நாட்டில் ஏராளமான மக்கள் தீபாவளியன்று (Diwali) கங்கா ஸ்நானம் அதாவது கங்கை குளியல் செய்கின்றனர். இதை மனதில் வைத்து IRCTC கங்கா ஸ்நான் அதாவது கங்கை குளியல் சுற்றுப்பயணத்தை அறிவித்துள்ளது. இந்த டூர் பேகேஜுக்கு Diwali Ganga Snan Special என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த டூர் பேகேஜுக்கான முன்பதிவு, IRCTC-ன் வலைத்தளமான https://www.irctctourism.com இலிருந்து செய்யலாம். மேலும், IRCTC-ன் சுற்றுலா வசதி மையம், மண்டல அலுவலகங்கள் மற்றும் பிராந்திய அலுவலகங்களிலிருந்தும் இந்த சுற்றுப்பயண பேக்கேஜை முன்பதிவு செய்யலாம்.
இந்த சுற்றுப்பயண பேக்கேஜ், “Bharat Darshan Special Tourist Train” பேக்கேஜின் கீழ் இயக்கப்படுகிறது. இந்த சுற்றுப்பயண பேக்கேஜின் கீழ், பயணிகள் கயா - வாரணாசி (Varanasi) மற்றும் அலகாபாத் ஆகிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். இந்த சிறப்பு ரயில் திருநெல்வேலி ரயில் நிலையத்திலிருந்து 11.11.2020 அன்று இரவு 00.05 மணிக்கு இயக்கப்படும். இந்த டூர் பேக்கேஜ் 7 இரவுகள் 8 நாட்களுக்கானதாகும்.
இந்த சிறப்பு ரயிலில் திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, விருத்தாசலம் ஜங்ஷன், விழுப்புரம், சென்னை எக்மோர், நெல்லூர், விஜயவாடா ஆகிய இடங்களில் ஏறலாம்.
இந்த டூர் பேக்கேஜுக்கான (Tour Package) கட்டணம் ஒருவருக்கு ரூ .7,575 ஆகும். இந்த டூர் தொகுப்பின் கீழ், பயணம் ஸ்லீப்பர் வகுப்பில் செய்யப்படும். பயணிகளுக்கு தினமும் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில், காலை தேநீர், காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு வழங்கப்படும். ஏசி அல்லாத ரயில்களில் பயணிகள் பயணம் செய்வார்கள். ரயிலில் பயணிகளின் பாதுகாப்பிற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இந்த அம்சங்கள் பேக்கேஜில் சேர்க்கப்படவில்லை
ஒரு பயணிக்கு வழியில் சலவை சேவை அல்லது மருந்துகள் தேவைப்பட்டால், பயணிகள் அதற்கு தனித்தனியாக பணம் செலுத்த வேண்டியிருக்கும். சுற்றுலா இடங்களில் நுழைவு கட்டணம் இருந்தால், அதை பயணிகள்தான் வழங்க வேண்டும். பயணிகளுக்கு டூர் கைடு தேவைப்பட்டால், அதற்கு அவர்கள் தனியாக பணம் செலுத்த வேண்டியிருக்கும்.
ALSO READ: தனியார் துறை பணியாளர்களுக்கு good news காத்திருக்கிறது: ஆய்வு
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR