திருப்பதியில் ஆக.,9 முதல் பக்தர்கள் செல்ல தடை!!

திருப்பதியில் ஆக.9 முதல் 17 ஆம் தேதி வரை மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை பக்தர்களுக்கு தடை!! 

Last Updated : Jul 14, 2018, 12:57 PM IST
திருப்பதியில் ஆக.,9 முதல் பக்தர்கள் செல்ல தடை!!  title=

திருப்பதியில் ஆக.9 முதல் 17 ஆம் தேதி வரை மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை பக்தர்களுக்கு தடை!! 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் உகாதி, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரமோற்சவம், வைகுண்ட ஏகாதசி ஆகிய முக்கிய தினங்களுக்கு முன் ஏழுமலையான் கோயில் சுத்தம் செய்யப்படுவது வழக்கமாகும். 

திருப்பதியில் வருகிற 17-ம் தேதி ஆனிவார ஆஸ்தானம் நடைபெற உள்ளதால், ஜூலை 9 ஆம் தேதி ஏழுமலையான் கோயில் முழுவதும் சுத்தம் செய்தனர். தற்போது பக்தர்களில் வருகை அதிகரித்து கொண்டே இருக்கும் நிலையில், திருப்பதி கோவில் நிர்வாகம் புதிய அறிவிப்பு ஒன்றை தெரிவித்துள்ளது. 

திருப்பதியில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பாபிஷேகம் ஆக.12 முதல் 16 வரை நடைபெற இருக்கிறது. இதையடுத்து, திருப்பதியிலிருந்து திருமலைக்கு வாகனம், மலைப்பாதை வழியாக பக்தர்கள் நடந்து செல்ல அனுமதி ரத்து செய்துள்ளது. 

மேலும், திருப்பதியில் ஆக.9 முதல் 17 ஆம் தேதி வரை மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை பக்தர்களுக்கு தடை என்றும் அறிவித்துள்ளது! 

 

Trending News