வீட்டில் இருந்தபடியே ரூ.50,000 சம்பாதிக்க மத்திய அரசு அளிக்கும் சூப்பர் வாய்ப்பு

வீட்டில் அமர்ந்தபடியே பணம் ஈட்ட ஒரு மிகச்சிறந்த, பாதுகாப்பான வாய்ப்பு வந்துள்ளது. இதன் மூலம் நீங்கள் 50 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம். 

Written by - ZEE Bureau | Last Updated : Sep 17, 2021, 04:10 AM IST
வீட்டில் இருந்தபடியே ரூ.50,000 சம்பாதிக்க மத்திய அரசு அளிக்கும் சூப்பர் வாய்ப்பு

புதுடெல்லி: வீட்டில் அமர்ந்தபடியே பணம் ஈட்ட ஒரு மிகச்சிறந்த, பாதுகாப்பான வாய்ப்பு வந்துள்ளது. இதன் மூலம் நீங்கள் 50 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம். 

மோடி அரசாங்கம் ஒரு சிறப்புப் போட்டியை தொடங்கியுள்ளது. இதில் நீங்கள், வீட்டில் அமர்ந்தபடியே ஒரு லோகோ-வை டிசைன் செய்ய வேண்டும். உங்கள் வடிவமைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டால், நீங்கள் 50 ஆயிரம் ரூபாய் பரிசு பெறலாம். இந்தப் போட்டியில் பங்கேற்று இந்த பரிசை வெல்வதற்கான வழியை இங்கே காணலாம். 

செப்டம்பர் 17 வரை விண்ணப்பிக்கலாம்
இந்த போட்டி பற்றிய தகவல்கள் MyGov இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் விண்ணப்பிக்க, முதலில் நீங்கள் இந்திய அரசின் உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட லோகோ வடிவமைப்பு போட்டியின் ஒரு பகுதியாக வேண்டும். இந்த போட்டிக்கு விண்ணப்பிக்க, 2021 செப்டம்பர் 17, அதாவது இன்றே கடைசி நாளாகும். இந்தப் போட்டியில் வெற்றி பெறுபவருக்கு ரூ .50,000 பரிசாக வழங்கப்படும்.

போட்டியில் பங்கெடுக்க என்ன செய்ய வேண்டும்? 
ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஒருமனதாக இந்தியா வழங்கிய தீர்மானத்தை ஏற்றுக்கொண்டுள்ளது. அதன் கீழ் 2023 சர்வதேச தினை (Millets) ஆண்டாக அறிவிக்கப்பட்டது. 70 க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த திட்டத்தை ஆதரித்தன. இதைக் கருத்தில் கொண்டு, இந்தப் போட்டியை விவசாயம் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் நடத்துகிறது.

ALSO READ: மீண்டும் அதிர்ச்சி! பீகாரில் 2 மாணவர்களின் வங்கிக் கணக்கில் ரூ .900 கோடி டெபாசிட்

இந்த முக்கியமான தருணத்தைக் குறிக்கும் வகையில், 'சர்வதேச தினை ஆண்டு 2023' என்ற கருத்தில், இந்திய அரசு பொருத்தமான லோகோ மற்றும் ஸ்லோகன்/டேக்லைன்-ஐ வெளியிடும். இதற்காக கவர்ச்சிகரமான மற்றும் நேர்த்தியான லோகோ/டேக்லைனை உருவாக்க பொது மக்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு வந்துள்ளது. 

பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள கடினமான சூழ்நிலைகளில் தினை பயிர்களின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் வேளான் சாகுபடிக்கு அவற்றின் பயன்பாடு ஆகியவை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது.

யாருக்கு என்ன வெகுமதி கிடைக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள்

இதில், முதல் பரிசு பெறும் போட்டியாளருக்கு ரூ .50,000 மற்றும் போட்டியில் வெற்றி பெற்றதற்கான மின் சான்றிதழ் வழங்கப்படும். இதைத் தவிர இதில் பங்கேற்று நல்ல வடிவமைப்புகளை வழங்கும் மேலும் மூவருக்கும் பரிசு வழங்கப்படும். இவர்கள் அனைவருக்கும் மின் சான்றிதழ்கள் வழங்கப்படும். இவைதான் இந்த போட்டியின் மூன்று வகைகள்.

logo making prize

பதிவு செய்வது எப்படி?
- இந்த போட்டியில் பங்கேற்க, நீங்கள் முதலில் myGov.in போர்ட்டலுக்கு செல்ல வேண்டும்.
- போட்டிக்குச் சென்று 'லாக் இன் டு பார்டிசிபேட்' என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- இதற்குப் பிறகு நீங்கள் பதிவு விவரங்களை இங்கே நிரப்ப வேண்டும்.
- பதிவுசெய்த பிறகு, போட்டிக்கான உங்கள் பதிவை சமர்ப்பிக்க வேண்டும்.

ALSO READ: Money Saving Tips: உங்கள் பணத்தை சேமிக்க ஐந்து எளிய வழிகள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

 

 

More Stories

Trending News