தேதி மாற்றப்பட்ட கர்நாடக மாநில முதல்வர் பதவியேற்பு விழா- காரணம் என்ன?

கர்நாடக மாநில முதல்வாரக மஜத கட்சியின் சட்டமன்றக்குழு தலைவர் குமாரசாமி புதன்கிழமை(23 தேதி) பதவியேற்க உள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : May 20, 2018, 08:33 AM IST
தேதி மாற்றப்பட்ட கர்நாடக மாநில முதல்வர் பதவியேற்பு விழா- காரணம் என்ன? title=

224 தொகுதிகளுக்கு நடைபெற்ற கர்நாடக சட்டசபை தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், அதிக தொகுதிகளை வென்ற பாஜக-வை ஆட்சி அமைக்குமாறு கர்நாடக கவர்னர் அழைப்பு விடுத்தார். இதனையடுத்து எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார். மேலும் 15 நாள் அவகாசத்தில் பெருன்பான்மையினை நிருப்பிக்க வேண்டும் என்ற நிபந்தனையும் ஆளுநர் விதித்தார். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் மற்றும் மஜத சார்பில் வழக்கு(18 தேதி) தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எடியூரப்பா தங்கள் பெருபான்மையை (19 தேதி) நிருப்பிக்க வேண்டும் எனக்கூறி உத்தரவிட்டது. 

கர்நாடக மாநில சட்டசபையில் நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னரே, உருக்கமான உறையினை நிகழ்த்திய முதல்வர் எடியூரப்பா, தனது முதல்வர் பதவியினை ராஜினாமா செய்தார். அவர் ராஜினாமா செய்ததை அடுத்து, காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதள கட்சி கூட்டணியின் முதல்வர் குமாரசாமி பதவியேற்க ஆளுநர் அழைப்பு விடுத்தார்.

முதலில் 21 ஆம் தேதி குமாரசாமி முதல்வராக பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தேதி மாற்றப்பட்டு வரும் 23ம் தேதி (புதன்கிழமை) குமாரசாமி பதவியேற்ப்பு விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. நாளை(தேதி 21) ராஜீவ் காந்தியின் நினைவு தினம் என்பதால், இந்த தேதி மாற்றத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

பதவியேற்பு விழாவுக்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி, அனைத்துப் பிராந்திய முதல்வர்களையும், ஆந்திரா, மேற்கு வங்கம், தெலங்கானா முதல்வர்களையும், உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ்யாதவ், முலாயம் சிங் யாதவ் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

 

 

Trending News