கருத்தடை மாத்திரைகள் கேட்பது தவறா? கண்டுக்கொள்ளுமா தமிழக அரசு?

கருத்தடை மாத்திரைகளை வாங்குவதில் பெண்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்வதால், தமிழக அரசிடம் இதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைக்கின்றனர்.

Written by - Geetha Sathya Narayanan | Last Updated : Jul 7, 2022, 03:22 PM IST
  • கருத்தடை மாத்திரைகள் எளிதாக கிடைத்தால் சமூக சீரழிவு அதிகரிக்கும்?
  • கருத்தடை மாத்திரைகளின் விற்பனை குறித்து விழிப்புணர்வு வேண்டும்.
கருத்தடை மாத்திரைகள் கேட்பது தவறா? கண்டுக்கொள்ளுமா தமிழக அரசு? title=

சென்னை போன்ற நகரப்பகுதிகளில் வசிக்கும் பெண்களின் சுதந்திரம் என்பது மருந்தகங்களில் ஒரு பக்கம் இன்னும் முடக்கப்பட்டுதான் உள்ளது. திருமணம் முடிந்த பெண்களாகினும், திருமணம் ஆகாத பெண்கள் ஆகினும் பெண்கள் என்றாலே ஒரு குறிப்பிட்ட வரையரைக்குள் கட்டுப்படுத்தப்படுகிறார்கள். இந்த வரையரைக்கு சம்பந்தப்பட்டது தான் கருத்தடை மாத்திரைகளின் உபயோகம். 

முன்பெல்லாம் பெண்கள் மாதவிடாய் சார்ந்த உபகரணங்களை வாங்குவதற்கே தயங்கி வந்தனர். இப்போது கூட சில பெண்களே தைரியமாக நாப்கிங்களை வாங்கிச்செல்கின்றனர். பெரும்பாலான பெண்கள் மருந்தகத்திற்கு செல்லவே தயங்குகின்றனர். சிலர் சென்றாலும் அங்கு இருக்கும் கூட்டம் குறையும்வரை நின்றிருந்து யார் காதிலும் கேட்காமல் மருந்தக ஊழியரின் காதில் மட்டும் கேட்குமாறு நாப்கின்களை கேட்டு வாங்குகிறார்கள்.

இந்நிலையில், ஒரு பெண் மருந்தகங்களுக்கு சென்று கருத்தடை மாத்திரை, அவசர கருத்தடை மருந்துகளை கேட்டால் அப்பெண்ணின் முகத்தை ஒரு 4 வினாடிகள் குறுகுறுவென பார்க்காமல் மருந்தக பணியாளர்கள் விடுவதில்லை.

மேலும் படிக்க | எச்சரிக்கை! அளவிற்கு அதிகமான பாராசிட்டமால் மருந்தால் மரணம் கூட சம்பவிக்கலாம்!

Contraceptive pills - Healthline

அந்த பெண்ணின் சுய விருப்பம், சூழ்நிலை பற்றி ஆராயவேண்டும் என்று கூட சிலருக்கு தோன்றுகிறது. மருந்தகங்களில் அவசர கருத்தடை மாத்திரைகள் "ஓவர் தி கவுன்டர்" எனப்படும் பிரஸ்கிரிப்ஷன் தேவையில்லாமல் வழங்கப்படும் மருந்தாக உள்ளது. ஆனால் பல மருந்தகங்களில் பிரஸ்கிரிப்ஷன் இல்லாமல் கருத்தடை மாத்திரைகளைக் கொடுக்க மறுக்கின்றனர். பெண்கள் பலர் தங்களின் வாழ்வில் எதிர்பாராத விஷயங்களை எதிர்கொள்கின்றனர்.

நண்பர்களின் துரோகம், எதிர்பாராத நபரால் கசப்பான சம்பவம், நம்பிய ஒருவரால் இக்கட்டான சூழ்நிலை, கணவரின் வற்புறுத்தல், பெண்ணிற்கு இஷ்டம் இல்லாவிட்டாலும் குழந்தைக்காக வீட்டோர் செய்தும் வற்புறுத்தல், மயக்கநிலையில் நடந்த துர் சம்பவம் என ஒருவரால் கற்பனை செய்ய முடியாத சூழல்களை பெண்கள் கடந்து வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஏற்கெனவே இந்த சூழ்நிலையில் எப்படி திடமாக இருக்க வேண்டும் என்று அப்பெண்களுக்கு தெரியாத நேரத்தில், இவ்வாறு மருந்தக ஊழியர்களோ, நர்ஸ்களோ தங்களின் சந்தேகப்பார்வையோடு பார்ப்பதை அனைத்து பாதிக்கப்பட்ட பெண்களும் சகித்துக்கொள்வதில்லை. 

மேலும் படிக்க | Fatty Liver: கல்லீரலில் சேர்ந்துள்ள கொழுப்பை நீக்கும் ‘4’  எளிய வழிகள்!

அவசர கருத்தடை மாத்திரை என்பது இவ்வாறான சூழ்நிலைக்காகவே பயன்படுத்தப்படுகிறது என்பதை நாம் மறந்துவிடுகிறோம். சில நகர்புற மருந்தகங்களில் இவ்வாறான கருத்தடை மாத்திரைகளையே விற்பதில்லை. ஏதோ ஒரு பாவச்செயல் போன்று கருதுகின்றனர்.

இந்த நிலை குறித்து 40 வயதுக்கு மேற்பட்ட மருந்தக ஊழியர்களிடம் கேட்டபோது, கருத்தடை மாத்திரைகள் எளிதாக கிடைத்தால் சமூக சீரழிவு அதிகரிக்கும், பாலியல் பலாத்காரங்கள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என்ற கருத்துகளை முன்வைக்கின்றனர்.

Contraceptive pills - Healthline

இது எப்படி உள்ளது என்றால் பாராசிட்டமால் விற்காமல் இருந்தால் யாரும் ஐஸ் கிரீம்களையோ, குளிர்பானங்களையோ பருக மாட்டார்கள். காய்ச்சல், சளி போன்ற உபாதைகளை முற்றிலும் தவிர்த்து விடலாம் என்று கூறுவது போன்று உள்ளது. மருந்தின் தேவையே அச்சூழ்நிலைகளை கையாள்வது தான் எனும்போது, அவ்வாறு ஒரு சூழ்நிலையே நடக்கக்கூடாது என்று மனிதர்கள் ஏன் எண்ணுகின்றனர்?

இதனால் பெண்கள் பலர் தமிழக அரசுக்கு மறைமுக கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர். அது என்னவென்றால், கருத்தடை மாத்திரைகளின் விற்பனையை சாதாரணமான ஒரு விஷயமாக்கும் வகையில் விழிப்புணர்வோ, அல்லது மருந்தகங்களுக்கு அறிவுறுத்தவோ செய்யவேண்டும் என்பது தான் அது. மேலும், பெண்களின் பாதுகாப்பை இப்படியும் உறுதி செய்யுங்கள் என பாதிக்கப்பட்ட பெண்கள் கோரிக்கையை முன்வைக்கின்றனர்.

மேலும் படிக்க | அடுத்த 5 மாதங்களுக்கு இலவச ரேஷன் வேண்டுமானால் இத பண்ணுங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News