வருடத்தில் சில மாதங்கள் பல மாற்றங்கள் நிகழும். அது மார்ச் மாதமாக இருந்தாலும் சரி, ஜனவரி மாதமாக இருந்தாலும் சரி. வரும் மாதம் அதாவது ஜூலையிலும் பல விதிகள் மாறுகின்றன. அதன்படி இன்னும் 10 நாட்களுக்குப் பிறகு, ஜூலை மாதம் தொடங்கயுள்ளது. உள்நாட்டு எரிவாயு விலையில் மாற்றம் இருக்கும். இதில் ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். எனவே இன்னும் 10 நாட்களுக்குப் பிறகு எந்த விதிகள் மாறும் என்பதை விரிவாக தெரிந்துக்கொள்ளுங்கள்.
பான் ஆதார் இணைப்பு
உங்கள் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டை இன்னும் இணைக்கவில்லை என்றால், செயலில் இறங்கவும். உங்களுக்கு 10 நாட்கள் உள்ளன. ஆதார் பான் எண்ணை இணைப்பதற்கான கடைசி தேதி ஜூன் 30 ஆகும். இதற்குப் பிறகு, ஆதார் பான் இணைக்கப்படாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். ஜூன் 30-ஆம் தேதிக்குள் இந்த வேலையைச் செய்தால், 500 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். அதுவே ஜூலை மாதம் முதல் அபராதத் தொகை 1000 ரூபாயாக உயரும்.
மேலும் படிக்க | 7th Pay Commission: LTC விதிகளில் முக்கிய மாற்றம், புதிய விதிகள் இதோ
டிமேட் கணக்கின் கேஒய்சி
நீங்களும் பங்குகளை வாங்கவும் விற்கவும் மற்றும் டிமேட் கணக்கு வைத்திருந்தால், இந்த செய்தி உங்களுக்கானது. ஜூன் 30 ஆம் தேதிக்குள் உங்கள் வர்த்தகக் கணக்கை கேஒய்சி செய்து முடிக்கவும், இல்லையெனில் உங்கள் கணக்கு தற்காலிகமாக மூடப்படலாம்.
கிரிப்டோகரன்சியில் டிடிஎஸ்
கிரிப்டோகரன்சிகளில் முதலீடு செய்பவர்கள் 30 சதவீத வரிக்குப் பிறகு மற்றொரு பின்னடைவைப் பெறப் போகிறார்கள். இப்போது கிரிப்டோவில் முதலீடு செய்பவர்களும் 1 சதவீத டிடிஎஸ் செலுத்த வேண்டும். நீங்கள் லாபம் ஈட்டினாலும் நஷ்டம் அடைந்தாலும் டிடிஎஸ் செலுத்த வேண்டும்.
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை
புதிய மாதத்தின் தொடக்கத்தில், அதாவது ஜூலை 1 ஆம் தேதி, எல்பிஜி எரிவாயு விலையும் அதிகரிக்கலாம். வீட்டு உபயோக மற்றும் வர்த்தக எல்பிஜி எரிவாயுவின் விலைகள் ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் நிர்ணயம் செய்யப்படுகின்றன. இதனால் மீண்டும் விலை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லியில் சொத்துக்களுக்கு வரி விலக்கு
இந்த தகவல் டெல்லிவாசிகளுக்கானது. டெல்லியில், ஜூன் 30க்குள் சொத்து வரியை டெபாசிட் செய்தால், 15 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும். ஜூன் 30க்குப் பிறகு இந்த தள்ளுபடி கிடைக்காது.
மேலும் படிக்க | கர்ப்பிணி பெண்களுக்கு பணி நியமனம் மறுப்பா, இந்தியன் வங்கிக்கு DCW நோட்டீஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR