புதுடெல்லி: ஜோதிடத்தில் சில கிரகங்கள் மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது. உதாரணமாக- சனி, ராகு, கேது. இந்த கிரகங்களின் பார்வையால் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்.
அதனால்தான் இந்த கிரகங்களில் ஏற்படும் மாற்றங்களுக்கு மக்கள் மிகவும் பயப்படுகிறார்கள். ஏனெனில் இந்த மாற்றங்கள் மக்களின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
நிழல் கிரகமான ராகு மிகவும் ஆபத்தான கிரகமாக கருதப்படுகிறது. ராகு, ஒருவருக்கு துர்பலனைத் தருவதாக இருந்தால், அது ஒருவரின் வாழ்க்கையையே அழித்துவிடும் அளவு கெட்டப் பலன்களைத் தரும். ஏப்ரல் மாதம் ராகு தனது ராசியை மாற்றப் போகிறார்.
மீண்டும் பெரிய மாற்றத்திற்கு தயாராகும் ராகு, 4 லக்னத்தில் பிறந்தவர்களுக்கு அசுபமான பலன்களை கொடுக்கவிருக்கிறார்.
பாவக் கிரகமாகக் கருதப்படும் ராகு, 12 ஏப்ரல் 2022 அன்று தனது ராசியை மாற்றப் போகிறார். இதன் மூலம் சில லக்னத்தில் பிறந்தவர்களுக்கு கெட்ட காலம் தொடங்கலாம்.
எனவே, மனக் கஷ்டங்கள் மற்றும் இழப்புகளைத் தவிர்க்க, இப்போதே சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஏனென்றால், ஒரு கிரகம், பரிவர்த்தனையாவதற்கு சில காலம் முன்னரும், பின்னரும் அவற்றின் தாக்கம் தொடங்கிவிடும்.
எனவே, ஜாதகத்தில் ராகுவின் நிலைக்கேற்ப ராகுவை சாந்திப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். உதாரணமாக, நாய்க்கு பால் மற்றும் உணவை கொடுப்பது என்பதை எளிய பரிகாரமாக சொல்லலாம்.
ALSO READ | புதனின் சிறப்பு அருளால் சகல செல்வங்களையும் பெறும் ‘2’ ராசிகள்!
மேஷ லக்னம்
மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ராகுவின் சஞ்சாரம் அவமானகரமான சூழ்நிலையை உருவாக்கும். அவர்கள் சில விஷயங்களில் சிக்கிக் கொள்ளலாம். இது தவிர, உடல் அல்லது மன வலி ஏற்படலாம். ராகுவை சாந்திப்படுத்தினால், அதன் தாக்கம் குறையும்
ரிஷப லக்னம்
ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கும் ராகு சஞ்சாரம் மோசமான பலன்களைத் தரும். அவர்களின் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் பிரச்சனை வரலாம். புத்திசாலித்தனமாக செலவு செய்வதும், வார்த்தைகளை கவனமாக பயன்படுத்துவதும் அவசியமானது.
மகர லக்னம்
மகர லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ராகுவின் ராசி மாற்றத்திற்குப் பின் வரும் காலம் வேதனை தரும். தொழில் மற்றும் வேலையில் சிரமங்களை சந்திக்க நேரிடும். அம்மாவின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்படலாம். எல்லா விஷயத்திலும் பொறுமையாக செயல்படவும்.
தனுசு லக்னம்
தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ராகுவின் சஞ்சாரம் காதல் வாழ்க்கையில் சிரமங்களைத் தரும். ஒருவேளை சிலர் பிரிந்துவிடலாம். அபாயகரமான முதலீடுகளைச் செய்யாதீர்கள், இல்லையெனில் இழப்புகள் ஏற்படலாம். குடும்பத்திலும் கஷ்டங்கள் வரலாம்.
ALSO READ | செவ்வாய் தோஷத்தினால் திருமண தடையா? எளிய பரிகாரங்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR