ஏர்டெலின் வேற லெவல் புதிய ப்ரீபெய்ட் சலுகை: 33GB இலவச டேட்டா!!

வெறும் 399 ரீசார்ஜ்  மூலம் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை மூலம் ரூபாய் 2,000 வரை கேஷ்பேக்!!

Updated: Jul 25, 2019, 03:45 PM IST
ஏர்டெலின் வேற லெவல் புதிய ப்ரீபெய்ட் சலுகை: 33GB இலவச டேட்டா!!

வெறும் 399 ரீசார்ஜ்  மூலம் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை மூலம் ரூபாய் 2,000 வரை கேஷ்பேக்!!

தொலை தொடர்பு துறையில் போட்டிகள் அதிகரித்தே காணப்படுகிறது. குறிப்பாக ப்ரீபெய்ட் மொபைல் இணைப்புகளை பயன்படுத்துபவர்களுக்கு அதிக சலுகைகள் கிடைக்கிறது. தங்களின் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ளவும், புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் டெலிகாம் நிறுவனங்கள் தினத்தோறும் புதிய சலுகைகளை போட்டி போட்டுக்கொண்டு அறிவித்து வருகின்றன.

அந்த வகையில், பிரபல டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ள ஜியோ-வை மிஞ்சும் அளவுக்கு புதிய சலுகைகளை வாரி இறைத்து வருகிறது. தற்போது, ஏர்டெல் ரூ.399 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏர்டெல் நன்றி விளம்பரத்தின் (Airtel Thanks promotion) கீழ் சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுவந்த நிலையில், இப்போது ரூ . 399 பேக் மூலம் ரீசார்ஜ் செய்ய விரும்பும் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது.

ஏர்டெலின் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டத்தின் விவரம்:-

84 நாட்கள் வேலிடிட்டி உடன் தினமும் 33GB டேடாவுடன் 399 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தை ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகபடுத்தியுள்ளது ஏர்டெல். நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால், ஒரு நாளைக்கு 100 SMS என்ற சலுகையை ஏற்கனவே வழங்கி வந்தது ஏர்டெல் நிறுவனம். தற்போது, ரூ. 399 பேக் மூலம் ரீசார்ஜ் செய்ய விரும்பும், ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. 

தற்போது இந்த ப்ளானில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக 33GB டேட்டா வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த கூடுதல் டேட்டா சலுகை ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் மாறுபடும் என்றும் ஏர்டெல் அறிவித்துள்ளது. இந்த சலுகையை பெற வாடிக்கையாளர்கள் "ஏர்டெல் நன்றி ஆப்" (Airtel Thanks app) மூலம் ரீசார்ஜ் செய்ய வேண்டும் என ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதுமட்டும் இன்றி, மற்றொரு ப்ளானில் ஏர்டெல் டிவி பிரீமியம் (Airtel TV Premium), விங்க் மியூசிக் (Wynk Music), ஒரு ஆண்டு இலவச நார்டன் மொபைல் செக்யூரிட்டி (Norton Mobile Security) புதிய சாதனம் ஏதேனும் வாங்கினால் ரூபாய் 2,000 வரை கேஷ்பேக் (CASHBACK) ஆகியவற்றுக்கான இலவச சந்தாவையும் வழங்குகிறது ஏர்டெல் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.