பொங்கல் முதல் இந்த 4 ராசிகளுக்கு பொங்கும் எதிர்காலம்! இந்த ராசிக்காரருக்கு அரசு வேலை

சூரியன் ஒரு ராசியில் இருந்து மற்றொன்றுக்கு மாறும்போது, ஒருவரது கர்மாக்கள் முடிவடையும் என்று நம்பப்படுகிறது. அதே வேளையில் அது சிலருக்கு பாதிப்பையும் ஏற்படுத்தலாம். சூரியனின் இந்த ராசி மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு பலன் தரும்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 8, 2022, 06:22 AM IST
பொங்கல் முதல் இந்த 4 ராசிகளுக்கு பொங்கும் எதிர்காலம்! இந்த ராசிக்காரருக்கு அரசு வேலை title=

புதுடெல்லி: புத்தாண்டில் சூரியனின் முதல் ராசி மாற்றம் ஜனவரி 14 அன்று நடக்க உள்ளது. தனுசு ராசியில் இருக்கும் சூரிய பகவான், ஜனவரி 14-ம் தேதி மகர ராசிக்குள் நுழைகிறார். ஜோதிடத்தின் பார்வையில் சூரியனின் ராசி மாற்றம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் அவர் அனைத்து ராசிகளுக்கும் அரசனாக கருதப்படுகிறார். 

சூரியன் ஒரு ராசியில் இருந்து மற்றொன்றுக்கு மாறும்போது, ஒருவரது கர்மாக்கள் முடிவடையும் என்று நம்பப்படுகிறது. அதே வேளையில் அது சிலருக்கு பாதிப்பையும் ஏற்படுத்தலாம். சூரியனின் இந்த ராசி மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு பலன் தரும்.

ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு சூரியனின் சஞ்சாரம் சாதகமாக இருக்கும். சூரியன் மாறியவுடன், அதிர்ஷ்டத்தின் கதவும் திறந்துவிடும். சூரியனின் சஞ்சாரத்தின் போது எந்த வேலை செய்தாலும் அது சாதகமான பலன்களையே கொடுக்கும்.  மதம் சார்ந்த பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும், இதனால் மனம் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். தினசரி காலையில் சூரிய நமஸ்காரம் செய்து வருவது சிறப்பான பலன்களைக் கொடுக்கும். சமூகத்தில் மரியாதை கூடும் என்பதோடு, வேலையில் முன்னேற்றம் ஏற்படும்.

ALSO READ | கேது பெயர்ச்சி 2022: ‘இந்த’ ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

சிம்மம்: சூரியனின் இந்த ராசி மாற்றம் சிம்ம ராசிக்காரர்களுக்கு பலன் தரும். பயணத்திற்குப் பிறகு பொருளாதார வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு (Promotion in Job) பற்றிய நல்ல செய்தி கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடியும். வியாபாரத்தில் சிக்கிய பணம் திரும்பக் கிடைக்கும். இதைத் தவிர, கடின உழைப்பின் முழுப் பலன்களையும் இந்த சமயத்தில் பெறுவீர்கள்.

விருச்சிகம்: சூரியனின் இந்த ராசி மாற்றம் உங்களின் அனைத்து வேலைகளுக்கும் சாதகமாக அமையும். உத்யோகத்தில் உங்களின் பணி பாராட்டப்படும். உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. தினசரி வருமானம் அதிகரிக்கும். இது தவிர பூமி சம்பந்தமான வேலைகளை செய்பவர்களுக்கு சூரியனின் சஞ்சாரத்தால் நன்மை உண்டாகும்.

மகரம்: தனுசில் இருந்து மகர ராசிக்கு மாறும் சூரியன், இந்த ராசிக்காரர்களுக்கு பூரண அருள் புரிவார். உத்யோகத்தில் வெற்றியும் மரியாதையும் அதிகரிக்கும். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் சூரியனைப் போலவே பிரகாசமாக இருக்கின்றன.

ALSO READ | பிறந்த கிழமை உங்கள் குணாதிசயத்தை எடுத்து சொல்லும்..!!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News