ரயிலில் சுயஇன்பத்தில் ஈடுபட்டவரை வீடியோ எடுத்த பெண்ணுக்கு அபராதம்!!

ரயில் பயணத்தின் போது சுயஇன்பம் செய்தவரை வீடியோ எடுத்த பெண்ணிற்கு ரூ.34 லட்சம் அபராதம்!!

Updated: Jul 4, 2019, 07:01 PM IST
ரயிலில் சுயஇன்பத்தில் ஈடுபட்டவரை வீடியோ எடுத்த பெண்ணுக்கு அபராதம்!!

ரயில் பயணத்தின் போது சுயஇன்பம் செய்தவரை வீடியோ எடுத்த பெண்ணிற்கு ரூ.34 லட்சம் அபராதம்!!

இந்த பறந்து விரிந்த உலகில் பல விசித்திரமான நிகழ்வுகள் நடந்துகொண்டு தான் இருக்கின்றனர். அதில், சில சம்பவம் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தும், இன்னும் சில சிரிப்பில் ஆழ்த்தும். இந்நிலையில், ரயிலில் சுயஇன்பம் ஈடுபட்டவரை வீடியோ எடுத்த பெண்ணிற்கு நீதிமன்றம் அபராதம் வித்தித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 37 வயதுடைய பெண் நாட்டாச்சா பிராஸ், இவர் பாரீஸில் இருந்து போய்டீயர்ஸ் வரை ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது அவர் அருகில் இருந்த இருக்கையில் ஒருவர் வந்து அமர்ந்துள்ளார். இதை தொடர்ந்து, அந்த நபர் கையை பேண்டிற்குள் விட்டு சுயஇன்பத்தில் ஈடுபட்டுள்ளார். சுய இன்பம் அனுபவிக்கும் போது பிராஸை பார்த்துக்கொண்டே இருந்துள்ளார். இதை சற்றும் எதிர்பாராத பிராஸ் நடக்கும் சம்பவத்தை தனது செல்போனில் வீடியோவாக ரெக்கார்டு செய்துள்ளார். 

இதையடுத்து, அங்கிருக்க தர்ம சங்கடமாகி ரெஸ்ட் ரூமிற்கு சென்றுள்ளார். ஆனால் அவர் செல்லும் போது அந்த நபரும் அவரை ரெஸ்ட் ரூமிற்கு பின் தெடார்ந்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த பிராஸ் இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் அதன் பின்பு பிராஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் அந்த நபர் சுயஇன்பம் எடுக்கும்போது தான் எடுத்த வீடியோவை அவரது முகத்தை மறைக்காமல் வெளியிட்டுள்ளார். 

இந்த வீடியோவை அவர் வெளியிட்டு சில மணி நேரங்களிலேயே வைரலாக பரவியது. கிட்டத்தட்ட 1 லட்சத்திற்கு அதிகமாக பார்வையாளர்களை பெற்றது. ஆனால், அதுவே அவருக்கு பிரச்சனையாகிவிட்டது. பொது இடத்தில் சுயஇன்பம் அனுபவித்ததற்காக அந்த நபருக்கு 1 ஆண்டு ஜெயில் தண்டனை அல்லது 15 ஆயிரம் யூரோக்கள் அபராதம் விதிக்கப்படலாம் என அந்நாட்டு சட்டம் சொல்கிறது. 

ஆனால், பிராஸ் அவர் சுயஇன்பம் அனுபவித்ததை வீடியோ எடுத்து அதில் அவரது முகத்தை மறைக்காமல் பொதுவெளியில் பகிர்ந்துவிட்டதால் அது தனி நபரின் பெயரை கெடுக்கும் செயலாக பார்க்கப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து ஏற்கனவே அவர் புகார் செய்துவிட்ட நிலையில் சமூகவலைதளங்களில் முகத்தை மறைக்காமல் பகிர்ந்தது அந்நாட்டு சட்டப்படி தவறு அதற்காக இவருக்கு ரூ.45 ஆயிரம் யூரோக்கள் வரை அபராதம் விதிக்கப்படும் என கூறப்படுகிறது. 

இதனால் பிராஸ் குற்றம் செய்தவருக்கு விதிக்கப்படவுள்ள தண்டனை விட அதை வீடியோ எடுத்து வெளியிட்டதால் அவருக்கு கிடைக்கும் தண்டனை பல மடங்காக இருக்கிறது. தற்போது பிராஸ் இந்த ஏன் வெளியிட்டோம் என வருத்தம் அடைந்துள்ளார்.