Shopping list ready-யா? Amazon மற்றும் Flipkart-ல் அதிரடி discounts, அசத்தலான offers!!

பண்டிகை கால விற்பனையில், நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்க பல சலுகைகளையும் தள்ளுபடிகளையும் அளிப்பதாக அறிவித்துள்ளன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 15, 2020, 07:50 PM IST
  • Amazon-ல் 54,900 விலைகொண்ட iPhone 11 தள்ளுபடி செய்யப்பட்ட பிறகு, 47,999 ரூபாயில் கிடைக்கும்.
  • Flipkart வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்தமான பொருட்களை வெறும் 1 ரூபாய் செலுத்தி, சேல் துவங்குவதற்கு முன்னரே முன்பதிவு செய்து கொள்ளலாம்.
  • இந்த அனைத்து டீல்களுக்கும் 9 மாதங்களுக்கான No Cost EMI வசதியும் வழங்கப்படுகிறது.
Shopping list ready-யா? Amazon மற்றும் Flipkart-ல் அதிரடி discounts, அசத்தலான offers!! title=

Festive Season Sale 2020: இந்த பண்டிகை காலத்தில் இ-காமர்ஸ் தளங்களான பிளிப்கார்ட் மற்றும் அமேசான் மீண்டும் அதிரடி விற்பனைக்காக தயாராகி வருகிறார்கள். இந்த விற்பனையில், நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்க பல சலுகைகளையும் தள்ளுபடிகளையும் அளிப்பதாக அறிவித்துள்ளன. பிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் நாட்கள் (Big Billion Days Sale 2020) விற்பனை 2020 அக்டோபர் 16 முதல் தொடங்குகிறது. அமேசானின் The Great Indian Festival விற்பனை 17 அக்டோபர் முதல் தொடங்கும். பிரைம் உறுப்பினர்களுக்கு அமேசான் விற்பனை அக்டோபர் 16 முதலே தொடங்குகிறது.

Amazon தனது தளத்தில் HDFC கார்டுகளைப் பயன்படுத்தும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கூடுதல் தள்ளுபடியை வழங்குகிறது. Flipkart, SBI கார்டை பயன்படுத்தும் தனது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் தள்ளுபடியை வழங்குகிறது. மேலும், Flipkart வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்தமான பொருட்களை வெறும் 1 ரூபாய் செலுத்தி, சேல் துவங்குவதற்கு முன்னரே முன்பதிவு செய்து கொள்ளலாம் என்ற வசதியும் உள்ளது.

ALSO READ: SBI Card வைத்திருப்பவர்களுக்கு Good News: உங்கள் card-ன் பலம் கூடியது!!

Apple சமீபத்தில் தனது புதிய மாடலான iPhone 12 ஐ அறிமுகப்படுத்தியது. இதன் காரணமாக இரு தளங்களும் தங்கள் தளத்தில் பழைய iPhone மாடலுக்கு பெரும் தள்ளுபடியை வழங்கியுள்ளன. Amazon-ல் 54,900 விலைகொண்ட iPhone 11 தள்ளுபடி செய்யப்பட்ட பிறகு, 47,999 ரூபாயில் கிடைக்கும். Flipkart, iPhone 11 Pro-வில் ரூ .26,600 வரையிலான தள்ளுபடியை அளிக்கிறது.

இதனுடன், சாம்சங், ரியல்மீ, ரெட்மி, போக்கோ, விவோ மற்றும் மோட்டோரோலா ஸ்மார்ட்போன்களிலும் பெரும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. Amazon, One Plus-சிலும் அதிரடியான சலுகைகளை வழங்குகிறது. One Plus 8-ன் 6 GB + 128 GB-யில் சுமார் 5 ஆயிரம் வரையிலான தள்ளுபடியை வழங்குகிறது. மேலும் Samsung Galaxy S10+ல் 34000 வரை தள்ளுபடி இருக்கும். இந்த அனைத்து டீல்களுக்கும் 9 மாதங்களுக்கான No Cost EMI வசதியும் வழங்கப்படுகிறது. 

ALSO READ: SBI வழங்கும் விழாக்கால சிறப்பு சலுகைகள்: விவரம் இதோ!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News