உலகின் 100 சிறந்த இடங்களின் பட்டியலில் படேலின் சிலை, சோஹோ ஹவுஸ்!

உலகின் 100 சிறந்த இடங்களின் பட்டியலில் படேலின் சிலை, மும்பையில் உள்ள சோஹோ ஹவுஸ் ஆகியனவை இடம்பெற்றுள்ளது!!

Updated: Aug 28, 2019, 01:25 PM IST
உலகின் 100 சிறந்த இடங்களின் பட்டியலில் படேலின் சிலை, சோஹோ ஹவுஸ்!
Representational Image

உலகின் 100 சிறந்த இடங்களின் பட்டியலில் படேலின் சிலை, மும்பையில் உள்ள சோஹோ ஹவுஸ் ஆகியனவை இடம்பெற்றுள்ளது!!

குஜராத்தின் 597 அடி உயரமுள்ள படேலின் ஒன்றுமை சிலை மற்றும் மும்பையின் சோஹோ ஹவுஸ் டைம் இதழ் வெளியிட்டுள்ள உலகின் மிகச்சிறந்த 100 இடங்கள் 2019 இன் இரண்டாவது  பட்டியலில் இடம் பெற்றுள்ளது. 
 
கடந்த ஆண்டு குஜராத்தில் நர்மதை ஆற்றின் அருகே ஒற்றுமையின் அடையாளமாக அமைக்கப்பட்டுள்ள 597 அடி உயரம் கொண்ட இந்தியாவின் இரும்பு மனிதன் சர்தார் வல்லாபய் பட்டேலின் சிலை இடம்பெற்றுள்ளது. உலகின் உயரமான சிலை என வர்ணிக்கப்படும் இந்த சிலை, சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரும், முதல் துணை பிரதமருமான படேல் நினைவாக அமைக்கப்பட்டது.

கடந்த 1947 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் துணை பிரதமராக இருந்த சர்தார் வல்லபாய் படேலுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஏராளமான சுற்றுலா பயணிகளை இந்த சிலை ஈர்த்து வருவதாக டைம்ஸ் பத்திரிக்கை பாராட்டி உள்ளது. டைம்ஸ் பத்திரிக்கையின் இந்த தகவலுக்கு பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இதுகுயர்த்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டரில், டைம்ஸ் பத்திரிக்கையின் உலகின் 100 சிறந்த இடங்களில் ஒற்றுமை சிலையும் இடம்பெற்றுள்ள செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன் மிக அதிகபட்சமாக ஒரே நாளில் 34,000 பேர் இந்த சிலையை பார்த்துச் சென்றுள்ளனர். புகழ்பெற்ற சுற்றுலா தலங்களின் பட்டியலில் இந்த சிலையம் இணைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

இந்த சிலை குறித்து டைம்ஸ் பத்திரிக்கையின் அதிகாரப்பூர்வ விளக்கத்தில்; "கடந்த இலையுதிர்காலத்தில் வெளியிடப்பட்ட உலகின் மிக உயரமான சிலை, நர்மதா ஆற்றில் உள்ள ஒரு தீவில் 597 அடி உயரத்தில் உள்ளது. இது மேற்கு இந்திய மாநிலமான குஜராத்தில் உள்ள சர்தார் சரோவர் அணையின் மேல் அமைந்துள்ளது, பார்வையாளர்களுக்கு அதன் மார்பு பகுதியில் இருந்து அருகிலுள்ள மலைத்தொடர்களின் காட்சிகளைக் காண வாய்ப்பு அளிக்கிறது" என குறிப்பிட்டுள்ளது.