தற்போது இந்தியாவில் வெயில் காலம் முடிவடைந்து மழைக்காலம் தொடங்கி உள்ளது. டெல்லி, சென்னை, மும்பை போன்ற முக்கிய நகரங்களில் மழை பெய்து வருகிறது. மழைக்காலம் தொடங்கியவுடன் கூடவே உடல்நல பிரச்சனைகளும் தொடங்கும். எனவே வீட்டையும், நம்மையும் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டியது அவசியம். குறிப்பாக உணவு விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். மழை பெய்யும் போது பலருக்கும் சூடாக எதாவது உணவுகளை சாப்பிட தோன்றும். பஜ்ஜி, காளான், சூடாக சமோசா, சிக்கன் 65, சூப் போன்ற உணவுகளை தேடி போய் சாப்பிடுவோம். மழைக்காலத்தில் வறுத்த உணவுகள், சாட் உணவுகள் போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவற்றில் அதிக அளவு பாக்டீரியா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. மழைக்காலத்தில் என்ன என்ன உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | கண்களில் இந்த அறிகுறிகள் இருக்கா? சுகர் லெவல் எகிறுது... ஜாக்கிரதை!!
மழைக்காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்
பச்சை இலை காய்கறிகள்: காய்கறிகள் உடலுக்கு நல்லது என்றாலும் மழை காலத்தில் சில காய்கறிகளை தவிர்க்க வேண்டும். இந்த சமயத்தில் ஈரப்பதம் அதிகம் இருப்பதால் பச்சை இலை காய்கறிகள், கீரை, முட்டைக்கோஸ், காலிஃபிளவர் போன்றவற்றை சாப்பிட வேண்டாம். இவற்றில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் வயிற்றில் நோய் தொற்றுகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இவற்றிற்கு பதிலாக பாகற்காய், பீன்ஸ் போன்ற காய்கறிகளை சாப்பிடலாம்.
கடல் உணவுகள்: மழைக்காலத்தில் மீன், இறால் போன்ற கடல் உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மழைக்காலத்தில் நீரில் ஏற்படும் அசுத்தம் காரணமாக கடல் வாழ் உயிரினங்களுக்கு நோய்க்கிருமிகள் பாதிப்பு இருக்கும். எனவே அவற்றை சாப்பிடும் போது நமக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
வறுத்த உணவுகள்: மழை பெய்யும் போது சமோசா, பக்கோடா போன்ற உணவுகளை சாப்பிட தோன்றும். சுவைக்காக இவற்றை எப்போதாவது சாப்பிடுவது நல்லது என்றாலும், இவை உங்கள் வயிற்று பகுதியில் தொந்தரவுகளை ஏற்படுத்தலாம். குறிப்பாக மழைக்காலத்தில் அஜீரணம், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே வறுத்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
கூல் டிரிங்க்ஸ்: உடலை நீரேற்றமாக வைத்து கொள்ள தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். பழச்சாறுகள் அல்லது பழங்களை மழை காலத்தில் சாப்பிடலாம். ஆனால், கடைகளில் விற்கப்படும் கூல் டிரிங்க்ஸ் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இவை உங்கள் செரிமான அமைப்பில் பாதிப்புகளை ஏற்படுத்தும் மற்றும் உடலில் உள்ள சத்துக்களை நீர்த்துப்போக செய்யும். அதற்கு பதில் இளநீர் அதிகம் குடிக்கலாம்.
காளான்: மழைக்காலத்தில் மண்ணில் இருந்து முளைக்கும் காளான்கள் அதிக பாக்டீரியா வளர்ச்சியைக் கொண்டிருக்கலாம். இதனால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. எனவே மழைக்காலத்தில் காளான் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. மேலும் எந்த ஒரு உணவையும் பச்சையாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். பச்சை உணவுகளில் பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.
தயிர்: மழைக்காலத்தில் தயிர் சாப்பிடுவது உடலின் குளிர்ச்சி தன்மையை அதிகரிக்கிறது. இதனால் சளி, காய்ச்சல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. உங்களுக்கு ஏற்கனவே சைனஸ் பிரச்சனைகள் இருந்தால் தயிர் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
மேலும் படிக்க | ஆனந்த் அம்பானி weds ராதிகா மெர்ச்சன்ட்... காதல் முதல் கல்யாணம் வரை... அனைத்தும் இதோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ