World Vegan Day 2021: முட்டைக்கு ஈடாக புரோட்டீன் உள்ள ‘5’ சைவ உணவுகள்..!!

மக்கள் இப்போது இறைச்சி அடிப்படையிலான உணவுகளை தவிர்த்து மெதுவாக சைவ உணவுக்கு மாறி வருகின்றனர்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 1, 2021, 05:50 PM IST
World Vegan Day 2021: முட்டைக்கு ஈடாக புரோட்டீன் உள்ள ‘5’ சைவ உணவுகள்..!! title=

World Vegan Day 2021: சைவ உணவு என்பது தாவர அடிப்படையிலான உணவுகளை உண்ணுதல்,  விலங்குகள் சார்ந்த, இறைச்சி, மீன், முட்டை போன்ற உணவுப் பொருட்களை தவிர்த்தல் ஆகும். தற்போது நிறைய பேர் சைவ உணவுக்கு மாற விரும்புகிறார்கள்.  இறைச்சி மற்றும் முட்டையில் உள்ளதை போன்ற சத்துக்கள் சைவ உணவிலும் உள்ளன 

விலங்குகள் சார்ந்த பொருட்களின் உள்ள அதிக அளவு புரதங்களை போல, சைவ உணவில் புரதங்கள் இல்லை என்று பலர் நினைக்கிறார்கள்

முட்டையில் உள்ளதை போலவே அதிக அளவு புரதங்களை வழங்கும் தாவர அடிப்படையிலான உணவு பொருட்களின் பட்டியல் இங்கே:

நட்ஸ் (Nuts): ஆரோக்கியமான கொழுப்புகள், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் ஆகியவற்றை உட்கொள்வதற்கான சிறந்த ஆதாரமாக நட்ஸ் உள்ளது.  இதனை எந்த வடிவத்திலும் உட்கொள்ளலாம். பாதாம் பருப்பு போன்ற நட்ஸ் வகைகள் எடையை நிர்வகிக்கவும், அறிவாற்றலை அதிகரிக்கவும், ஆரோக்கியமான தசைகள் மற்றும் எலும்புகளை உருவாக்கவும் உதவுகின்றன.

ALSO READ | நீங்கள் ரவை உப்புமா பிரியரா; உங்களுக்கு ஓர் நற்செய்தி!

பருப்பு (Lentils): பருப்பு இந்தியாவில் ஒரு முக்கிய உணவாகும். பருப்பு வகைகளில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவே பருப்பு சிறந்த உணவுத் தேர்வாகக் கருதப்படுகிறது.

பூசணி விதைகள் (Pumkin Seeds): பூசணி விதைகள் சைவ உணவு உண்பவர்களுக்கு ஆரோக்கியமான சிற்றுண்டிகான சிறந்த உணவாக கருதப்படுகிறது. இதில் ஊட்டச்சத்துக்கள், புரதங்கள், ஆக்ஸிஜனேற்றிகள், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் பிற முக்கிய கூறுகள் உள்ளன.

ALSO READ | நீங்கள் வாங்கும் டீ கலப்படம் அற்றது தானா; கண்டுபிடிக்கும் எளிய முறை

டோஃபு (Tofu): டோஃபு சோயா பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இது கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் பரவலாகக் கிடைக்கிறது. டோஃபு என்பது புரதம், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்பு போன்ற ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களின் முக்கிய ஆதாரமாகும். இது இறைச்சி சார்ந்த பொருட்களுக்கு சிறந்த மாற்றாக உள்ளது.

கொண்டைக்கடலை (Chickpea): கொண்டைக்கடலை இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. கொண்டைக்கடலை ஒரு பிரபலமான தாவர அடிப்படையிலான உணவுப் பொருளாகும், மேலும் இது கொலஸ்ட்ரால் மற்றும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

( பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)

ALSO READ | பகீர் தகவல்! காற்று மாசுபாடு விந்தணு எண்ணிக்கையை குறைக்கிறதா..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News