சென்னை: அண்மை காலத்தில் வெளிநாட்டில் இருந்து தங்கக் கடத்தல் செய்யும் போக்கு அதிகரித்துள்ளது. தொடர்ந்து பிடிபட்டாலும், எந்த தைரியத்தில் தங்கத்தை கடத்துகிறார்கள் என்பது புரியாத புதிர்.
துபாயில் இருந்து சென்னை திரும்பிய 8 விமானப் பயணிகள், தங்கள் உள்ளாடைகள் உட்பட பல விதங்களில் 9 கிலோ தங்கத்தை மறைத்து கொண்டு வந்தது கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
துபாயில் இருந்து தங்கக் கடத்தல் தொடர்ந்து அதிகரிப்பதை கருத்தில் கொண்டு சென்னை சுங்கத் துறை அதிகாரிகள் அதி தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றனர். வளைகுடா நாடான (Gulf country) துபாயில் இருந்து வந்த எட்டு பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
Also Read | Cyber Attack: 45 லட்சம் ஏர் இந்தியா பயணிகளின் Credit Card உள்ளிட்ட விவரங்கள் திருட்டு
அந்தப் பயணிகள் எமிரேட்ஸ் விமானம் ஈ.கே 544 (Emirates flight EK 544) வழியாக சென்னை வந்தனர். அவர்கள் பதற்றமாக இருப்பதைக் கண்ட அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுத்தது. அவர்களிடம் விசாரணை செய்தபோது, முன்னுக்கு பின்னாக பதிலளித்துவிட்டு விரைந்து செல்ல முயன்றனர்.
பயணிகளின் பொருட்களை பரிசோதித்ததில் பிளாஸ்டிக் பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்க பேஸ்ட், அவர்களின் ஜீன்ஸ் மற்றும் உள்ளாடைகளில் பதுக்கி வைத்திருந்த தங்கம் என தங்கக் கடத்தல் விவகாரம் அம்பலமானது.
அவர்களிடம் இருந்து 9 கிலோ அளவிலான 24 காரட் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது
Also Read | Benefits of Ragi: பாலை விட 3 மடங்கு கால்சியம் எதில் இருக்கிறது தெரியுமா?
இந்தத் தங்கத்தின் மதிப்பு4.5 கோடி ரூபாயாகும். பயணிகளிடம் இருந்து கண்டெடுக்கப்பட்ட தங்கம் கைப்பற்றப்பட்டு, சுங்க சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது.
கொரோனா பரவல் காரணமாக சென்னையில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. எங்கும் யாரும் சுதந்திரமாக சென்று வர முடியாது.
இந்த நிலையிலும் பயப்படாமல் தங்கக் கடத்தல் நடைபெறுவது அதிர்ச்சியளிப்பதாக மூத்த விமான சுங்க அதிகாரிகள் கூறுகின்றனர். அதோடு, சர்வதேச விமானங்களின் சேவையும் குறைவாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது.
Also Read | உடலை பொன்னிறமாக்கும் பொன்னாங்கண்ணி கண்களுக்கு ஒளியூட்டும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR