IPL_2018: 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி

IPL 2018 தொடரின்  49-வது போட்டியில் கொல்கத்தா - ராஜஸ்தான் அணிகளின் மோதின. இந்த போட்டி நேற்று இரவு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணிக்கு பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா பீல்டிங்கை தேர்வு செய்தது. 

Last Updated : May 16, 2018, 09:01 AM IST
IPL_2018: 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி title=

IPL 2018 தொடரின்  49-வது போட்டியில் கொல்கத்தா - ராஜஸ்தான் அணிகளின் மோதின. இந்த போட்டி நேற்று இரவு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணிக்கு பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா பீல்டிங்கை தேர்வு செய்தது. 

ராஜஸ்தான் அணி:-

இதையடுத்து ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ராகுல் திரிபாதி, ஜோஸ் பட்லர் ஆகியோர் களமிறங்கினர். முதல் ஓவரில் ராஜஸ்தான் அணிக்கு இரண்டு ரன்கள் மட்டுமே கிடைத்தது. சிறப்பாக விளையாடி வந்த ராஜஸ்தான் அணி  4 ஓவர்களிலேயே விக்கெட் இழப்பின்றி 60 ரன்களை குவித்தது. திரிபாதி 27 ரன்கள் சேர்த்த நிலையில் ரஸ்ஸல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

பின்னர் பட்லருடன்-கேப்டன் ரஹானே இணை சேர்ந்தார். ஆனால் வெறும் ரஹானே வெறும் 11 ரன்களுக்கு குல்தீப் பந்தில் அவுட்டானார். பட்லர் 39 ரன்களுக்கு குல்தீப் பந்தில் சீயர்லஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பென் ஸ்டோக்ஸ் 11 ரன்களுக்கு குல்தீப் யாதவிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஐஷ் சோதி வெறும் 1 ரன்னிலும், ஆர்ச்சர் 6 ரன்னிலும் வெளியேறினர். உனதிகட் 26 ரன்களுக்கு பிரசித் பந்தில் போல்டானார்.

இறுதியில் 19 ஓவர்களில் 10 விக்கெட்டை இழந்து ராஜஸ்தான் 142 ரன்களை எடுத்தது. 

மும்பை அணி:-

143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. இதில் வீரர்களின் அசத்தலான ஆட்டத்தால் 18 வது ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்து மும்பை அணி வெற்றி பெற்றது. அதிகபட்சமாக லின் 45 ரன்களும், தினேஷ் கார்த்திக் 41 ரன்களும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி புள்ளி பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது.

Trending News