தமிழ்நாட்டில் பெரும்பாலும் அனைவராலும் ரசித்து பார்க்கப்படும் நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் நான்காவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த சுவாரசியமான வாழ்க்கை விளையாட்டின் விதிமுறைகள் என்ன? சில பார்வையாளர்களுக்கு கூறப்படவில்லை தெரியுமா?
பிக்பாஸ் நிகழ்ச்சியின் அனைத்து விதிகளும் பார்வையாளர்களிடம் கூறப்படவில்லை. ஆனால், மிக முக்கியமான விதிகள் தெளிவாக உள்ளன. அவை என்ன? தெரிந்துக் கொள்ள ஆர்வமா? இதோ...
- பங்கேற்பாளர்கள் தமிழைத் தவிர வேறு மொழியில் பேசக்கூடாது.
- எந்த நேரத்திலும் இவர்கள் வீட்டு வளாகத்தை விட்டு வெளியேற முடியாது.
- தேவைப்பட்டால், அவசியம் ஏற்படும்போது அனுமதியுடன் வெளியே செல்ல அனுமதிக்கப்படலாம்.
- வேறு யாரிடமும் சொல்லக்கூடாதுஎன பிக்பாஸ் சொன்ன எதையும், பகிர்ந்துக் கொள்ளக்கூடாது.
- பகல் நேரத்தில் தூங்கக்கூடாது.
- தங்களுக்கான உணவை தாங்களே சமைத்து உண்ணவேண்டும்.
- பிக்பாஸ் வீட்டில் சமையல் வேலை, வீடு, கழிவறை, கழிப்பறையை சுத்தப்படுவதுவது என போட்டியாளர்கள் அனைவரும் இணைந்து வேலையை பகிர்ந்து செய்யவேண்டும்.
- வேலைகளை வீட்டிலிருப்பவர்கள் குழுவாக பிரிந்து செய்யவேண்டும்.
- போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் மைக்ரோபோனை எப்போதும் கழுத்தில் மாட்டி இருக்க வேண்டும்.
- அனைத்து போட்டியாளர்களும், ஒரே அறையில் போடப்பட்ட கட்டில்களிலில்தான் உறங்கவேண்டும்.
- நீச்சல் குளத்தை ஒரு சமயத்தில் 5 பேர் மட்டுமே பயன்படுத்துவேண்டும்.
- உடல்நிலையில் ஏதாவது கோளாறு ஏற்பட்டாலும், ஏதாவது தீவிரமான சிக்கல் ஏற்பட்டாலும், போட்டியாளர் வெளியேற்றப்படலாம்.
Also Read | கொசுத் தொல்லை தாங்கலையா? இதோ Simple & low-cost நிவாரணம்...
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR