சுக்கிரன் பெயர்ச்சி: ஏப்ரல் 27 முதல் இந்த ராசிகளுக்கு வாழ்க்கை ஒரு வரப்பிரசாதமாக அமையும்

Venus Transit: ஏப்ரல் 27 முதல் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அன்னை லக்ஷ்மி அருள்பாலிக்கப் போகிறார் என்பதை தெரிந்து கொள்வோம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 21, 2022, 06:43 PM IST
  • மேஷ ராசிக்காரர்களுக்கு நம்பிக்கை அதிகமாக இருக்கும்.
  • உத்தியோகத்தில் முன்னேற்ற பாதை அமையும்.
  • அன்னை லக்ஷ்மியின் அருளால் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.
சுக்கிரன் பெயர்ச்சி: ஏப்ரல் 27 முதல் இந்த ராசிகளுக்கு வாழ்க்கை ஒரு வரப்பிரசாதமாக அமையும் title=

ஜோதிடத்தில் சுக்கிரன் செல்வத்தின் காரணியாக கூறப்படுகிறது. சுக்கிரன் சுப பலன்களை தரும்போது அன்னை லட்சுமியின் அருள் பூரண்மாக கிடைக்கிறது. 

ஏப்ரல் 27, 2022 அன்று சுக்கிரன் தனது ராசி-யை மாற்றி மீன ராசிக்குள் பிரவேசிக்கிறார். சுக்கிரன் ராசி மாறியவுடன் சில ராசிகளுக்கு நல்ல நாட்கள் தொடங்கும். ஏப்ரல் 27 முதல் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அன்னை லக்ஷ்மி அருள்பாலிக்கப் போகிறார் என்பதை தெரிந்து கொள்வோம்.

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு நம்பிக்கை மிகுதியாக இருக்கும். சொத்து வாங்கும் வாய்ப்பு வரும். நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். குடும்பத்துடனோ நண்பர்களுடனோ சுற்றுலா செல்லக்கூடிய வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் ஆன்மீக பணிகள் நடைபெறலாம். 

திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். இந்த நேரத்தில் புதிய வேலைகளைச் செய்வது சாதகமாக இருக்கும். அன்னை மகாலட்சுமியின் சிறப்பு அருளும் கிடைக்கும்.

விருச்சிகன்: 

விருச்சிக ராசிக்காரர்களின் நம்பிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் பணிச்சுமை கூடும். தொழில் விரிவாக்கம் கூடும். தந்தையின் ஆதரவு கிடைக்கும். பண வரவும் லாபமும் இருக்கும். இந்த காலத்தில் நிதிநிலையும் வலுவாக இருக்கும்.

திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். கல்வித் துறையுடன் தொடர்புடையவர்களுக்கு இந்த நேரம் சாதகமாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் புதிய வேலையைத் தொடங்கலாம். புதிய வேலையில் லாபம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அன்னை லக்ஷ்மியின் அருளால் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.

மேலும் படிக்க | சனிப்பெயர்ச்சி: இந்த 3 ராசிகள் மீது சனி பகவானின் அருள் மழை, வாழ்க்கை மாறவுள்ளது 

கும்பம்:

கும்ப ராசிக்காரர்கள் முழு நம்பிக்கையுடன் இருப்பீர்கள். உத்தியோகத்தில் முன்னேற்ற பாதை அமையும். பணியின் நோக்கம் விரிவடையும். குடும்பத்தில் சமய காரியங்கள் நடைபெறலாம். அன்னை லட்சுமியின் அருளால் நிதிநிலை மேம்படும்.

இந்த காலகட்டத்தில் நம்பிக்கை அதிகரிக்கும். வேலை, வியாபாரம் போன்றவற்றிற்கு இந்த நேரம் சாதகமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களுடன் மகிழ்ச்சிகரமான நேரத்தை செலவிடுவீர்கள். கல்வித் துறையுடன் தொடர்புடைய மக்களுக்கு, இந்த நேரத்தை ஒரு வரம் என்றே சொல்லலாம். அனைத்து இடங்களிலிருந்தும் லாபம் எதிர்பார்க்கப்படுகிறது.

மீனம்:

குடும்பத்தில் ஆன்மீக காரியங்கள் நடைபெறலாம். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். மன நிம்மதி ஏற்படும். மீனம் ராசிக்காரர்களின் நிதி நிலை வலுவாக இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அன்னை லட்சுமியின் அருளால் செல்வம் பெருகும். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சூரியனின் கருணை மழையால் மதிப்பும் மரியாதையும் பெறும் 4 ராசிக்காரர்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News