இஸ்லமாபாத் சர்வதேச விமான நிலையத்தில், முதியவர் ஒருவர் தனது விமானம் ரத்தான விரக்தியில் தனது ஆடைகளை தீயில் இட்டு நெறுப்பு மூட்டியுள்ளார்!
கடந்த நவம்பர் 15-அம் நாள் இஸ்லமாபாத் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படவிருந்த பாக்கிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானம் மோசமான வானிலை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த பயணி ஒருவர் தனது ஆடைகளை தீயிட்டு நெறுப்பு பற்றவைத்துள்ளார். இந்த சம்பவத்தினை இஸ்லமாபாத் விமான நிலைய நிர்வாகம் வீடியோவாக பதிவிட்டுள்ளனர்.
இஸ்லமாபாத் விமான நிலைய அதிகாரிகளின் தகவல்கள் படி, இச்சம்பவத்தில் ஈடுப்பட்ட பயணி செல்லவிருந்த விமானம் முதலில் தாமதமாக செல்லும் என அறிவித்துள்ளது. பின்னர் மோசமான வானிலை காரணமாக ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. நெடுநேரமாக இந்த விமானத்திற்கா காந்திருந்த பயணி, விமான சேவை நிறுவனத்தின் அறிவிப்பால் ஆத்திரம் அடைந்த தனது பையில் இருந்த ஆடைகளை எடுத்து தீயிட்டு கொலுத்தினார்.
உடனடியாக அருகில் இருந்த விமான நிலைய அதிகாரிகள் தீயினை அனைத்துள்ளனர். எனினும் அந்த பயணி தனது போராட்டத்தினை நிறுத்தியபாடில்லை. தொடர்ந்து விமான நிலைய அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர் விமான நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார், பின்னர் மண்ணித்து விடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் செல்லவிருந்த விமானம் கடந்த நவம்பர் 16-ஆம் நாள் பயணத்தை தொடர்ந்ததாக பாக்கிஸ்தான் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது, எனினும் குறிப்பிட்டப்பட்ட பயணி இந்த விமானத்தில் சென்றாரா என்ற கேள்விக்கு பதில் இல்லை...