ALERT இன்று முதல் தொடர்ந்து 5 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது -முழு பட்டியல்

ஒருபுறம், வங்கி ஊழியர்கள் செப்டம்பர் மாதத்தில் 12 விடுமுறைகளை அனுபவிக்க முடியும், மறுபுறம் வங்கி தொடர்பான வேலை உள்ளவர்கள் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 8, 2021, 07:04 PM IST
  • இந்த மாதம் எந்த மாநிலத்தில் ​​எப்போது வங்கிகள் மூடப்படும் என்பதை அறிக.
  • செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 6 நாட்கள் வார விடுமுறை இருக்கும்.
  • செப்டம்பர் 8 முதல் தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு வங்கி செயல்படாது.
ALERT இன்று முதல் தொடர்ந்து 5 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது -முழு பட்டியல் title=

புதுடெல்லி: செப்டம்பர் மாதத்தில் வங்கிக்கு அதிக விடுமுறைகள் நாட்கள் உள்ளன. இந்த மாதம் மொத்தம் 12 விடுமுறை நாட்கள் இருக்கும். எனவே, வங்கித் துறை தொடர்பான வேலைகளைச் செய்வதற்கு முன், இந்த மாதம் எந்த மாநிலத்தில் ​​எப்போது வங்கிகள் மூடப்படும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். ஒருபுறம், வங்கி ஊழியர்கள் செப்டம்பர் மாதத்தில் 12 விடுமுறைகளை அனுபவிக்க முடியும், மறுபுறம் வங்கி தொடர்பான வேலை உள்ளவர்கள் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இன்று முதல் தொடர்ந்து 5 நாட்களுக்கு வங்கிகள் மூடப்படும். இந்த மாதம் வங்கி எந்த மாநிலங்களில் ​​எப்போது மூடப்படும் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.

வங்கிகள் தொடர்ந்து 5 நாட்கள் மூடப்பட்டிருக்கும்:
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்ட பட்டியலின்படி, செப்டம்பரில் மொத்தம் வங்கிகளுக்கு 7 நாள் விடுமுறைகள் உள்ளன. ஆனால் இந்திய துணைக்கண்டத்தில் அணைந்து இடங்களுக்கு ஒரே மாதிரி விடுமுறை இருப்பது இல்லை. இவற்றில் சில நாட்கள் மாநில சிறப்பு விடுமுறை நாட்களாகும். இது தவிர, வங்கிகளுக்கு செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 6 நாட்கள் வார விடுமுறை இருக்கும். அதாவது வார விடுமுறை மற்றும் வங்கி விடுமுறை சேர்த்து இந்த மாதத்தில் மொத்த விடுமுறை நாட்களின் எண்ணிக்கை 12 ஆகும். எனவே வங்கித் தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்கு முன்பு இந்தப் பட்டியலைச் சரிபார்க்கவும். மேலும், வங்கிகள் செப்டம்பர் 8 முதல் தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு செயல்படாது என்பதையும் நினைவில் கொள்க.

ALSO READ | இந்த வங்கியில் உங்கள் கணக்கு இருக்கிறதா? அக்டோபருக்குள் இந்த வேலையை செய்யவும்!

விடுமுறை நாட்களின் முழு பட்டியலை இங்கே பார்க்கவும்:
செப்டம்பர் 5 - ஞாயிறு
செப்டம்பர் 8 - ஸ்ரீமந்த சங்கர்தேவ தேதி (குவகாத்தி, அசாம்)
9 செப்டம்பர் - தீஜ் ஹரித்தாலிகா (கேங்டாக், சிக்கிம்)
செப்டம்பர் 10 - விநாயகர் சதுர்த்தி (அகமதாபாத், பெலாப்பூர், பெங்களூர், புவனேஸ்வர், சென்னை, ஹைதராபாத், மும்பை, நாக்பூர், பனாஜி)
செப்டம்பர் 11 - மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை / விநாயகர் சதுர்த்தியின் இரண்டாவது நாள் (பனாஜி)
12 செப்டம்பர் - ஞாயிறு
17 செப்டம்பர் - கர்ம பூஜை (ராஞ்சி)
செப்டம்பர் 19 - ஞாயிறு
20 செப்டம்பர் - இந்திராஜத்ரா (கேங்டாக், சிக்கிம்)
செப்டம்பர் 21 - ஸ்ரீ நாராயண குரு சமாதி நாள் (கொச்சி, திருவனந்தபுரம்)
செப்டம்பர் 25 - மாதத்தின் நான்காவது சனிக்கிழமை
26 செப்டம்பர் - ஞாயிறு

ஆன்லைன் பேங்கிங் செயல்படும்:
இருப்பினும், இந்த நேரத்தில் ஆன்லைன் வங்கியின் செயல்பாடு பாதிக்கப்படாது. அதாவது வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் பரிவரத்தனையில் எந்த பிரச்சனையும் இருக்காது. வழக்கம் போல் அனைத்து சேவைகளும் மேற்கொள்ளலாம்.

ALSO READ | செப். 1 முதல் பல முக்கிய விதிகளில் மாற்றம்; உங்களுக்கு நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News