சென்னை நாணயவியல் மற்றும் தபால் தலை சங்கத்தின் சார்பில், சென்னையில், நாணயம் மற்றும் தபால் தலை கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் சங்ககால நாணயங்கள், சுதந்திர இந்தியாவின் ஸ்டாம்ப் மற்றும் பண தாள்கள் வைக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu: An exhibition is being held in Chennai which is showcasing ancient coins, currency notes & stamps from India and all over the world. pic.twitter.com/aSBYvSvtmk
— ANI (@ANI) October 7, 2018
இந்த கண்காட்சியில், 100க்கும் மேற்பட்ட நாணயங்கள், பணத்தாள்கள் மற்றும் தபால் தலை உள்ளிட்டவை, பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. சங்க கால தமிழக நாணயங்கள், சுதந்திரத்திற்கு முற்பட்ட, பிற்பட்ட கால நாணயங்கள், இந்த கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும், 1,000 ரூபாயில் 52, 500 ரூபாயில் 60, 100 ரூபாயில் 64 என, ஒவ்வொரு நோட்டுக்கும், பல விதமானவை உள்ளன. ஒரே எண்களைக் கொண்ட, 'பேன்சி' நோட்டுகளும் இங்கு உள்ளன. அதேபோல், தபால் தலைகளும் விதவிதமாக உள்ளன.
இது மட்டுமின்றி இந்த கண்காட்சியில்,செப்புக்காசுகள், மன்னர்கால பயன்பாட்டுப் பொருட்கள் ஆகியவை குவியல் குவியலாக கண்காட்சியில் பார்வைக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன.