SBI வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி! வீடு, வாகனக் கடன் வட்டி, EMI குறையும்

முன்னதாக ஏப்ரல் மாதத்தில், எஸ்பிஐ வீட்டுக் கடன் வட்டி விகிதத்தை 6.70 சதவீதமாக குறைத்தது. இதனுடன், பெண் வாடிக்கையாளர்களுக்கு , அதில் மேலும் 0.05 சதவீதம்  குறைக்கப்பட்டது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 15, 2021, 10:44 AM IST
  • எஸ்பிஐ கடன் வட்டி குறைப்பு
    எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் இதன் மூலம் பயனடைவார்கள்
    வீட்டுக் கடன், வாகனக் கடன் இஎம்ஐ குறையலாம்
SBI வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி! வீடு, வாகனக் கடன் வட்டி, EMI குறையும் title=

SBI Loan Rate: நாட்டின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) கடனுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. பண்டிகை காலத்தின் தொடக்கத்தில், எஸ்பிஐ அடிப்படை விகிதத்தை 5 அடிப்படை புள்ளிகள், அதாவது  0.05 சதவீதம் குறைத்துள்ளது. இந்நிலையில், எஸ்பிஐயின் அடிப்படை விகிதம் 7.45% ஆக உள்ளது. புதிய கட்டணங்கள் செப்டம்பர் 15 முதல் அதாவது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.

எஸ்பிஐ கடன் வட்டி விகிதங்கள் குறைந்தன
இது தவிர, எஸ்பிஐ (SBI) தனது முதன்மை கடன் விகிதத்தை 5 bps குறைத்து  12.20 சதவீதமாக ஆக்கியுள்ளது. கடந்த வாரம் கோடக் மஹிந்திரா வங்கி வீட்டு கடன் விகிதங்களை 15 அடிப்படை புள்ளிகள் குறைத்து 6.5%ஆக குறைத்தது குறிப்பிடத்தக்கது. இது வங்கித் துறையில் மிகக் குறைந்த விகிதங்களில் ஒன்றாகும்.

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் பயனடைவார்கள்
எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் இந்த வட்டி விகிதக் குறைப்பின் பலனை  பெறுவார்கள். எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் இப்போது வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் உள்ளிட்ட பல்வேறு வகையான கடன்களுக்கு செலுத்து மாதாந்திர தவணைகள் அதாவது இஎம்ஐ குறையலாம். 

ALSO READ | மாதம் ₹60,000 சம்பாதிக்க SBI வழங்கும் அரிய வாய்ப்பு; முழு விபரம்..!!

 

வீட்டுக் கடன் விகிதங்கள் இதற்கு முன்னரும் குறைக்கப்பட்டது
முன்னதாக ஏப்ரல் மாதத்தில், எஸ்பிஐ வீட்டுக் கடன் வட்டி விகிதத்தை 6.70 சதவீதமாக குறைத்தது. இதனுடன், பெண் வாடிக்கையாளர்களுக்கு , அதில் மேலும் 0.05 சதவீதம்  குறைக்கப்பட்டது.  அடிப்படை வட்டி என்பது குறைந்தபட்ச வட்டி விகிதம். அதற்கு கீழே எந்த வங்கியும் கடன் கொடுக்க முடியாது. இந்த விகிதம் இந்திய ரிசர்வ் வங்கியால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  

ALSO READ | SBI Door Step Banking: இனி உங்கள் வீடு தேடி பணம் வரும்..!!

ஜூலை 2010 க்குப் பிறகு எடுக்கப்பட்ட அனைத்து வீட்டுக் கடன்களும் சராசரி நிதி செலவின் அடிப்ப்டையிலான வட்டி விகிதங்கள் அல்லது Marginal Cost of Funds based Lending Rate (MCLR) என்பதாகும். இதன் அடிப்படையில் வங்கிகள் கடனுக்கான வட்டிகளை நிர்ணயிக்கின்றன. ரிசர்வ் வங்கியால் நிர்ணயிக்கப்பட்ட தற்போதைய MCLR விகிதம் 6.55-7.00 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. 

ALSO READ | SBI வழங்கும் கொரோனா கடன்; குறைந்த வட்டியில் ₹5 லட்சம்; விண்ணபிப்பது எப்படி..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News