7th Pay Commission: ஊழியர்களின் ஊதியத்தில் பம்பர் உயர்வு, முழு கணக்கீடு இதோ

ஜனவரியில் அகவிலைப்படியில் 2% முதல் 3% வரை அதிகரித்தால், ஊழியர்களுக்கு 33 முதல் 34 சதவிகிதம் வரை அகவிலைப்படி கிடைக்கத் தொடங்கும். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 13, 2022, 09:58 AM IST
  • மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் நல்ல செய்தி கிடைக்கும்.
  • 2022 ஜனவரியில் அகவிலைப்படி மீண்டும் ஒருமுறை அதிகரிக்கப்பட உள்ளது.
  • அகவிலைப்படி 2 முதல் 3% வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
7th Pay Commission: ஊழியர்களின் ஊதியத்தில் பம்பர் உயர்வு, முழு கணக்கீடு இதோ title=

7th Pay Commission latest news: புத்தாண்டின் முதல் மாதத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் நல்ல செய்தி கிடைக்கும். 2022 ஜனவரியில் அகவிலைப்படி மீண்டும் ஒருமுறை அதிகரிக்கப்பட உள்ளது. அதாவது, ஊழியர்களின் சம்பளத்தில் மீண்டும் பம்பர் உயர்வு இருக்கும். ஏறக்குறைய மூன்று ஆண்டுகளாக, மத்திய ஊழியர்களின் ஃபிட்மென்ட் ஃபாக்டர் தொடர்பாக செய்யப்படும் கோரிக்கைகள் குறித்து இப்போது மத்திய அரசு முடிவெடுக்கக்கூடும்.

மீண்டும் ஊழியர்களின் சம்பளம் உயரும்

மத்திய அரசு ஊழியர்களின் ஃபிட்மென்ட் ஃபாக்டர் அதிகரித்தால், அவர்களின் அடிப்படை சம்பளம் பெரிய அளவில் உயரும். இருப்பினும், அகவிலைப்படி (DA Hike) எவ்வளவு உயர்த்தப்படும் என்பது முடிவு செய்யப்படவில்லை. நவம்பர் மாதத்திற்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு (AICPI) தரவுகள் வெளியாகியுள்ளன. ஏஐசிபிஐ குறியீட்டின் தரவுகளின்படி, இது 2 முதல் 3% வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது மத்திய ஊழியர்களுக்கு 31 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படுகிறது. ஜனவரியில் அகவிலைப்படியில் 2% முதல் 3% வரை அதிகரித்தால், ஊழியர்களுக்கு 33 முதல் 34 சதவிகிதம் வரை அகவிலைப்படி கிடைக்கத் தொடங்கும். அதாவது, மீண்டும் ஒரு முறை ஊழியரின் சம்பளம் அதிகரிக்கும்.

பணியாளர்களுக்கு புத்தாண்டில் நல்ல செய்தி கிடைக்கும்

டிசம்பர் 2021 இறுதிக்குள் மத்திய அரசின் சில துறைகளில் பதவி உயர்வுகள் இருக்கும். இது தவிர, பட்ஜெட் 2022 க்கு முன் ஃபிட்மென்ட் ஃபாக்டர் பற்றிய பேச்சுவார்த்தையும் நடக்கவுள்ளது. அதில் ஒரு முடிவு எடுக்கப்படலாம். இது நடந்தால், குறைந்தபட்ச அடிப்படை சம்பளமும் (Basic Salary) உயரும். தற்போது, ​​அகவிலைப்படியைப் பற்றி AICPI குறியீட்டின் தரவு என்ன சொல்கிறது என்பதை இங்கெ காண்போம். 

ஜூலை 2021 முதல் அகவிலைப்படி கணக்கீடு

ஜூலை 2021:  AICPI குறியீடு-353, டி.ஏ-31.81%
ஆகஸ்ட் 2021: AICPI குறியீடு-354, டி.ஏ-32.33%
செப்டம்பர் 2021: AICPI குறியீடு-355, டி.ஏ-32.81%
நவம்பர் 2021: AICPI குறியீடு-362.016
டிசம்பர் 2021: - -

டிஏ மதிப்பெண்களின் கணக்கீடு

ஜூலைக்கான கணக்கீடு- 122.8X 2.88 = 353.664
ஆகஸ்டுக்கான கணக்கீடு- 123X 2.88 = 354.24
செப்டம்பர் மாதத்திற்கான கணக்கீடு- 123.3X 2.88 = 355.104
நவம்பர் மாதத்திற்கான கணக்கீடு - 125.7X 2.88= 362.016

ALSO READ | 7th Pay Commission அதிர்ச்சி செய்தி: ஓமிக்ரான் காரணமாக மீண்டும் முடக்கப்படுகிறதா அகவிலைப்படி?

34% அகவிலைப்படியில் கணக்கீடு

அகவிலைப்படி 3% அதிகரித்தால், மொத்த அகவிலைப்படி 34% ஆக இருக்கும். ரூ.18,000 அடிப்படை சம்பளத்தில், மொத்த ஆண்டு அகவிலைப்படி (Dearness Allowance) ரூ.73,440 ஆக அதிகரிக்கும். வித்தியாசத்தைப் பற்றி பேசினால், சம்பளத்தில் ஆண்டு அதிகரிப்பு ரூ.6,480 ஆக இருக்கும்.

குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு
1. பணியாளரின் அடிப்படை சம்பளம் - ரூ 18,000
2. புதிய அகவிலைப்படி (34%) - ரூ.6120/மாதம்
3. அகவிலைப்படி இதுவரை (31%) - ரூ.5580/மாதம்
4. அகவிலைப்படி அதிகரிப்பு - 6120- 5580 = ரூ 540/மாதம்
5. ஆண்டு ஊதிய உயர்வு - 540X12 = ரூ.6,480

அதிகபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு
1. பணியாளரின் அடிப்படை சம்பளம் - ரூ 56,900
2. புதிய அகவிலைப்படி (34%) - ரூ 19,346/மாதம்
3. அகவிலைப்படி இதுவரை (31%) - ரூ 17,639/மாதம்
4. அகவிலைப்படி அதிகரிப்பு - 19,346-17,639 = ரூ. 1,707/மாதம் 
5. ஆண்டு ஊதிய உயர்வு - 1,707 X12 = ரூ 20,484

ALSO READ | 7th Pay Commission: ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு மத்திய அரசின் பரிசு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News