PF Advance Withdrawal தொடர்பான முக்கிய செய்தி: தொற்று காலத்தில் பெரிய நிவாரணம்

இதுவரை, பி.எஃப்-ல் பணம் எடுக்க பல நாட்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால் இப்போது சில மணிநேரங்களில் பிஎஃப்-ல் இருந்து உங்கள் கணக்கில்  பணம் வந்துவிடும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 15, 2022, 10:23 PM IST
  • பிஎஃப் பணத்தை எடுக்க ஆன்லைன் வசதியை அரசு வழங்கியது முதல், மக்களுக்கு பல வித நன்மைகள் கிடைத்துள்ளன.
  • EPFO, ​​கொரோனாவின் இரண்டாவது அலையின் போது நான் ரீஃபண்டபிள் அட்வான்சை பெற அனுமதித்துள்ளது.
  • இந்த சிறப்பு வசதி மருத்துவ அவசரநிலையின் கீழ் அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது.
PF Advance Withdrawal தொடர்பான முக்கிய செய்தி: தொற்று காலத்தில் பெரிய நிவாரணம் title=

PF Withdrawal:அனைத்து பணியாளர்களுக்கும் பிஎஃப் பணம் மிகவும் பயனுள்ள ஒரு தொகையாக அமைகின்றது. உங்கள் சம்பளத்தில் மாதா மாதம் கழிக்கப்படும் பிஎஃப் பணம், எதிர்பாராமல் வரும் பிரச்சனையின் போது பெரிய உதவியாக இருக்கிறது. பிஎஃப் பணத்தை எடுக்க ஆன்லைன் வசதியை அரசு வழங்கியது முதல், மக்களுக்கு பல வித நன்மைகள் கிடைத்துள்ளன. 

இதுவரை, பி.எஃப்-ல் பணம் எடுக்க பல நாட்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால் இப்போது சில மணிநேரங்களில் பிஎஃப்-ல் இருந்து உங்கள் கணக்கில்  பணம் வந்துவிடும்.

இப்போது நீங்கள் PF இலிருந்து இரட்டிப்பு பணத்தை எடுக்கலாம்

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, இப்போது ஊழியர்கள் தங்கள் பிஎஃப் கணக்கில் இருந்து இரட்டிப்பு பணத்தை எடுக்கலாம் என்று அரசாங்கம் கூறியுள்ளது. கொரோனா தொற்றைக் கருத்தில் கொண்டு, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பும் (EPFO) அதன் மட்டத்தில் பல வித ஏற்பாடுகளையும் வசதிகளையும் செய்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மாறிவரும் பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு, EPFO ​​ஊழியர்களுக்கு இரட்டிப்பாக பணம் எடுக்க அனுமதி அளித்துள்ளது.

ஓமிக்ரானின் அதிகரித்து வரும் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, EPFO, ​​கொரோனாவின் இரண்டாவது அலையின் போது நான் ரீஃபண்டபிள் அட்வான்சை பெற அனுமதித்துள்ளது. அதாவது, கொரோனாவால் உருவாகும் அவசர காலங்களில், ஊழியர்கள் தங்கள் EPF கணக்கில் இருந்து முன்பணத்தை (advance) எடுக்கலாம். ஆனால் இப்போது இந்த வசதி இரண்டு மடங்காக, அதாவது இரு முறை எடுக்கலாம் என விரிவாக்கப்பட்டுள்ளது. 

அதாவது, கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஊழியர்கள், இந்த தொகையை இரு முறை எடுக்க முடியும். முன்னர் இதை ஒரு முறைதான் எடுக்க முடிந்திருந்தது. 

இந்த சிறப்பு வசதி மருத்துவ அவசரநிலையின் கீழ் அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது. ஊழியர்கள் யாரும் பணத்துக்காக சிரமப்படக்கூடாது என்பது அரசாங்கத்தின் நோக்கமாக உள்ளது. ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சைக்கு பணம் இல்லை என்றால், அவர் தனது பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தை எடுத்து சிகிச்சை பெறலாம். இந்த சிறப்பு வசதியில், ஒரு மணி நேரத்திற்குள் பணம் ஊழியரின் (Employees) கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. அதன் முழு செயல்முறையையும் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

ALSO READ | New Wage Code: ஊழியர்களுக்கு பம்பர் செய்தி, PF இருப்பில் 66% அதிகரிப்பு விரைவில்
 

இதற்கான படிப்படியான செயல்முறையை இங்கு அறிந்து கொள்ளலாம்:
Step 1: இந்த வசதியைப் பெற, உறுப்பினர்கள் இ-சேவை போர்ட்டலான https://unifiedportal-mem.epiindia.gov.in/memberinterface/ -க்குச் செல்லவும் .
Step 2: உங்கள் UAN, கடவுச்சொல் மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு உங்கள் கணக்கில் லாக் இன் செய்யவும். 
Step 3: இப்போது ஆன்லைன் சேவைகளுக்குச் சென்று, உங்கள் கோரிக்கையைத் தேர்ந்தெடுக்கவும் (படிவம்-31, 19, 10C மற்றும் 10D).
Step 4: இப்போது உங்கள் திரையில் ஒரு புதிய வலைப்பக்கம் தோன்றும். அதில் உங்கள் பெயர், பிறந்த தேதி மற்றும் உங்கள் ஆதார் எண்ணின் கடைசி நான்கு இலக்கங்கள் போன்ற அனைத்து விவரங்களையும் உள்ளிட வேண்டும்.
Step 5: இப்போது இங்கே உங்கள் வங்கிக் கணக்கு எண்ணை உள்ளிட்டு 'verify' என்பதைக் கிளிக் செய்யவும்.
Step 6: உங்கள் திரையில் ஒரு பாப்-அப் தோன்றும், அதில் 'Certificate of Undertaking'-ஐ வழங்குமாறு கேட்கப்படும்.
Step 7: டிராப் டவுன் மெனுவில், நீங்கள் 'PF அட்வான்ஸ் (படிவம் 31)' என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
Step 8: டிராப் டவுன் மெனுவிலிருந்து பணத்தை எடுக்க, 'தொற்றுநோய் பரவல் (COVID-19)' என்ற படிவத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
Step 9: தேவையான தொகையை உள்ளிட்டு காசோலையின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலை பதிவேற்றி உங்கள் முகவரியை உள்ளிடவும்.
Step 10: இப்போது உங்கள் ஆதாருடன் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு முறை கடவுச்சொல் (OTP) அனுப்பப்படும், அதை உள்ளிடவும்.

ALSO READ | EPFO: UAN-ஐ எப்படி தெரிந்துகொள்வது? ஆக்டிவேட் செய்வது எப்படி? முழு செயல்முறை இதோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News