ஒரு ஐஏஎஸ் அதிகாரிக்கு மாதம் எவ்வளவு சம்பளம் தெரியுமா?

ஒரு ஐஏஎஸ் அதிகாரி மாதம் அடிப்படை சம்பளமாக 50,000 முதல் 2,50,000 வரை பெறுகின்றனர். அவர்களின் பதவிக்கு ஏற்ப சம்பளம் மாறுபடும்.  

Written by - RK Spark | Last Updated : Apr 18, 2024, 09:53 PM IST
  • ஐஏஎஸ் பதிவு நாட்டில் முக்கிய பதிவு ஆகும்.
  • ஒரு மாவட்டத்தை நிர்வகிக்கும் உரிமை உள்ளது.
  • அடிப்படியில் மிக சவாலான பதிவும் ஆகும்.
ஒரு ஐஏஎஸ் அதிகாரிக்கு மாதம் எவ்வளவு சம்பளம் தெரியுமா? title=

ஐஏஎஸ் அதிகாரியாக ஆக வேண்டும் என்பது இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு இளைஞர்களின் கனவு ஆகும். ஏனெனில் மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் மதிப்புமிக்க வேலைகளில் ஒன்றாகும். ஒரு ஐஏஎஸ் அதிகாரிக்கு சமுதாயத்தில் மிக உயர்ந்த மதிப்பு மற்றும் மரியாதை இருக்கும் அதே வேளையில் நல்ல சம்பளமும் வழங்கப்படுகிறது.  அடிப்படை சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் பிற சலுகைகள் உட்பட ஐஏஎஸ் அதிகாரிக்கு பல நன்மைகள் உள்ளது.  UPSC தேர்வில் ஐஏஎஸ் கேடருடரில் இடம் பெறுபவர்களுக்கு கூடுதல் சலுகைகள் கொடுக்கப்படுகிறது. சம்பளம் அனைத்து ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் சமமான நிலையில் தொடங்கும். அதே சமயம் சீனியாரிட்டி மற்றும் பதவியின் அடிப்படை பொறுத்து சீரான முன்னேற்றம் இருக்கும்.  

மேலும் படிக்க | Bank Holidays: இன்று வங்கி விடுமுறையா? ஏப்ரலில் இன்னும் எத்தனை நாட்களுக்கு லீவு?

ஐஏஎஸ் அதிகாரியின் அடிப்படை சம்பளம் என்ன?

ஒரு ஐஏஎஸ் அதிகாரியின் சம்பளம் மத்திய ஊதியக் குழுவில் வரையறுக்கப்பட்ட ஊதிய நிலைகளின்படி வழங்கப்படுகிறது. ஒரு ஐஏஎஸ் அதிகாரியின் அடிப்படை சம்பளம் ரூ.56,100 ஆகும். சிவில் சர்வீசில் மிக உயர்ந்த பதவி வகிக்கும் கேபினட் செயலாளருர் ஒரு மாதத்திற்கு அடிப்படை சம்பளமாக ரூ.2,50,000 வரை பெறுகிறார். ஒரு ஐஏஎஸ் அதிகாரி பெறும் மொத்த ஊதியத்தின் ஒரு பகுதியே அடிப்படை சம்பளம் ஆகும். இதில் பல்வேறு கொடுப்பனவுகள் மற்றும் நன்மைகள் இடம் பெறுகின்றன. 

ஐஏஎஸ் அதிகாரி பெரும் கொடுப்பனவுகள்

ஐஏஎஸ் அதிகாரிகள் பல அலவன்ஸ்களை பெறுகின்றனர். இது அவர்களின் சம்பளத்தை கணிசமாக உயர்த்துகிறது. அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பொதுவான ஒன்று அகவிலைப்படி ஆகும். இது அடிப்படை சம்பளத்தின் ஒரு சதவீதமாகும். அதே போல அரசாங்க தங்குமிடம் இல்லாத அதிகாரிகளுக்கு HRA வழங்கப்படுகிறது. இது அடிப்படை சம்பளத்தில் 8% முதல் 24% வரை இருக்கும். ஐஏஎஸ் அதிகாரிகள் பணிகளுக்காக தங்கள் பயணச் செலவுகளை ஈடுகட்ட பயணப்படியைப் பெறுகிறார்கள். இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான பயணங்களும் அடங்கும். இந்த அகவிலைப்படி, HRA, பயணக்கொடுப்பனவுகள் தவிர ஐஏஎஸ் அதிகாரிகள் பல நன்மைகளை அனுபவிக்கிறார்கள்.

ஐஏஎஸ் அதிகாரி பெரும் கூடுதல் நன்மைகள்

ஒரு ஐஏஎஸ் அதிகாரிக்கு ஏதேனும் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்தால் அவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர். வேலை நோக்கங்களுக்காக அவர்களுக்கு வாகன ஓட்டுநர்களும் அரசு சார்பில் நியமிக்கப்படுகின்றனர். அதே போல ஓய்வூதிய பலன்கள் மற்றும் ஓய்வூதிய சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஒரு ஐஏஎஸ் அதிகாரியின் சம்பளம் பதவி உயர்வுகள் மூலம் அதிகரிக்கிறது. அதிகாரிகள் பதவி உயர்வுக்கு ஏற்ப, அவர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் அதிகரிக்கின்றன. ஐஏஎஸ் அதிகாரியின் பணி இந்திய அரசியில் சாசனத்தில் மிகவும் முக்கியமான மற்றும் சவாலான ஒன்றாகும். மாவட்ட நிர்வாகத்தை நிர்வகித்தல், அடிமட்ட அளவில் கொள்கைகளைச் செயல்படுத்துதல் மற்றும் நெருக்கடியான சூழ்நிலைகளைக் கையாளுதல் ஆகியவை இதில் அடங்கும். அர்ப்பணிப்பு, விடாமுயற்சி மற்றும் நிர்வாக புத்திசாலித்தனம் ஆகியவற்றின் கலவையைக் கோரும் மகத்தான பொறுப்புகளுடன் இந்த பதிவு உள்ளது.

மேலும் படிக்க | ஒவ்வொரு வங்கியிலும் எவ்வளவு மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News