சித்தராமையா மீது பணத்தை தூக்கி எறிந்த பெண் : வைரலாகும் வீடியோ

கர்நாடக மாநிலம், பாகல்கோட் மாவட்டத்தில், முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கொடுத்த நிவாரண நிதியை வாங்காமல், பெண் ஒருவர் சித்தராமையாவின் கார் மீது தூக்கி எரிந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Written by - Chithira Rekha | Last Updated : Jul 15, 2022, 08:29 PM IST
  • கலவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.2 லட்சம் வழங்கிய சித்தராமையா
  • பணத்தை வாங்காமல் கார் மீது வீசி எறிந்த பெண்
  • சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ
சித்தராமையா மீது பணத்தை தூக்கி எறிந்த பெண் : வைரலாகும் வீடியோ title=

கர்நாடக மாநிலம், பாகல்கோட் மாவட்டம், கெரூர் பகுதியில் கடந்த 6-ம் தேதி பெண்களைக் கேலி செய்ததாக ஏற்பட்ட மோதல் மதக் கலவரமாக மாறியது. பாகல்கோட் மாவட்டம், பதாமி தொகுதி எம்எல்ஏவான சித்தராமையா, கலவரத்தில் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூற வந்தார்.

அப்போது கலவரத்தில் காயமடைந்தவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணத் தொகை தருவதாக சித்தராமையா அறிவித்தார். ஆனால் நிவாரணத் தொகையை வாங்க மறுத்த அவர்கள், சட்டம், ஒழுங்கை சீரமைத்தால் போதும் எனத் தெரிவித்தனர். 

மேலும் படிக்க | ஸ்டாலின் விரைவில் குணமடைய வேண்டும் - கர்நாடக முதல்வர் ட்வீட்

அப்போது, காரில் அமர்ந்திருந்த சித்தராமையா கலவரத்தில் காயமடைந்தவரின் உறவுப்பெண் ஒருவரை சமாதானப்படுத்தி பணத்தைக் கொடுக்க முயன்றார். ஆனால், அப்பெண் பணத்தை சித்தராமையாவின் கார் மீது வீசி எறிந்ததோடு, எங்களுக்குப் பணம் வேண்டாம், அமைதியாக வாழ விடுங்கள் எனக் கூறினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

மேலும் படிக்க | இந்தியாவிற்குள் நுழைந்த குரங்கு அம்மை; ‘இந்த’ அறிகுறிகள் இருந்தால் எச்சரிக்கை தேவை

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News