உலக தண்ணீர் தினம் 2017: சுதர்சனின் மணல் சிற்பம்!!

கோடை கால‌ம் ஆர‌ம்‌பி‌க்கு‌ம் போதே த‌ண்‌ணீ‌ர் வற‌ட்‌சி‌யு‌ம் ஆர‌ம்‌பி‌த்து ‌வி‌ட்டு‌ள்ள ‌நிலை‌யி‌ல் இ‌ன்று உலக த‌ண்‌ணீ‌ர் ‌தின‌ம் கடை‌பிடி‌க்க‌ப்படு‌கிறது.

Last Updated : Mar 22, 2017, 09:43 AM IST
உலக தண்ணீர் தினம் 2017: சுதர்சனின் மணல் சிற்பம்!! title=

மும்பை: கோடை கால‌ம் ஆர‌ம்‌பி‌க்கு‌ம் போதே த‌ண்‌ணீ‌ர் வற‌ட்‌சி‌யு‌ம் ஆர‌ம்‌பி‌த்து ‌வி‌ட்டு‌ள்ள ‌நிலை‌யி‌ல் இ‌ன்று உலக த‌ண்‌ணீ‌ர் ‌தின‌ம் கடை‌பிடி‌க்க‌ப்படு‌கிறது.

கடந்த 1993-ம் ஆண்டு முதல், மார்ச் 22-ம் தேதி உலக தண்ணீர் தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. பருவமழை பொய்த்ததால், இந்த ஆண்டு தொடக்கம் முதலே, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

2040-ம் ஆண்டில், உலகில் 4-ல் 1 குழந்தை தண்ணீர் பற்றாக்குறையில் இருக்கும் என்று யுனிசெஃப் கூறியுள்ளது. குறிப்பாக, இன்னும் இருபது ஆண்டுகளில் உலகில், 60 கோடி மக்களுக்கு கடும் தண்ணீர்ப் பிரச்னை ஏற்படும் என்றும் யுனிசெஃப் கூறியுள்ளது.

உலகம் முழுவதும் 36 நாடுகளில், தீவிரமான தண்ணீர்ப் பிரச்னை நிலவிவருகிறது. முக்கியமாக, இந்தியக் கிராமப்புறங்களில் வசிக்கும் 6 கோடி மக்களுக்கு சுத்தமான குடிநீர் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் உலக தண்ணீர் தினமான இன்று சுதர்சன் பட்நாயக் மற்றும் அவரது மாணவர்கள் அழகான கடற்கரையில் மணல் சிற்பம் ஒன்றை வடிவமைத்துள்ளார்.

இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

பத்ம ஸ்ரீ விருது பெற்ற சுதர்சன் சமீபத்தில் உயரமான மணல் கோட்டை கட்டி உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.

Trending News