61 வயதில் தனது சொந்த பேத்தியை கருவில் சுமந்து பெற்றெடுத்த பாட்டி!!

தனது திருநங்கை மகனுக்கு உதவ தனது சொந்த பேத்தியை கருவில் சுமந்து பெற்றெடுத்த 61 வயது மூதாட்டி!!

Updated: Apr 4, 2019, 04:24 PM IST
61 வயதில் தனது சொந்த பேத்தியை கருவில் சுமந்து பெற்றெடுத்த பாட்டி!!

தனது திருநங்கை மகனுக்கு உதவ தனது சொந்த பேத்தியை கருவில் சுமந்து பெற்றெடுத்த 61 வயது மூதாட்டி!!

குழந்தை பெற்றெடுப்பது பெண்கள் அனைவருக்கும் அமைந்த ஒரு வர பிரசாதம் என்று கூறினால் அது மிகையாகாது. தனது கருவில் தன்னுடைய வாரிசை பெற்றெடுக்கும் போது ஒரு பெண் முழுமை அடைகிறாள் என்பதை அனைவரும் கூற கேட்டிருப்போம்.  அது போய் இல்லை உண்மை என்பதை அனைவரும் உணர்வோம். அதிலும், சிலர் வயது என்பது வெறும் எண் என்பதை நிரூபித்து தங்களின் முதுமை காலத்திலும் குழந்தையை பெற்றெடுக்கின்றனர். இந்நிலையில், 61 வயதுடைய ஒரு மூதாட்டி தனது தனது திருநங்கை மகனுக்கு உதவும் வகையில், தனது சொந்த பேத்தியை தன்னுடைய கருவில் சுமந்து பெற்றெடுத்த சம்பவம் அனைவரையும் வியக்கவைத்துள்ளது. 

அமெரிக்க மாநிலமான நெப்ராஸ்காவின் தலைநகர் ஓமஹாவில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேத்யூ எலட்ஜ் மற்றும் எலியட் டக்ஹெர்டி இவர்கள் இருவரும் ஆண் ஓரினச் சேர்க்கையாளர்கள் தங்கள் உறவை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லவும், இருவரின் வாழ்க்கைக்கான அடையாளமாக ஒரு குழந்தை வேண்டும் என அவர்கள் முடிவு செய்துள்ளனர். அது இவர்களால் சாத்தியமில்லாத பட்சத்தில் மேத்யூவின் 61 வயதான அம்மா ரினெக் எலட்ஜ் அதற்கு உதவி செய்வதாக முன் வந்திருக்கிறார்.

செயற்கை கருத்தரித்தல் முடிவைக் கையில் எடுத்தாலும் அதற்கு மேத்யூவின் அம்மா சரியானவரா, குழந்தையை தாங்கக் கூடிய சக்தி இருக்கிறதா என்பன போன்ற பல குழப்பங்கள் எழுந்துள்ளது. இதற்காக ஒமஹா பல்கலைக்கழகத்தின் நெப்ராஸ்கா மருத்துவ மையத்தின் உதவியுடன் மேத்யூவின் அம்மாவிற்கு பல கட்ட சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. அதில் மேத்யூவின் அம்மாவிற்கு கரு முட்டை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் எலியட்ஸின் சகோதரி லியா ரிப் தன்னுடைய கரு முட்டையை தானமாக வழங்கியிருக்கிறார்.

இதை தொடர்ந்து, மேத்யூவின் தாய்க்கு கருமுட்டை அளிக்கப்பட்டு, மேத்யூவின் விந்தணுக்களும் செயற்கையாக கருவில் செளுத்தப்ட்டுளது. கடந்த ஒன்பது மாதங்களுக்குப் பிறகு தற்போது அவர் ஒரு ஆரோகியமான பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அந்தக் குழந்தைக்கு ’உமா லூயிஸ்’ என பெயர் வைத்துள்ளனர்.

இது குறித்துஅவர்கள் கூறுகையில், இந்த முடிவில் எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை. அது இயற்கையாக எங்களுக்குள் தோன்றிய உள்ளுணர்வு. நீங்கள் ஓரினச்சேர்க்கையாளர்களாக இருக்கிறீர்கள், திருமணம் செய்து கொண்டீர்கள் எனில் உங்களுக்கென ஒரு குழந்தையையும், தனி குடும்பத்தையும் உருவாக்கிக் கொள்ள முடியும். அதற்கு நாங்கள் ஒரு உதாரணம். இன்றைய தொழில்நுட்பத்தில் பல வழிகளில் அதற்கு சாத்தியங்கள் இருக்கின்றன. இதற்காக உழைத்த அத்தனை பேருக்கும் எங்களுடைய நன்றிகள் என மேத்யூ எலட்ஜ் தெரிவித்துள்ளார்.