EPFO Latest News: மாத சம்பளம் பெரும் ஊழியர்களுக்கு இது ஒரு முக்கியமான செய்தி இது. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அதன் சந்தாதாரர்களுக்கு இ-நாமினேஷனை கட்டாயமாக்கியுள்ளது.
ஊழியர்கள் இதைச் செய்யவில்லை என்றால், உங்கள் PF இருப்பைச் சரிபார்க்க முடியாது.
அதுமட்டுமின்றி, இதனால் கிடைக்கும் பல நன்மைகளையும் நீங்கள் பெற முடியாது. இ-நாமினேஷனின் மூலம், கணக்கு வைத்திருப்பவரின் குடும்பம் சமூக பாதுகாப்பை பெறுகிறது. EPFO இதைப் பற்றி தொடர்ந்து ட்வீட் செய்து வருகிறது. இந்த ட்வீட்களில், சந்தாதாரர்கள் EPF / EPS க்கு இ-நாமினேஷன் எவ்வாறு தாக்கல் செய்ய வேண்டும் என்பது பற்றி கூறப்பட்டுள்ளது.
EPF இ-நாமினேஷன் கட்டாயம்
நாமினியின் தகவலை வழங்குவதற்கு இ-நாமினேஷன் வசதியையும் EPFO வழங்குகிறது. இதில் இதுவரை சேராதவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இதற்குப் பிறகு, பரிந்துரைக்கப்பட்டவரின் பெயர், பிறந்த தேதி போன்ற தகவல்கள் ஆன்லைனில் புதுப்பிக்கப்படும்.
EPF கணக்கு வைத்திருப்பவர் இ-நாமினேஷன் (EPF/EPS நியமனம்) செய்ய வேண்டும் என்று EPFO அதன் சந்தாதாரர்களிடம் கூறியுள்ளது. இதைச் செய்வதன் மூலம், கணக்கு வைத்திருப்பவர் துரதிஷ்டவசமாக இறந்தால், பிஎஃப், ஓய்வூதியம் (இபிஎஸ்) மற்றும் காப்பீடு (இடிஎல்ஐ) தொடர்பான பணத்தைப் பெற நாமினி / குடும்ப உறுப்பினர்களுக்கு உதவி கிடைக்கும். இதன் மூலம், நாமினி ஆன்லைனிலும் கிளைம் செய்யலாம்.
7 லட்சம் ரூபாய்க்கான நன்மை கிடைக்கும்
EPFO உறுப்பினர்கள் (EPFO Subscribers) ஊழியர் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டத்தின் (EDLI இன்சூரன்ஸ் கவர்) கீழ் காப்பீட்டுத் தொகையைப் பெறுகிறார்கள். இத்திட்டத்தில், நாமினிக்கு அதிகபட்சமாக ரூ.7 லட்சம் காப்பீடு வழங்கப்படுகிறது. எந்தவொரு நாமினியையும் நியமிக்காமல் உறுப்பினர் இறந்தால், இறந்தவரின் கிளைமை செயல்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. ஆகையால் நாமினியை நியமிப்பது மிகவும் முக்கியமாகிறது. ஆன்லைனில் இந்த விண்ணப்பத்தை எவ்வாறு நிரப்புவது என்று பார்க்கலாம்.
ALSO READ | நெட்டே வேணாங்க…PF Balance ஐ இப்படி ஈசியா செக் பண்ணலாம்
EPF / EPS இல் இ-நாமினேஷன் செய்யும் செயல்முறை
1. EPF/EPS நாமினேஷனுக்கு, முதலில் EPFO இன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.epfindia.gov.in/-க்குச் செல்லவும்
2. இப்போது இங்கே Services பிரிவில் FOR EMPLOYEES என்பதைக் கிளிக் செய்து Member UAN/Online Service (OCS/OTCP) என்பதைக் கிளிக் செய்யவும்.
3. இப்போது ஒரு புதிய பக்கம் திறக்கும். இதில் UAN மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு லாக் இன் செய்யவும்.
4. Manage Tab-ன் கீழ் E-Nomination-ஐத் தேர்ந்தெடுக்கவும். இதைச் செய்தவுடன் திரையில், Provide Details டேப் தோன்றும். பின்னர் Save என்பதைக் கிளிக் செய்யவும்.
5. இப்போது ஃபாமிலி டிக்லரேஷனுக்கு Yes என்பதைக் கிளிக் செய்து, Add family details-ல் கிளிக் செய்யவும் (இங்கு நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட நாமினிகளைச் சேர்க்கலாம்.)
6. இங்கே மொத்தத் தொகைப் பங்கிற்கு, Nomination Details என்பதைக் கிளிக் செய்து, பின்னர் Save EPF Nomination என்பதைக் கிளிக் செய்யவும்.
7. இப்போது OTP ஐ உருவாக்க இங்கே E-sign ஐ கிளிக் செய்யவும். பின்னர் ஆதாரில் இணைக்கப்பட்ட பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் வந்த OTP ஐ உள்ளிடவும்.
8. இதைச் செய்த பின்னர், உங்கள் இ-நாமினேஷன் EPFO இல் பதிவு செய்யப்படும். இதற்குப் பிறகு நீங்கள் எந்த ஹார்ட் காபி ஆவணங்களையும் அனுப்ப வேண்டியதில்லை.
ALSO READ | PF Advance Withdrawal தொடர்பான முக்கிய செய்தி: தொற்று காலத்தில் பெரிய நிவாரணம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR