
வடகிழக்கில், அசாமில் மூன்று இடங்களையும், ஏஜிபிக்கு இரண்டு இடங்களையும், யுபிபிஎல்-க்கு ஒரு இடத்தையும் பாஜக ஒதுக்கியுள்ளது. மற்ற வடகிழக்கு மாநிலங்களில் கூட்டணி கட்சிகளுக்கு 4 இடங்களை பாஜக அளித்துள்ளது. மேகாலயாவில் இரண்டு இடங்களை எல்எஸ்ஸுக்கும், இரண்டு இடங்களை என்பிபிக்கும் வழங்கியுள்ளது. அவுட்டர் மணிப்பூர் தொகுதி NPF க்கும், நாகாலாந்தில் ஒரு இடம் NDPP க்கும் கொடுக்கப்பட்டுள்ளது.
தெற்கில் பாஜக சிறப்பாக செயல்படும்: பிரசாந்த் கிஷோர்
தென் மற்றும் கிழக்கு இந்தியாவில் பாஜக தனது இடங்களையும் வாக்கு சதவீதத்தையும் கணிசமாக அதிகரிக்கப் போகிறது என்று நாட்டின் பிரபல அரசியல் வியூகவாதி பிரசாந்த் கிஷோர் சமீபத்தில் கூறியிருந்தார். தெலுங்கானாவில் பாஜக முதலாவது அல்லது இரண்டாவது கட்சியாக இருக்கும் என்றும், தமிழகத்தில் பாஜகவின் வாக்கு சதவீதம் இரட்டை இலக்கத்தை எட்டும் என்றும் அவர் கூறினார். மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவிலும் பாஜக முதலிடத்தில் நீடிக்கலாம் என்றார். எனினும், பாஜக ஆட்சி அமைக்கும் என்றாலும், அக்கட்சி முழக்கமிடுவது போல் 370 இடங்களை வெல்ல வாய்ப்பில்லை என்றும் கிஷோர் வலியுறுத்தினார்.
மேலும் படிக்க - ஓட்டுப்போட லீவு... ஏப்ரல் 19ஆம் தேதி பொது விடுமுறை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ