நாடு முழுவதும் ரேஷன் வினியோக விதியை மாற்றிய அரசு, இனி இது இலவசம்

Free Ration Rules: பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாட்டை தடுக்கும் வகையில், நாடு முழுவதும் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஒவ்வொரு மாதமும் இலவச செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க மத்திய அரசு ஏற்பாடுகளை செய்துள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 14, 2023, 01:38 PM IST
  • ரேஷன் கடை அரிசியில் வருகிறது மாற்றம்.
  • விரைவில் அறிமுகமாகிறது செறிவூட்டப்பட்ட அரிசி.
  • சத்துணவு திட்டத்திலும் இந்த அரிசி பயன்படுத்தப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் ரேஷன் வினியோக விதியை மாற்றிய அரசு, இனி இது இலவசம் title=

ரேஷன் கார்டு லேட்டஸ்ட் ரூல்ஸ்: நீங்களும் அரசிடம் இருந்து இலவச ரேஷன் வாங்கினால், ரேஷன் விநியோக விதியை மோடி அரசு மாற்றியுள்ளது. இதைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம், எனவே அடுத்த முறை நீங்கள் ரேஷன் பெறச் செல்லும்போது, ​​​​புதிய விதி தொடர்பான முழுமையான தகவல்கள் உங்களிடம் இருக்க வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாட்டை தடுக்கும் வகையில், நாடு முழுவதும் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஒவ்வொரு மாதமும் இலவச செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க மத்திய அரசு ஆயத்தங்களை மேற்கொண்டுள்ளது. இதற்காக அனைத்து மாநிலங்களின் ரேஷன் விநியோக மையங்களுக்கும் செறிவூட்டப்பட்ட அரிசி சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

இந்த அரிசியில் சத்துக்கள் நிறைந்துள்ளன
செறிவூட்டப்பட்ட அரிசியை உண்பவருக்கு இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி12 ஆகியவை மிகுதியாக கிடைக்கும். ஊட்டச்சத்து கூறுகள் நிறைந்த இந்த அரிசி சாதாரண அரிசியைப் போலவே சுவையாக இருக்கும். அதன் சமையல் முறையும் பாரம்பரியமானது. இந்த அரிசியில் ஊட்டச்சத்துக்கள் அதிகம். உண்மையில், ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதிப்படும் குழந்தைகளுக்கு சிறந்த உணவை வழங்குவதே அரசின் கவனம்.

மேலும் படிக்க | 7th Pay Commission: அடி தூள்... மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 ஜாக்பாட் அறிவிப்புகள்!!

ஒவ்வொரு மாதமும் இலவச கோதுமை அரிசி வழங்கப்படும்
மத்திய அரசின் மோடி அரசின் உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 2023 டிசம்பர் வரை ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஒவ்வொரு மாதமும் இலவச கோதுமை மற்றும் அரிசி வழங்கும் திட்டம் உள்ளது. இதன் கீழ், தகுதியுள்ள குடும்பத்திற்கு மாதந்தோறும் ஒரு யூனிட்டில் மூன்று கிலோ அரிசி மற்றும் இரண்டு கிலோ கோதுமை வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர, அந்த்யோதயா யோஜனா திட்ட பயனாளிகளுக்கு ஒவ்வொரு ரேஷன் கார்டிலும் 21 கிலோ அரிசி மற்றும் 14 கிலோ கோதுமை இலவசமாக வழங்கப்படுகிறது.

மத்திய அரசின் மோடி அரசின் உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 2023 டிசம்பர் வரை ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஒவ்வொரு மாதமும் இலவச கோதுமை மற்றும் அரிசி வழங்கும் திட்டம் உள்ளது. இதன் கீழ், தகுதியுள்ள குடும்பத்திற்கு மாதந்தோறும் ஒரு யூனிட்டில் மூன்று கிலோ அரிசி மற்றும் இரண்டு கிலோ கோதுமை வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர, அந்த்யோதயா யோஜனா திட்ட பயனாளிகளுக்கு ஒவ்வொரு ரேஷன் கார்டிலும் 21 கிலோ அரிசி மற்றும் 14 கிலோ கோதுமை இலவசமாக வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க | Same Sex Marriage: மத்திய அரசையும் மீறி சட்டப்பூர்வமாகுமா தன்பாலின திருமணம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News