அடி தூள்... மார்ச் மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்: டிஏ உடன் இவையும் அதிகரிக்கும்

7th Pay Commission, DA Hike, TA Hike:  மார்ச் மாதத்தில் அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அறிவிப்பு வரும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. இதனுடன் ஊழியர்களுக்கு இன்னும் பல நல்ல செய்திகளும் கிடைக்கவுள்ளன். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 22, 2024, 10:55 AM IST
  • 50% அகவிலைப்படி.
  • பயணக் கொடுப்பனவு எவ்வளவு உயரும்?
  • வீட்டு வாடகை கொடுப்பனவிலும் திருத்தம் செய்யப்படும்.
அடி தூள்... மார்ச் மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்: டிஏ உடன் இவையும் அதிகரிக்கும்

7th Pay Commission, DA Hike, TA Hike: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. வரும் மாதம், அதாவது மார்ச் மாதம் அவர்களுக்கு அட்டகாசமாக இருக்கவுள்ளது. இந்த மாதத்தில் ஊழியர்களுக்கு பல வகையான நன்மைகள் கிடைக்கவுள்ளன. மார்ச் மாதத்தில் அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அறிவிப்பு வரும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. இதனுடன் ஊழியர்களுக்கு இன்னும் பல நல்ல செய்திகளும் கிடைக்கவுள்ளன். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Add Zee News as a Preferred Source

50% அகவிலைப்படி 

சமீபத்தில் வெளிவந்த டிசம்பர் மாத ஏஐசிபிஐ குறியீட்டு (AICPI Index) எண்களின் அடிப்படையில், அகவிலைப்படி 4 சதவிகிதம் அதிகரிக்கும் என்பது தெளிவாகியுள்ளது. தற்போது மத்திய அரசு உழியர்கள் 46% அகவிலைப்படியை (Dearness Allowance) பெற்று வருகிறார்கள். தற்போது இதில் 4% அதிகரிக்கப்பட்டால், ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 50% ஆக உயரும். இதனால் ஊழியர்களின் ஊதியத்தில் மிகப்பெரிய ஏற்றம் காணப்படும். இதற்கான அறிவிப்பு மார்ச் மாதம் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனினும், இந்த ஆண்டின் முதல் பாதியில் ஊழியர்களுக்கு இன்னும் பல பரிசுகள் காத்துக்கொண்டு இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்னும் சில மாதங்களில் மக்களவை தேர்தல் (Lok Sabha Election) வரவுள்ள நிலையில், அரசாங்கம், மத்திய அரசு ஊழியர்களை  (Central Government Employees) மகிழ்விக்கும் வகையில் சில முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடும் என கூறப்படுகின்றது 

பயணக் கொடுப்பனவு (TA)

அகவிலைப்படியைத்  தவிர பயணக் கொடுப்பனவு (Travel Allowance) தொடர்பான ஒரு மிகப்பெரிய அறிவிப்பும் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது அகவிலைப்படி உயர்வுக்கான ஒப்புதலுக்காக அனைவரும் காத்திருக்கிறார்கள். மத்திய அமைச்சரவை மார்ச் மாதத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கும் என கூறப்படுகின்றது. இதற்குப் பிறகு, அடுத்தடுத்து மற்ற கொடுப்பனவுகளிலும் ஏற்றம் இருக்கும். இது ஊழியர்களின் மொத்த சம்பளத்தை கணிசமாக உயர்த்தும்.

பயணக் கொடுப்பனவு  எவ்வளவு உயரும்?

பயணக்கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டால், அது ஊழியர்களுக்கு ஒரு முக்கிய விஷயமாக இருக்கும். டிஏவுக்குப் (DA)பிறகு, பயணக் கொடுப்பனவில் (TA) அதிகரிப்பு இருக்கலாம். பயணக் கொடுப்பனவை சம்பள பேண்டுடன் இணைத்தால், டிஏ ஹைக் இன்னும் அதிகமாக இருக்கும். பயணக் கொடுப்பனவு வெவ்வேறு ஊதியக் குழுக்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | குறைந்த முதலீட்டில் நிறைந்த வருமானம்-‘இந்த’ வியாபாரம் செய்து பாருங்கள்!

உயர் டிபிடிஏ நகரங்களில் (TPTA  Cities), 

- கிரேடு 1 முதல் 2 வரையிலான பணியாளர்களுக்கான பயணக் கொடுப்பனவு ரூ.1800 மற்றும் ரூ.1900 ஆகும். 

- கிரேட் 3 முதல் 8 வரையிலான பணியாளர்களுக்கு ரூ.3600 + டி.ஏ வழங்கப்படுகின்றது.

- மற்ற இடங்களுக்கு இந்த விகிதம் ரூ. 1800 + டி.ஏ ஆக உள்ளது.

வீட்டு வாடகை கொடுப்பனவிலும் திருத்தம் செய்யப்படும்

ஊழியர்களின் வீட்டு வாடகை கொடுப்பனவிலும் (House Rent Allowance) ஒரு பெரிய மாற்றம் காணப்படலாம். மார்ச் மாதத்தில் டிஏ உயர்வுக்குப் பிறகு எஹ்ஆர்ஏ -விலும் திருத்தம் செய்யப்படும். விதிகளின்படி, அகவிலைப்படி 50 சதவீதத்தைத் தாண்டும் போது இதில் திருத்தம் செய்யப்பட வேண்டும். தற்போது ஊழியர்களுக்கு 27, 24, 18 சதவீத HRA  வழங்கப்படுகிறது. இது நகரங்களின் X, Y, Z வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அகவிலைப்படி 50 சதவீதமானால், HRA 30, 27, 21 சதவீதமாக உயரும்.

மார்ச் மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 பரிசுகள் கிடைப்பது உறுதி

மார்ச் 2-24 -இல் மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 பரிசுகள் கிடைப்பது உறுதி என கூறப்படுகின்றது.

- அகவிலைப்படி அதிகரிப்பு
- பயணப்படி அதிகரிப்பு 
- HRA இல் திருத்தம். 

அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அறிவிப்பு ஹோலி பண்டிகைக்கு முன் வரலாம் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது ஜனவரி 2024 முதல் அமல்படுத்தப்படும். இந்த அறிவிப்பு வந்தவுடன் மற்ற அலவன்சுகளும் திருத்தப்படும். கூடுதலாக, ஜனவரி முதலான அகவிலைப்படி உயர்வு அரியர் தொகையும் ஊழியர்களுக்கு கிடைக்கும். மொத்தத்தில் மார்ச் மாதம் ஊழியர்கள் காட்டில் பண மழை என்று கூறினால் அது மிகையாகாது. 

மேலும் படிக்க | PM விஸ்வகர்மா திட்டம்... 5% வட்டியில் ₹3 லட்சம் கடன்... ₹500 உதவித்தொகை.. பலன் பெறுவது எப்படி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News