Hair Care: உங்கள் முடி எண்ணெய்ப்பசையா இருக்கா? இந்த வீட்டு வைத்தியங்களை உபயோகித்து பாருங்கள்!

Oily Hair Home Remedies: எண்ணெய்ப்பசை தலையுடன் இருப்பவர்கள், இங்கே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியங்களை ட்ரை செய்து பாருங்கள்.

Written by - Yuvashree | Last Updated : May 17, 2023, 05:28 PM IST
  • எண்ணெய்ப்பசை முடியை நீக்க டிப்ஸ்.
  • வாழைப்பழ பேக், முல்தானி மட்டி ஆகியவற்றை உபயோகிக்கலாம்.
  • அதிக ஷாம்பூ உபயோகிப்பதை தவிர்க்கவும்.
Hair Care: உங்கள் முடி எண்ணெய்ப்பசையா இருக்கா? இந்த வீட்டு வைத்தியங்களை உபயோகித்து பாருங்கள்! title=

வெயில் காலம் வந்தாலே போதும் இந்த வியர்வையும் தலையில் எண்ணெய்ப்பசையும் கூடவே வந்து விடும். அதை தவிர்க்க இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறை தலைக்கு குளித்தாலும் சில சமயங்களில் ஒன்றும் உபயோகப்படாமல் போய் விடும். அதிலும் நீளமான முடி வைத்திருப்பவர்களின் பாடு..ஐய்யய்யோ அப்பப்பா..திண்டாட்டம்தான். எனவே,  அதுபோன்ற சமயங்களில் இந்த வீட்டு வைத்தியங்களை உபயோகித்து பாருங்கள். 

முல்தானி மட்டி Pack:

முல்தானி மட்டி, எண்ணெய்ப்பசை உள்ளவர்களின் தலைக்கு மிகவும் உபயோகரமான ஒன்று. இந்த packஐ எப்படி செய்ய வேண்டும் தெரியுமா?
இரண்டு ஸ்பூன் தயிர், ஒரு டீஸ்பூன் வெந்தைய பொடி மற்றும் 3 டீஸ்பூன் முல்தானி மட்டியை எடுத்து கொஞ்சம் தன்ணீர் விட்டு கலக்கி தலையில் தேய்க்க வேண்டும்.  இதை 20 நிமிடங்களுக்கு தலையில் ஊற வையுங்கள். வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை இதை உபயோகிக்கலாம். 

கற்றாழை ஜெல்:

எண்ணெய்ப்பசை தலையை போக்குவதற்கு கற்றாழையும் நல்ல மருந்து. கற்றாழையில் உள்ள ஜெல் போன்ற சாற்றை எடுத்து வெந்தையை பொடியுடன் மிக்ஸ் செய்து அதனுடன் கொஞ்சமாக லெமன் சாற்றினை கலக்கவும். இது, பொடுகு பிரச்சனையையும் தீர்க்கும்.

வாழைப்பழ pack:

பழுத்த வாழைப்பழத்தை உபயோகிப்பது தலையில் உள்ள எண்ணெய்ப்பசையை கண்டிப்பாக நீக்கும் என பலரால் நம்பப்படுகிறது. இதற்காக நீங்கள் செய்ய வேண்டியது, ஒரு வாழைப்பழத்தை நன்றாக நசுக்கி அதனுடன் தயிர் சேர்துக்கொள்ளுங்கள். இதை தலையில் தடவி 1 மணி நேரம் கழித்து ஹேர் வாஷ் செய்யுங்கள். எண்ணெய்ப்பசை தொல்லை ..இனிமேல் இல்லை. 

முட்டை Hair Pack:

முட்டையும் தலையில் உள்ள பொடுகு மற்றும் எண்ணெய் பசைய நீக்க உதவும் என உபயோகித்த பலர் தெரிவிக்கின்றனர். முட்டை hair pack எப்படி செய்ய வேண்டும் தெரியுமா?
ஒரு முட்டையின் வெள்ளை கரு, ஒரு ஸ்பூன் வெந்தைய பொடி ஆகியவற்றை சேர்த்து கலக்கிக்கொள்ளுங்கள். பிறகு, இரண்டு ஸ்பூன் தயிரை சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யுங்கள். 30 முதல் 40 நிமிடங்கள் வரை ஊறவைத்து தலைக்கு குளியுங்கள். 

யார் யார் இதை கவனமாக உபயோகிக்க வேண்டும்?

உடலில் இருமல், சளி, ஆஸ்துமா பிரச்சனை உள்ளோர் மேற்கூறிய விஷயங்களை கவனமாக உபயோகிக்கவும். ஏனென்றால் எலுமிச்சை, வெந்தையம், தயிர் போன்ற அனைத்துமே குளிர்ச்சியை ஏற்படுத்துபவை. அதே போன்று இயல்பான உடல் நலன் கொண்டோரும் இவற்றை உபயோகிக்கையில் உங்கள் உடலிற்கு இதெல்லாம் சேருமா என்பதை சரி பார்த்துக்கொள்ளுங்கள். 
 
அதிக ஷாம்புவை அவாய்ட் பண்ணுங்கள்:

எண்ணெய்ப்பசை பொருந்திய தலையில் அடிக்கடி பொடுகு வரும். இதை போக்குவதற்கு பலர் அதிகளவு ஷாம்புக்களை உபயோகிப்பர். ஆனல், அப்படி செய்யக்கூடாதுல். இதில், உச்சந்தலையில் அதிக எரிச்சலை ஏற்படுத்தும் ஆபத்து உள்ளது. 

கண்டீஷனர் உபயோகிக்கையில் கவனம் தேவை:

தலைக்கு குளித்த பிறகு கண்டீஷனர் உபயோகிப்பது நல்லதுதான். ஆனால் எண்ணெய்ப்பசை உள்ளவர்களின் தலைக்கு இது மிகப்பெரிய தீங்கை விளைவிக்கலாம். எனவே எப்போதாவது குறைவான அளவிலேயே கண்டீஷனரை உபயோகப்படுதுங்கள். நீங்கள் உபயோகப்படுத்தும் கண்டீஷனர் உங்கள் முடிக்கு ஏற்றாதுதானா என உறுதி படுத்திக்கொண்டு பின்பு உபயோகியுங்கள். 

மேலும் படிக்க | Hair Growth: ‘இது புதுசா இருக்கே..’ தினமும் உடற்பயிற்சி செய்தால் நன்கு முடி வளருமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News