ராசி மாறுகிறார் சூரியன்: ஏப்ரல் 14 முதல் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கை பிரகாசிக்கும்

Sun Transit 2022: சூரியபகவான் ராசி மாறியவுடன் சில ராசிக்காரர்களுக்கு பல நல்ல பலன்கள் கிடைக்கும். சூரியனின் ராசி மாற்றத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்கள் தொடங்கும் என்பதை பார்க்கலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 9, 2022, 06:04 PM IST
  • மேஷ ராசிக்காரர்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும்.
  • குழந்தைகளினால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
ராசி மாறுகிறார் சூரியன்: ஏப்ரல் 14 முதல் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கை பிரகாசிக்கும் title=

ஜோதிடத்தில் சூரிய பகவானுக்கு தனி இடம் உண்டு. சூரியன் அனைத்து கிரகங்களுக்கும் ராஜா என்று அழைக்கப்படுகிறார். சூரியன் சுப பலன்களைத் தரும்போது அதிர்ஷ்டம் மழையாகப் பொழியும். 

ஏப்ரல் 14ம் தேதி சூரிய பகவான் தனது ராசியை மாற்றப் போகிறார். இந்த நாளில் சூரியன் மீன ராசியில் இருந்து மேஷ ராசியில் நுழைவார். ஏப்ரல் 14ஆம் தேதி சூரியன் மேஷ ராசியில் நுழைவதால் இந்த நாள் மேஷ சங்கராந்தி என்று அழைக்கப்படுகிறது. சூரியபகவான் ராசி மாறியவுடன் சில ராசிக்காரர்களுக்கு பல நல்ல பலன்கள் கிடைக்கும். சூரியனின் ராசி மாற்றத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்கள் தொடங்கும் என்பதை பார்க்கலாம். 

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்தில் ஆன்மீக நிகழ்ச்சிகள் நடைபெறும். குழந்தைகளினால் மகிழ்ச்சி அதிகரிக்கும். உயர்கல்வி, ஆராய்ச்சி போன்றவற்றிற்காக வெளிநாட்டு பயணம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

பணியிடத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இந்த மாற்றங்கள் பல மேன்மைகளை தரும். வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. 

மேலும் படிக்க | சனிபகவானின் தாக்கத்தால் இவர்களுக்கு இக்கட்டான நிலை: எச்சரிக்கை தேவை 

கடகம்: 

கடக ராசிக்காரர்களுக்கு சொத்து மூலம் வருமானம் அதிகரிக்கும். தாயிடமிருந்து பண வரவு இருக்கும். கலை மற்றும் இசையில் ஆர்வம் அதிகரிக்கும். பணியிடத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இருப்பிட மாற்றமும் சாத்தியமாகும். இந்த காலகட்டத்தில் வருமானம் அதிகரிக்கும். சொத்துக்கள் மூலம் வருமானம் வரும்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்கள் தாயின் ஆதரவை பெறுவீர்கள். போட்டித் தேர்வுகள் மற்றும் நேர்காணல்கள் போன்றவற்றில் பங்குபெறுபவர்களுக்கு வெற்றிகரமான இனிமையான முடிவுகள் கிடைக்கும். குடும்பத்தில் ஆன்மீக இசை நிகழ்ச்சிகள் நடக்கும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள்.

உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். முன்னேற்றப் பாதை பிரகாசமாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும்.

மீனம்:

கல்வி கற்கும் மாணவர்கள், உத்தியோகஸ்தர்கள் ஆகியோருக்கு மரியாதை அதிகரிக்கும். நம்பிக்கை அதிகரிக்கும். மீன ராசிக்காரர்களுக்கு இந்த காலத்தில் வேலையில் உற்சாகம் மேலோங்கி இருக்கும். பணியிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். தொழிலில் விரிவாக்கம் கூடும்.

மீன ராசிக்காரர்களுக்கு இடமாற்றம் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
பணிபுரியும் இடத்தில் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். சத்சங்கம், ஆன்மீக பயணங்கள் சாத்தியமாகும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தில் ஆதரவைப் பெறுவீர்கள்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | குரு பெயர்ச்சி: கன்னி ராசியினருக்கு பண வரவு உண்டாகும் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News