ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் புதிய செயலிகளை வடிவமைக்கவும் மற்றும் தற்போது உள்ள உள்நாட்டு செயலியை மேம்படுத்தவும் தகவல் தொழிநுட்ப துறையினருக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்..!
இந்தியாவில், 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையில் தற்போது சுயசார்பாக செயலிகளை வடிவமைப்பதை ஊக்குவிக்கும் வகையில் பரிசுத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் ஆத்ம நிர்பார் பாரத் (Bharat Apps) என்ற அடிப்படையில் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. அந்த வகையில், சுயசார்ப்பு இணைய மென்பொருளை வடிவமைக்க தொழிநுட்பத் துறையினர் மற்றும் இளைஞர்களுக்ளிடையே சவால்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.
அடல் இனோவேஷன் மிஷன் (Atal Innovation Mission) மற்றும் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இணைந்து இந்த முயற்சியை மேற்கொள்கிறது. ஆத்ம நிர்பார் பாரத் செயலி தயாரிப்பின் முக்கிய நோக்கம், இந்தியாவில் உருவாக்கப்படும் மென்பொருளின் தேவையை அதிகரிக்கவும், உலக தரத்தில் உயர்த்தவும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், முதல் கட்டமாக தற்போதுள்ள இந்திய மென்பொருளை (APP) மேம்படுத்தவும், இரண்டாவதாக புதிய செயலிலை உருவாக்கும் வகையில் சவால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சவாலில் தொழில்நுட்பத் துறையினர் ஆர்வமுடன் பங்கேற்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தியள்ளார். முதல் கட்ட நடைமுறையில் பல சிறப்பு பரிசுகளும் மற்றும் ரொக்கமும் வழங்கப்படும் என்றும், இரண்டாம் கட்டமாக வளர்ச்சி, முன்மாதிரி, சந்தை செயல்திட்டம் போன்றவை குறித்து பயிற்சியளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தொழில்நுட்ப தீர்வுகளை கண்டறிய உதவும் தயாரிப்புகளை உருவாக்க வழிகாட்டுதலும் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சுயசார்ப்பு செயலி உருவாக்க திட்டத்தில், ஆன்லைன் வழி கற்றல், சமூக வலைத்தளங்கள், பொழுதுபோக்கு, உடல் நலம் சார்ந்த விஷயங்கள், வேளாண்மை மற்றும் நிதி தொழில்கள், செய்தி, மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளில் தளங்களில் செயலிகளை மேம்படுத்த பரீசிலனை செய்யப்பட்டுள்ளது. இந்த சவாலில் பங்கேற்க வரும் 18 ஆம் தேதி கடைசி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு வழிகாட்ட அரசு தரப்பில் முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
READ | Hydroxychloroquine, HIV மருந்துகள் COVID-19 பரிசோதனைகளில் பயன்படுத்தப்படாது: WHO
இந்த செயலியை உருவாக்கும் சவாலில் வெற்றி ( 8 பிரிவுகளில்) பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ.20 லட்சமும், 2 ஆம் பரிசாக ரூ.15 லட்சமும், 3 ஆம் பரிசாக ரூ.10 லட்சமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 8 முக்கிய பிரிவுகளில் உட்பிரிவுகள் தனியாக பிரிக்கப்பட்டு அவற்றிற்கும் பரிசு வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
உட்பிரிவுகளில் வெற்றி பெறுவோருக்கும் முதல் பரிசாக ரூ.5 லட்சமும், 2 ஆம் பரிசாக ரூ.3 லட்சமும், 3 ஆம் பரிசாக ரூ.2 லட்சமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டியில் இந்தியாவை சேர்ந்தவர்கள் மட்டுமே கலந்துகொள்ளமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டியில் கலந்து கொள்ள https://innovate.mygov.in/app-challenge/ என்ற இணையத்தில் பதிவு செய்ய வேண்டும்.