445 கிலோ எடை கொண்ட ஆண் அழகனுக்கு திருமணம் செய்ய ஆசை!

பாகிஸ்தான் ஹல்க் என்ற பெயரில் உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ள கிஸ்ர் தற்போது திருமணம் செய்துகொள்ள பெண் தேடி வருகின்றார்!

Updated: Jan 24, 2020, 05:01 PM IST
445 கிலோ எடை கொண்ட ஆண் அழகனுக்கு திருமணம் செய்ய ஆசை!

பாகிஸ்தான் ஹல்க் என்ற பெயரில் உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ள கிஸ்ர் தற்போது திருமணம் செய்துகொள்ள பெண் தேடி வருகின்றார்!

445 கிலோ எடை கொண்ட இந்த பாகிஸ்தான் ஹல்கை திருமணம் செய்து கொள்ள, 300 பெண்கள் இதுவரை விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த ஹல்கிற்கு ஒருவர் கூட பிடிக்கவில்லை என்பது மற்றொரு வியப்பு. இதற்குக் காரணம், அவர் தனக்காக விரும்பும் பெண்ணை தான் இதுவரை சந்திக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

உள்ளூர் ஊடக செய்தியின் படி, அர்பாப் கிஸ்ர் தான் திருமணம் செய்ய விரும்பும் பெண், தனக்கு ஏற்றவாறு அதிக எடையுடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்.

வழக்கமாக, இளைஞர்கள் மெலிதான மற்றும் சரியான பொருத்தமுள்ள பெண்களை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள், ஆனால் அர்பாப் வேறு வழியை விரும்புகிறார். அதாவது தான் தேடும் பெண் குறைந்தது 100 கிலோ எடையுள்ள ஒரு பெண்ணாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். பாகிஸ்தான் செய்தித்தாள் ஒன்றின் படி, கிஸ்ர் அவர்கள் திருமணத்திற்கு ஒரு ஹெவிவெயிட் பெண்ணை விரும்புகிறார்கள் என்று குறிப்பிடுகிறது.

இதுகுறித்து பாகிஸ்தான் ஹல்க் அர்பாய் கிஸ்ர் தெரிவிக்கையில்., "நான் எனக்கு பொருத்தமான ஒரு பெண்ணையே திருமணம் செய்ய விரும்புகிறேன். ஒரு சாதார பெண்ணை திருமணம் செய்து, எனது விருப்பத்திற்காக அவரை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை" என தெரிவித்துள்ளார்.

445 கிலோ கொண்ட அர்பாபின் உயரம் 6 அடி 6 அங்குலம் ஆகும். மற்றும் தூரத்தில் இருந்து அவரை பார்த்தால் அவர் ஒரு மாமிச மலை போல் காட்சியளிப்பார். கிஸ்ர் ஒவ்வொரு நாளும் அதிக கலோரி உணவை எடுத்துக்கொண்டு தனது உடல் வாகை கட்டுப்பாட்டில் வைத்து வருகின்றார். இதனிடையே அவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். அதுநாள் முதல் இன்று வரை அவர் தனக்கு ஏற்ற ஒரு பெண்ணைத் தேடி வருகிறார். இதுவரை, அவரை திருணம் செய்ய 300 இளம்பெண்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். எனினும் அவர் அனைவரது விருப்ப மனுக்களையும் நிராகரித்துள்ளார்.

பாகிஸ்தான் ஹல்கின் விருப்பத்தின் படி அவரது மனைவி குறைந்தது 100 கிலோ எடை மற்றும் 6 அடி 4 அங்குலம் உள்ள பெண்ணை திருமணம் செய்ய விரும்புகிறார் என தெரிகிறது.