காலம் போன கடைசியில் 55 வயது பாட்டிக்கு கிடைத்த லெஸ்பியன் காதலி!!

தனது காதலனுடன் காதல் விடுமுறைக்கு சென்ற 55 வயது பாட்டிக்கு கிடைத்த ஓரினச்சேர்க்கை காதலி!!

Updated: Apr 24, 2019, 02:59 PM IST
காலம் போன கடைசியில் 55 வயது பாட்டிக்கு கிடைத்த லெஸ்பியன் காதலி!!

தனது காதலனுடன் காதல் விடுமுறைக்கு சென்ற 55 வயது பாட்டிக்கு கிடைத்த ஓரினச்சேர்க்கை காதலி!!

காதல் வாழ்க்கை என்றாலே ஒருவரது வாழ்வில் என்றும் மறக்கமுடியாத நினைவுகளை வாரி வழங்கும் ஒரு இனிமையான நிகழ்வு. நமது நாட்டில், காதலிப்பவர்கள் ஒரு கட்டத்திற்கு மேல் திருமணம் செய்து கொண்டு அடுத்த கட்டத்திற்கு தங்களின் வாழ்கையை கொண்டு செல்வார்கள். ஆனால், வெளிநாடுகளில் திருமணம் செய்யாமல் ஒன்றாக நீண்ட நாட்கள் வாழ்வது என்பது சாதாரணமான ஒன்று தான். 

லண்டனை சேர்ந்த 55 வயதுடைய சேன்ட்ரா நியூடன் என்ற  பாட்டியும், பீட்டே என்பவரும் கடந்த 18 வருடமாக காதலித்து வந்தனர். வயதானாலும் இவர்கள் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் எகிப்திற்கு சுற்றுலா சென்றனர். அப்போது, இவர்கள் இருவரும் மது அருந்தி கொண்டிருக்கும் போது இவர்களுக்கு ஷாரோன் என்ற பெண் அறிமுகமானார். அப்பொழுது ஷாரோனும், சேன்ட்ராவும் பேச்சிலேயே நெருக்கமாகிவிட்டனர். பின்னர், அந்த டூரில் சேன்ட்ரா - பீட்டே உடன் ஷாரோனும் இணைந்து கொண்டார். ஒரே அறையில் தங்குவது மது அருந்துவது என சுற்றுலாவை இவர்கள் இணைந்து அனுபவிக்க துவங்கினர். ஒரு கட்டத்தில் சேன்ட்ரா -ஷாரோனின் இடையே இருந்த உறவு நட்பை தாண்டி சென்றது. 

இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் விரும்ப துவங்கினர். சேன்ட்ரா தன்னுடன் ஷாரோனை லண்டனிற்கு அழைத்து செல்ல விரும்பினார். தற்போது இவர்கள் இருவரும் எங்கு சென்றாலும் ஜோடியாக சுற்றி வருகின்றனர். இருவரும் திருமணம் செய்யமலேயே வாழ முடிவு செய்துள்ளனர்.