Nainital Tour: அமைதி.. அழகு.. நைனிதாலில் கட்டாயம் பார்க்க வேண்டிய சிறந்த 7 இடங்கள்..

Weekend Trips In Nainital: வார விடுமுறை நாட்களில் அமைதியான சூழலில் உங்கள் நேரத்தை செலவிட நினைக்கிறீர்கள் என்றால், அதுவும் இந்த கோடையில், உங்களுக்கு சிறந்த இடமாக நைனிதால் இருக்கும். நைனிதாலில் பார்க்க வேண்டிய சிறந்த இடங்கள் குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

Written by - Shiva Murugesan | Last Updated : May 23, 2024, 04:38 PM IST
Nainital Tour: அமைதி.. அழகு.. நைனிதாலில் கட்டாயம் பார்க்க வேண்டிய சிறந்த 7 இடங்கள்.. title=

Nainital Tourist Places List In Tamil: இந்தியாவின் உத்தராகண்ட மாநிலத்தில் உள்ள குமாவுன் கோட்டத்தில் அமைந்துள்ள மாநகரம் தான் நைனிதால் (Nainital). உத்தராகண்ட மாநிலத்தின் தலைநகரம் டேராடூன் ஆக இருந்தாலும், உயர் நீதிமன்றம் மற்றும் ஆளுநர் மாளிகை நைனிதாலில் தான் அமைந்துள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் பனிமூட்டம் சூழ்ந்த மலைகள், இதமான காலநிலை, அமைதியான ஏரிகள் என வசீகரிக்கும் நைனிதாலுக்கு நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் சுற்றுலா செல்ல சிறந்த இடமாகும். நகர்ப்புற அலைச்சல் வாழ்க்கையில் இருந்து சற்று தள்ளி அமைதியை விரும்பினால் நைனிதாலுக்கு செல்லலாம். வாருங்கள் நைனிடாலில் பார்க்க வேண்டிய சில சிறந்த இடங்களை குறித்து பார்ப்போம். 

1.நைனி ஏரி
நைனிடாலின் மத்தியில் அழகிய நைனி ஏரி உள்ளது. இது நைனா தேவியின் பெயரால் அழைக்கப்படுகிறது. ஏனெனில் அவர் இந்த இடத்தை தனது இருப்பிடமாக தேர்ந்தெடுத்ததாக உள்ளூர்வாசிகள் நம்புகிறார்கள். இதுமிகவும் பிரபலமான ஏரிகளில் ஒன்றாகும். மலைகளால் சூழப்பட்ட பிறை போன்ற வடிவத்தில் இருக்கும், இந்த ஏரியில் படகு சவாரி செய்வதற்கும், அதைச் சுற்றியுள்ள பாதையில் நடந்துக்கொண்டே அமைதியான சூழலை அனுபிக்கலாம். அங்கு சூரியன் மறையும் போது, அதன் மேற்பரப்பு வானத்தின் வண்ணமயமான சாயல்களைப் பிரதிபலிக்கும்., அது உங்கள் கண்களுக்கு ஒரு ஹிப்னாடிக் காட்சியாக நல்ல அனுபவத்தை அளிக்கும். இந்த ஏரியானது காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை திறந்திருக்கும்.

2. ஸ்னோ வியூ பாயிண்ட்
த்ரிசூல், நந்தா தேவி மற்றும் நந்தா கோட் உள்ளிட்ட பனி மூடிய இமயமலைச் சிகரங்களின் பரந்த காட்சிகளை ரசிக்க ஸ்னோ வியூ பாயிண்ட்டைப் பார்க்க கட்டாயம் செல்ல வேண்டும். மிக அழகான கேபிள் கார் மூலம் அல்லது நடந்தே மலையேறி இங்கு செல்லலாம். அங்கு பைன் மற்றும் தேவதாரு காடுகள் போன்றவற்றை சுற்றி பார்க்க நிறைய இடங்கள் உள்ளன. இது பறவைகளை விரும்பும் பார்வையாளர்களுக்கும் மற்றும் புகைப்படக்காரர்களுக்கு ஏற்ற இடமாக இருக்கிறது. காலை 10:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை ஸ்னோ வியூ பாயின்ட் திறந்திருக்கும்.

மேலும் படிக்க - இந்த இடங்களுக்கு சுற்றுலா சென்றால் கம்மி விலையில் ரூம்கள் கிடைக்கும்!

3.நைனா சிகரம்
தனிமை மற்றும் சாகசத்தை விரும்புவோர், நைனா சிகரம் என்று பிரபலமாக அறியப்படும் சைனா பீக் சிகரத்தை தவறவிடாதீர்கள். மிக உயரமான மலை உச்சி மற்றும் மிக அழகான இடங்களில் ஒன்றாகும். இந்த உயரமான இமயமலை சிகரத்தில் ஏறி  கீழே உள்ள நகரத்தின் பரந்த காட்சிகளை பார்க்காமல் இருந்துவிடாதீர்கள். அடர்ந்த வனப்பகுதி மற்றும் வீரியம் நிரம்பிய கடுமையான பாதை வழியாக நடக்கும்போது, மலையேற்றத்தில் ஏதோ சாதனை புரிந்ததாக உணர்வீர்கள். பனி மூடிய இமயமலை சிகரங்கள் தவறவிடாதீர்கள்.

4. பீம்டல்
நைனிடாலிலிருந்து சிறிது தூரத்தில் (சுமார் 22 கிமீ) இருக்கும் அமைதியான நகரம் பீம்டால். அழகிய பசுமையால் சூழப்பட்ட இயற்கை எழில் கொஞ்சும் மலைவாசஸ்தலமாகும். அங்கு இருக்கும் அமைதியான ஏரியில் படகு சவாரி செய்யலாம். பலவகை பறவைகள் காணலாம். பீமேஷ்வர் மகாதேவ் கோவில் தலங்களைப் பார்த்து மகிழலாம். பீம்தால் பாராகிளைடிங்கிற்கும் பிரபலமானது. சிலிர்ப்பான அனுபவங்களை பெறலாம்.

5. பாங்கோட் மற்றும் கில்பரி பறவைகள் சரணாலயம்
பறவை ஆர்வலர்கள் மற்றும் வனவிலங்கு ஆர்வலர்களுக்கு, பாங்கோட் மற்றும் கில்பரி பறவைகள் சரணாலயம் நைனிடாலில் தவறாமல் பார்க்க வேண்டிய ஒன்று. நைனிடாலில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த சரணாலயம், ஹிமாலயன் கிரிஃபோன், லாம்மர்ஜியர், ரூஃபஸ் பெல்லிட் வூட்பெக்கர் போன்ற பலவகையான பறவை இனங்களுக்கு தாயகமாக உள்ளது. இங்குள்ள அமைதியான சூழலில் பறவைகளுடன் நீங்கள் பயணம் செய்யும் அனுபவம் அற்புதமாக இருக்கும். இயற்கை ஆர்வலர்களுக்கு இது சிறந்த இடமாக உள்ளது. சத்தமில்லாத நகரங்களுக்கு வெளியே அமைதி காண விரும்புபவர்கள் கண்டிப்பாக செல்லலாம். நைனிதாலின் காப்புக் காட்டில் பாங்கோட் மற்றும் கில்பரி பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது.

மேலும் படிக்க - வெளிநாடு சுற்றுலா... ‘இந்த’ நாடுகளுக்கு செல்ல... அதிகம் செலவாகாது..!!

6.முக்தேஷ்வர்
முக்தேஷ்வர் குமாவோன் மலைகளில் அமைந்துள்ள ஒரு சிறிய இயற்கை அழகு மற்றும் மத முக்கியத்துவம் வாய்ந்த நகரம் ஆகும். சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மலை உச்சியில் அமைந்துள்ள முக்தேஷ்வர் கோயில், சுற்றியுள்ள பனி மூடிய சிகரங்களின் அருமையான காட்சிகளை உங்களுக்கு வழங்கும். இங்கு ராப்பல்லிங், மலை ஏறுதல் மற்றும் கேம்பிங் போன்ற அனுபவங்களையும் பெறலாம். 

7.ராணிகேத்
நைனிடாலில் இருந்து சுமார் 60 கிமீ தொலைவில் அமைந்துள்ள ராணிகேத், இமயமலை மற்றும் அடர்ந்த காடுகளின் சிறந்த காட்சிக்காக பிரபலமாக அறியப்படுகிறது. காலனித்துவ காலத்தின் பழங்கால கட்டிடக்கலை மற்றும் பைன்-ஓக் மரங்களுக்கு இடையே அமைதியான நடைப்பயணங்கள் ஆகியவற்றுடன் இந்த இடத்தின் அமைதி ரசிக்க விடுமுறையில் செல்ல இது சிறந்த இடமாக இருக்கிறது.

நைனிடால் அமைதியான ஏரிகள், பனிமூட்டமான மலைகள் கொண்ட நகரமாகும். சத்தமில்லாத உலகத்திலிருந்து நீங்கள் தப்பித்து அமைதியான சூழலை விரும்பினால் இது ஒரு சிறந்த இடமாகும். உங்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். இந்த அற்புதமான இடத்தை காதலிக்க நைனிடாலுக்கு சுற்றுலா செல்லுங்கள்.

மேலும் படிக்க - கேரளா சுற்றுலா செல்ல பிளானா.... அப்ப இந்த செய்தி உங்களுக்குத் தான்..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News