தொழிலாளர்களுக்கு நல்ல செய்தி: PM-SYM திட்டத்தின் கீழ் மாதம் ரூ.3000 ஓய்வூதியம்

இந்த திட்டத்தின் கீழ் ஓய்வூதியத்திற்கு அரசு உத்தரவாதம் அளிக்கிறது. இந்த திட்டத்தில், ஒரு நாளைக்கு வெறும் 2 ரூபாய் சேமித்தால் போதும், நீங்கள் ஆண்டுக்கு ரூ .36,000 ஓய்வூதியம் பெறலாம். இந்த திட்டத்தை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 25, 2021, 12:37 PM IST
தொழிலாளர்களுக்கு நல்ல செய்தி: PM-SYM திட்டத்தின் கீழ் மாதம் ரூ.3000 ஓய்வூதியம் title=

புதுடெல்லி: அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி. இனி இந்த தொழிலாளர்கள் முதுமையின் செலவுகள் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மான்தன் யோஜனா, அமைப்புசாரா துறையின் தொழிலாளர்களுக்கான ஒரு சிறந்த திட்டமாகும்.

இந்த திட்டத்தின் கீழ், சாலையோர விற்பனையாளர்கள், ரிக்ஷா இழுப்பவர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் இது போன்ற பல பணிகளில் ஈடுபட்டுள்ள அமைப்பு சாரா துறையுடன் தொடர்புடைய தொழிலாளர்களுக்கு தங்கள் முதுமையில் உதவி கிடைக்கும்.

இந்த திட்டத்தின் கீழ் ஓய்வூதியத்திற்கு அரசு உத்தரவாதம் அளிக்கிறது. இந்த திட்டத்தில், ஒரு நாளைக்கு வெறும் 2 ரூபாய் சேமித்தால் போதும், நீங்கள் ஆண்டுக்கு ரூ .36,000 ஓய்வூதியம் பெறலாம். இந்த திட்டத்தை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஒரு நாளைக்கு வெறும் 2 ரூபாய் டெபாசிட் செய்யதால் போதும்

இந்த திட்டத்தை தொடங்கும் போது, ​​நீங்கள் ஒவ்வொரு மாதமும் 55 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். அதாவது, 18 வயதில் ஒருவர் ஒரு நாளைக்கு சுமார் ரூ .2 சேமித்தால், அவர் ஆண்டுக்கு ரூ .36,000 ஓய்வூதியம் (Pension) பெறலாம். ஒரு நபர் 40 வயதிலிருந்து இந்தத் திட்டத்தை தொடங்கினால், அவர் ஒவ்வொரு மாதமும் 200 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். நீங்கள் 60 வயதிற்குப் பிறகு ஓய்வூதியம் பெறத் தொடங்குவீர்கள். 60 வயதான பிறகு, நீங்கள் மாதத்திற்கு ரூ .3000 அதாவது ஆண்டுக்கு ரூ .36,000 ஓய்வூதியம் பெறலாம்.

இந்த ஆவணங்கள் தேவைப்படும்

இந்தத் திட்டத்தைப் பயன்படுத்த, திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் நபர், சேமிப்பு வங்கி கணக்கு (Savings Account) மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும். நபரின் வயது 18 வயதுக்கு குறையாமலும், 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

ALSO READ: PM Kisan திட்டத்தில் இவர்களுக்கெல்லாம் நன்மை கிடைக்காது? உங்களுக்குக் கிடைக்குமா?

பதிவு செய்யும் செயல்முறை மிக எளிதானது

இந்த திட்டத்தில் பதிவு செய்ய, நீங்கள் திட்டத்தின் பொது சேவை மையத்தில் (CSC) பதிவு செய்ய வேண்டும். CSC மையத்தில் உள்ள போர்ட்டலில் தொழிலாளர்கள் தங்களை பதிவு செய்து கொள்ளலாம். இந்த திட்டத்திற்காக அரசாங்கம் ஒரு இணையதளத்தை உருவாக்கியுள்ளது. இந்த மையங்கள் மூலம் ஆன்லைனில் உள்ள அனைத்து தகவல்களும் இந்திய அரசுக்கு செல்லும்.

இந்த தகவலை கொடுக்க வேண்டும்

இந்த திட்டத்தில் பதிவு செய்ய, உங்கள் ஆதார் அட்டை, சேமிப்பு அல்லது ஜன் தன் வங்கி கணக்கு (Jan Dhan Bank Account) பாஸ்புக், மொபைல் எண் ஆகியவை தேவை. இது தவிர, ஒப்புதல் கடிதம் கொடுக்கப்பட வேண்டும். இது தொழிலாளிக்கு வங்கிக் கணக்கு இருக்கும் வங்கி கிளையிலும் கொடுக்கப்பட வேண்டும். இதன் மூலம், ஓய்வூதியத்திற்காக சரியான நேரத்தில் அவரது வங்கிக் கணக்கிலிருந்து பணம் கழிக்கப்படும்.

இவர்களுக்கு திட்டத்தின் பயன் கிடைக்கும்

பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மான்தன் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், 40 வயதிற்குட்பட்ட, முன்னர் எந்தவித அரசுத் திட்டத்தின் பயனையும் அடையாத, அனைத்து அமைப்புசாரா துறை ஊழியர்களும் பயன் பெறலாம். இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் நபரின் மாத வருமானம் 15 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தகது.

கட்டணமில்லா எண்ணிலிருந்து தகவல்களைப் பெறலாம்

இத்திட்டத்திற்காக, தொழிலாளர் துறை அலுவலகம், எல்ஐசி, இபிஎஃப்ஒ ஆகியவை தொழிலாளர் உதவி மையங்களாக மாற்றப்பட்டுள்ளன. இங்கு சென்று, தொழிலாளர்கள் திட்டம் பற்றிய தகவல்களைப் பெற முடியும். இத்திட்டத்திற்கான கட்டணமில்லா தொலைபேசி எண் 18002676888 ஐ அரசு வெளியிட்டுள்ளது. இந்த எண்ணிற்கு அழைத்து திட்டம் பற்றிய தகவல்களை பெறலாம்.

ALSO READ: Shocking: இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்யவில்லை என்றால் PM Kisan தவணை கிடைக்காது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News