கொஞ்சம் அதிகமா make-up போட்டுடேன்... அதுக்கு Breakup'ஆ...?

முகத்திற்கு அதிக அளவில் ஒப்பனை செய்து முகப்பருக்களை மறைத்தார் என கூறி ஐரோப்பா பெண் ஒருவரை அவரது காதலர் பிரிந்துச் செய்துள்ளார்!

Written by - ZEE Bureau | Edited by - Mukesh M | Last Updated : Mar 7, 2019, 06:06 PM IST
கொஞ்சம் அதிகமா make-up போட்டுடேன்... அதுக்கு Breakup'ஆ...?

முகத்திற்கு அதிக அளவில் ஒப்பனை செய்து முகப்பருக்களை மறைத்தார் என கூறி ஐரோப்பா பெண் ஒருவரை அவரது காதலர் பிரிந்துச் செய்துள்ளார்!

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் பிரபல மருத்துவ விவாத வலைதளத்தில் இதுகுறித்து பதிவு ஒன்றை இட்டுள்ளார். இவரது பதிவின் படி இந்த இளம்பெண் 20-வயது உடையவர் எனவும், சமீபத்தில் காதலுருடன் சென்ற டேட்டிங்கு பின்னர்  அவரை பிரிந்தார் எனவும் தெரிகிறது.

குறிப்பிட்ட அந்த டேட்டின் முன்பு வரை இவரது முகத்தை சரியாக பார்க்காத இவரது வாழ்க்கை பகிர்வாளர், இந்த டேட்டிங் பின்பு சற்று கூர்ந்தே கவனித்துவிட்டார் போலும். முகத்தில் அதிக அளவு முகப்பருக்களை கொண்டுள்ள இளம்பெண், தனது பருக்களை அதிக அளவு ஒப்பனை செய்து மறைத்து வந்துள்ளார். இந்நிலையில் தங்களது 16-வது டேட்டின் தினத்திற்கு பின்பு அவரது வாழ்க்கை  துணைவர் இதனை காரணம் காட்டி பிரிந்து சென்றுள்ளார்.

மேலும் அதிக அளவு ஒப்பனை செய்து ஆண்களை கைக்குள் போட்டுக்கொள்ளும் வேலையினை நீ பார்த்து வருகின்றார் என இளம்பெண்ணை பார்த்து கூறியுள்ளார். இதனால் வேதனையடைந்த இந்த இளம்பெண், தனது பதிவில் தான் ஏன் அதிக அளவு ஒப்பனை செய்ததாக தெரிவித்துள்ளார்.

தனது முகத்தில் இருக்கும் முகப்பருக்கள் தன்னை வலிமையற்றவலாய் மாற்றி விடுவதாகவும், தன் முகத்தில் இருக்கம் பருக்களை பார்க்க முடியாமலும் தான் அதிக அளவில் முகத்திற்கு ஒப்பனை செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிட்டத்தட்ட 15 டேட்டிங் வரை பிரச்சனை ஏதும் வராத இந்த ஜோடிகளுக்குள், குறிப்பிட்ட டேட்டிங்க் அன்று ஒப்பனை இல்லாமல் தன் காதலர் முன் இந்த இளம்பெண் சென்று நின்றதே தற்போது பிரச்சனையாய் அமைந்துள்ளது.

இந்த விஷயத்தில் எனது தவறு ஏதும் இல்லை என நான் உணர்ந்துக்கொண்ட போதிலும், அதனை அவருக்கு புரிய வைக்க முடியாமல் போனதே எனக்கு மிகுந்த வருத்தம் அளிக்கிறது என அந்த இளம்பெண் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ஆண்கள் என்றாலும் சரி, பெண்கள் என்றாலும் சரி... முக பருக்கள் என்பது இயல்பான ஒன்று. வயது கூட அவர்களது உடலில் ஏற்படும் மாற்றங்களில் இதுவும் ஒன்று என்பதை புரிந்துக்கொள்ளாத என் காதலர் என்னை புரிந்து ஏற்றுக்கொண்டால் நிச்சையம் மகிழ்ச்சியடைவேன் என அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

More Stories

Trending News