சுய ஆட்சி இந்தியா கட்சி தலைவர் யோகேந்திர யாதவ் கைது!

சுய ஆட்சி இந்தியா கட்சியின் அகில இந்தியத் தலைவர் யோகேந்திர யாதவ், திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்!

Last Updated : Sep 8, 2018, 01:24 PM IST
சுய ஆட்சி இந்தியா கட்சி தலைவர் யோகேந்திர யாதவ் கைது! title=

சுய ஆட்சி இந்தியா கட்சியின் அகில இந்தியத் தலைவர் யோகேந்திர யாதவ், திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்!

சேலம் - சென்னை 8 வழி சாலை திட்டத்திற்கு எதிராக தமிழகத்தில் நடைப்பெற்று வரும் போராட்டத்தில் விவாசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் திருவண்ணாமலை மாவட்டம் சென்ற சுய ஆட்சி இந்தியா கட்சியில் அகில இந்தியத் தலைவர் யோகேந்திர யாதவ், செங்கம் பகுதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது... “எங்களுக்கு வந்த அழைப்பின் பேரில், 8 வழிச்சாலைக்கு எதிராக போராடும் விவசாயிகளைக் காண திருவண்ணாமலை செல்கின்றோம். ஆனால், தமிழக காவல் துறையினர் விவசாயிகளை காண எங்களுக்கு தடை விதித்தனர். இந்நிகழ்வின் போது காவல்துறையினர் வலுக்கட்டாயமாக எங்களது கைப்பேசிகளை கைப்பற்றினர், மேலும் வலுகட்டாயமாக எங்களை காவல்துறை வாகனத்தில் ஏற்றினர்"

சென்னை-சேலம் நகரங்களுக்கு இடையே 10,000 கோடி ரூபாய் செலவில் 8 வழி சாலை எனப்படும் பசுமை சாலை அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்திற்காக சேலம், தர்மபுரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

இதன் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மேலும் 8 வழி பசுமை சாலை திட்டத்திற்காக கையகப்படுத்தப்படும் நிலத்தில் எஞ்சிய நிலங்களை விற்கவோ, வங்கிகளில் அடமானம் வைத்து கடன் பெற முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளதாகவும் இந்த மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது. எனவே தங்களது நிலங்களை அரசுடைமை ஆக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது!

Trending News