வெட்கக்கேடு!! ஓடும் காரில் பெண்ணை 12 மணி நேரம் பலாத்காரம் செய்த கும்பல்

ராஜஸ்தானில் சிறுமியை காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 3 நாட்கள் ஆகியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காவல் துறை.

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Dec 3, 2019, 08:42 PM IST
வெட்கக்கேடு!! ஓடும் காரில் பெண்ணை 12 மணி நேரம் பலாத்காரம் செய்த கும்பல்
கோப்புப்படம்

மாதோபூர்: ஹைதரபாத் சம்பவத்தின் அதிர்ச்சியை அடுத்து மீண்டும் ஒரு பெண்ணுக்கு நடந்த கொடூரம் வெளிசத்துக்கு வந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூரின் ஜவஹர் வட்டம் பகுதியில், கும்பல் ஒன்று சிறுமியை காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்த சம்பவம் 3 நாட்களுக்கு முன்பு நடந்துள்ளது. ஆனால் காவல்துறை இந்த விஷயத்தை மறைக்கும் விதத்தில் இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தனக்கு நடந்த சம்பவத்தை அந்த பெண் கூறுகையில், 3 நாட்களுக்கு முன்பு ஜவஹர் வட்டம் பகுதியைச் சேர்ந்த தனது நண்பருடன் காரில் அமர்ந்திருந்தார். இந்த நேரத்தில், அங்கு வந்த அவரது மற்றொரு நண்பரும் காரில் அமர்ந்து மது அருந்தத் தொடங்கினார். மாலை 6 மணியளவில், மற்றொரு நபர் இன்னோவா காரைக் கொண்டு வந்தார். அதில் என்னை வலுக்கட்டாயமாக உள்ளே தள்ளி, இரவு முழுவதும் காரில் வைத்து என்னை சுற்றிகொண்டே இருந்தனர் எனக் கூறியுள்ளார்.

குற்றவாளிகள் சிறுமியை கல்வார் பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பலாத்காரம் செய்த பின்பு, மீண்டும் வரும் வழியில் கல்வாரி பகுதியில் இன்னோவா காரின் டீசல் தீர்ந்து விட்டது. இதனால் ​​பெட்ரோல் பம்புக்கு டீசல் போடா காரை எடுத்துச் சென்றனர்.

அப்பொழுது அங்கெ அந்த பெண் பெட்ரோல் பம்ப் தொழிலாளர்களின் உதவியுடன் கல்வாட் காவல் துறைக்கு தகவல் அளித்துள்ளார். ஆனால் இந்த பகுதி எங்கள் எல்லைக்கு வராததால், வரமுடியாது எனக் கூறியுள்ளார். இதையடுத்து, ஜவஹர் வட்டம் போலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. இருப்பினும், காவல்துறையினர் இந்த வழக்கை 3 நாட்களாக எந்தவித விசாரணையும் மேற்கொள்ள வில்லை. அதன் பிறகு இந்த சம்பவம் அம்பலமானது.

அதே நேரத்தில் போலீசார் தரப்பில், சவாய் மாதோபூரில் வசிக்கும் சிறுமி ஈவன்ட் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவருடைய புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் தேடப்படுகிறார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

ஹைதராபாத்தில் ஒரு கால்நடை மருத்துவருக்கு நடந்த கொடூரமான குற்றத்திற்குப் பிறகு, ஞாயிற்றுக்கிழமை டோங்கில் (ராஜஸ்தான்) ஒரு அப்பாவி சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்பதை உங்களு நினைவுபடுத்துகிறோம். 

அதாவது ராஜஸ்தான் மாநிலம் போங்க் மாவட்டத்தில் உள்ள அலிகார் பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி அரசு பள்ளியில் 1 ஆம் வகுப்பு படித்து வந்தார். சனிக்கிழமை பள்ளிக்கு சென்ற சிறுமி வகுப்பு முடிந்து மாலை 3 மணிக்கு வீட்டுக்கு புறப்பட்டார். ஆனால் வெகுநேரமாகியும் அவர் வீட்டுக்கு செல்லவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் பல இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. அடுத்த நாள் (ஞாயிற்றுக்கிழமை) புதர்களுக்கு இடையே மாயமான சிறுமி கொலை செய்யப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். மர்ம நபர்கள் அவரை கடத்தி சென்று, கற்பழித்து கொலை செய்தது தெரிய வந்தது. சிறுமியின் கழுத்தில் அவர் சீருடையில் அணிந்திருந்த பெல்ட்டால் இறுக்கி கொடூரமாக கொலை செய்துள்ளனர். போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். 

அந்த சம்பவம் குறித்து முதல்வர் கெஹ்லோட் உட்பட மக்களவை சபாநாயகர் கூட ட்வீட் செய்து இரங்கல் தெரிவித்தார். அந்த சிறுமியின் உறவினர்களுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவியையும் முதல்வர் கெஹ்லாட் அறிவித்துள்ளார்.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.