Watch Video: ‘எனக்கு வேலை கிடச்சிடுச்சு…..’ குஷியில் ஆட்டம் போடும் பெண்ணின் Video!!

ஒரு புதிய வேலை கிடைத்து விட்டால் அனைவருக்குமே மகிழ்ச்சிதான். நீண்ட நாள் காத்திருப்புக்குப் பிறகு நமக்கு ஒரு வேலை கிடைத்தால் நம் மனம் துள்ளிக் குதிக்கும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 1, 2020, 02:52 PM IST
  • நீண்ட நாள் காத்திருப்புக்குப் பிறகு நமக்கு ஒரு வேலை கிடைத்தால் நம் மனம் துள்ளிக் குதிக்கும்.
  • ஒரு பெண், தனக்கு புதிதாக வேலை கிடைத்ததால் அதற்கு மகிழ்ந்து, மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
  • ஒரு பாதுகாப்பு கேமராவில் பதிவாகிய இந்த காட்சியில் அவர் நடனமாடுவதைக் காண முடிகிறது.
Watch Video: ‘எனக்கு வேலை கிடச்சிடுச்சு…..’ குஷியில் ஆட்டம் போடும் பெண்ணின் Video!! title=

ஒரு புதிய வேலை கிடைத்து விட்டால் அனைவருக்குமே மகிழ்ச்சிதான். நீண்ட நாள் காத்திருப்புக்குப் பிறகு நமக்கு ஒரு வேலை கிடைத்தால் நம் மனம் துள்ளிக் குதிக்கும். சிலர் அந்த துள்ளலை மனதுக்குள்ளேயே வைத்துக்கொள்கிறார்கள். ஆனால், சிலர் அதை அழகாக வெளிப்படுத்துகிறார்கள். அப்படித்தான், சமீபத்தில் ஒரு பெண், தனக்கு புதிதாக வேலை கிடைத்ததால் அதற்கு மகிழ்ந்து, மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். வேலை கிடைத்தவுடன், அந்த மகிழ்ச்சியில் அவர் போடும் ஆட்டத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் (Social Media) வைரலாகி வருகிறது.

ஒரு பாதுகாப்பு கேமராவில் (Security Camera) பதிவாகிய இந்த காட்சியில், பெண் அலுவலக கட்டிடத்திற்கு வெளியே ஆனந்தமாய் நடனமாடுவதை (Dancing Woman) காண முடிகிறது.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

So I just hired this young girl and this was her response #explore #viral #viralvideos #laugh #comedy #justjokes #explorepage #atlanta #miami #houston #california #texas #ny #nyc #chicago

A post shared by @ dakara_spence on

அவரது முதலாளி, இன்ஸ்டாகிராம் பயனர் @dakara_spence இந்த கிளிப்பை, “நாங்கள் இப்போதுதான் இந்த இளம் பெண்ணை வேலைக்கு அமர்த்தினோம். அதற்கு அவர் காட்டும் மகிழ்ச்சியைப் பாருங்கள்” என்று எழுதி வீடியோவைப் பகிர்ந்தார்.

ALSO READ: ஆஹா, இப்டி குளிக்கிறது எம்புட்டு நல்லா இருக்கு.... ஜாலியாய் குளிக்கும் கரடி!!

பகிரப்பட்டதிலிருந்து, வீடியோ 5 லட்சத்திற்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டுள்ளது. மக்களிடமிருந்து ஊக்கமளிக்கும் பல கமெண்டுகள் வந்த வண்ணம் உள்ளன.

ஒரு பயனர், “அன்புள்ள கடவுளே, இந்த இளம் பெண்ணுக்கு உற்சாகமாக இருக்கும் ஒரு வேலையை ஆசீர்வதித்ததற்கு நன்றி. அவரை தொடர்ந்து ஆசீர்வதித்து, அவரை முன்னேற்றுங்கள். ஆமென்.” என்று எழுதினார்.

மற்றொருவர் பயனர் ”அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. அவர் ஒரு நிமிடம் பிரார்த்தித்து பின்னர் மகிழ்ச்சியாக நடனம் செய்ததாகத் தெரிகிறது.” என்று எழுதியுள்ளார்.

இந்த பெண்ணிற்கு கிடைத்துள்ள புதிய வேலைக்காக பலரும் அவரை வாழ்த்தியுள்ளனர். மேலும், அவர் தனது கடமையை சிறப்பாக நிறைவேற்றுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

ALSO READ: நண்டு சிகரெட் பிடிப்பதை பார்த்திருக்கிறீர்களா? நண்டின் புகைவிடும் அதிசய வீடியோ இதோ...

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News