தன் ஆண்குறியை விமர்சித்த மனைவி மீது வழக்கு தொடுத்த கணவர்!

தனது ஆண்குறியை விமர்சித்த மனைவி மீது வழக்கு தொடுக்க உள்ளதாக ஆஸ்திரேலியா கணவர் தெரிவித்துள்ளார்!

Updated: Feb 28, 2019, 05:30 PM IST
தன் ஆண்குறியை விமர்சித்த மனைவி மீது வழக்கு தொடுத்த கணவர்!
Representational Image

தனது ஆண்குறியை விமர்சித்த மனைவி மீது வழக்கு தொடுக்க உள்ளதாக ஆஸ்திரேலியா கணவர் தெரிவித்துள்ளார்!

ஆஸ்திரேலியாவை சேர்ந்த புதுமன தம்பதிக்கு இடையில் ஒரு புதுவித பிரச்சனை எழுந்து, விவாகரத்து வரை சென்றுள்ளது. ஆம்,... மேற்குறிய தம்பதியருக்கு சமீபத்தில் திருமணம் ஆகியுள்ளது. திருமணத்திற்கு முன்பு வரை இருவரும் தனிமையில் இருந்தது இல்லை, மேலை நாட்டில் திருமணத்திற்கு முன் உடல் உறவு இல்லை என்பது ஆச்சரியமான விஷயம் தான், அவ்வாரே மணப்பெண்ணும் நினைத்துள்ளார்.

ஆனால் தனது முதல் இரவு நாள் அன்றே தனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியான ஆச்சரியம் தெரியவந்துள்ளது. தனது கணவர் இதுநாள் வரை உடலுறவுக்கு ஒப்புக்கொள்ளாதமைக்கு காரணம் அவரது ஆணுறுப்பு மிக சிறியதாக இருந்ததாலும், இந்த விஷயம் தனது காதலிக்கு தெரிந்தால் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள மாட்டார் என நினைத்து திருமணத்திற்கு முன்பு உடலுறவுக்கு மறுத்துள்ளார்.

திருமணம் ஆன பின்பு என்ன செய்ய முடியும்?, அதுவும் காதல் திருமணம் வேறு. தன் கணவரின் நிலமையை புரிந்துக்கொண்ட மணப்பெண் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் பிரபல மருத்துவ ஆலோசனை இணையத்தில் தனது கணவரின் ஆணுறுப்பு குறைபாடு குறித்து விவாதித்துள்ளார்.

இந்த விவகாரம் ரகசியமாகவே வைக்கப்பட வேண்டும் என எண்ணி தான் அவர் எச்சரிக்கையாக அடிகளை எடுத்து வைத்துள்ளார், ஆனால் எப்படியோ இந்த விஷயம் அவரது கணவர் காதுக்கு எட்டியுள்ளது. நண்பர் ஒருவர் இந்த பதிவை காண்பிக்க அறிந்துக்கொண்ட கணவர் இது குறித்து தன் மனைவியிடம் கடிந்துள்ளார். விஷயம் பூதகரமாக மாற, இறுதியில் கணவர் தனது திருமண பந்தத்தை முறித்துக்கொள்ள முயற்சித்துள்ளார். ஆனால் தற்போது வரை உறவினர்கள் இருவரையும் சமாதனம் செய்து வருவதாக தெரிகிறது.

இதுநாள் வரை இந்த பதிவில், குறைபாடு யாருக்கு என்பது குறித்து விளக்கப்படாதது இருவரின் திருமண வாழ்வினையும் முறிக்காமல் உள்ளது. ஒரு வேலை அந்த ஆணின் குறைபாடு அறிந்த யாரேனும் அவரது பெயரை இந்த பதிவில் குறிப்பிட்டுவிட்டால்?...